வெயில் வந்தாச்சு! பெண்களுக்கு சிறுநீர் கழிக்கும்போது கடுக்கிறதா? தீர்வுக்கு டாக்டர் தீபாவின் டிப்ஸ்!
வெயில் காலத்தில் பெண்கள் சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்படுவது ஏன்- டாக்டர் தீபா விளக்கம்
சென்னை: வெயில் காலத்தில் பெண்கள் சிறுநீர் கழிக்கும் போது பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சலை போக்க அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஒய் தீபா ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
Recommended Video
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: கோடை காலம்தொடங்கிவிட்டது. எல்லாருக்கும் உடலில் உள்ள நீர் சத்து குறைந்து வருகிறது. அதிலும் பெண்களுக்கு இந்த கோடை காலத்தில் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன.
குறிப்பாக பிறப்புறுப்பில் சிறுநீர் கழித்தவுடன் எரிச்சல் அதிகமாக இருக்கும். அந்த பகுதியே வறண்டு போயிருக்கும். எப்போது சிறுநீர் கழித்தாலும் அந்த இடத்தில் கடுக்கிறது என சொல்வார்கள். இது எதனால் வருகிறது என்றால் உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது உடலில் ஆங்காங்கே எரிச்சல்கள் இருக்கும். அமிலத் தன்மை அதிகரிக்கும்.

பிறப்புறுப்பு
இதனால் பிறப்புறுப்பில் பாக்டீரியல் தொற்று, ஈஸ்ட் தொற்று என பல தொற்றுகள் ஏற்படும். உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்து உடலில் இது போன்ற தொற்றுகள் அதிகரிக்கும். பால்வினை நோய் இருப்பதால்கூட சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். இன்னும் சிலருக்கு தனக்கு சர்க்கரை நோய் இருப்பதே தெரியாமல் பிறப்புறுப்பில் அரிப்பு எரிச்சல் இருக்கும்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவம்
இது போன்ற பிரச்சினைக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தில் என்ன தீர்வு என்பதை பார்க்கலாம். ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் கடுக்காய் பவுடர் போட்டு கொதிக்க வைத்து நாம் உள்ளுக்குள் குடிக்கலாம். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் எடுத்து அதில் கடுக்காயை இடித்து போட்டு அதை வெதுவெதுப்பாக கொதிக்க வைத்து இரவு நேரங்களில் பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும்.

நல்ல தண்ணீர்
காலையில் எழுந்ததும் நல்ல தண்ணீரில் கல் உப்பு போட்டு அது கரைந்தவுடன் பிறப்புறுப்பை சுத்தம் செய்ய வேண்டும். அந்த இடத்தில் இருக்கும் பாக்டீரியல், பூஞ்சை தொற்று விரைவில் குணமடைய இந்த உப்பு தண்ணீரால் சுத்தம் செய்வது உதவும். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 3 முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

உஷ்ணம்
வெயில் அதிகமாகி வருவதால் நீராகாரங்கள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். மோர், தயிர், தேன் உள்ளிட்ட ப்ரோபயாடிக்ஸை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை உடலுக்குள் நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் அதிகரிக்கும். உடலில் ஆங்காங்கே வறண்டு போயிருந்தால், மோருடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து சாப்பிட்டால் அது உடலில் உள்ள உஷ்ணத்தை குறைக்கும். உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

இரு நாட்கள்
வாரத்தில் இரு நாட்கள் எண்ணெய் தேய்த்து தலைக்குளித்தல் அவசியமாகும். உள்ளாடைகள் சுத்தமான பருத்தியினால் செய்யப்பட்டதாக இருத்தல் வேண்டும். அவற்றை வெயிலில் காய வைக்க வேண்டும். வீட்டுக்குள்ளேயே காய வைத்தால் அதில் பாக்டீரியா, பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும். தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் நாமும் வெயிலில் நின்றால் உடலுக்கு ஆன்டி பாக்டீரியல் எஃபெக்ட் கிடைக்கும். அது போல் டர்க்கி டவலை நன்றாக நனைத்து நாம் வயிற்று பகுதியில் வைத்தால் வலி இருக்காது, சிறுநீர் கழிக்கும் போது கடுத்து போகாது. இவ்வாறு ஒய் தீபா தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications