சிறுநீரகத்தில் கற்களால் அவதியா.. கவலையை விடுங்க.. "இந்த" ஜூஸை தினமும் குடிங்க.. டாக்டர் ஒய் தீபா
சென்னை: சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மருத்துவமனை டாக்டர் ஒய் தீபா விளக்கியுள்ளார்.
Recommended Video
சிறுநீரகத்தில் கற்கள் சேர்ந்து கொண்டால் அது பெரிதாக பெரிதாக வலியை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் போதும் வலியை கொடுக்கும். சில நேரங்களில் மருந்து, மாத்திரைகளில் சரியாகும். சில நேரங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
இதுபோன்று சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாமல் தடுப்பது குறித்தும் ஏற்கெனவே கற்கள் இருந்தால் அதை நீக்குவது குறித்தும் சிகிச்சை முறைகளை டாக்டர் தீபா வழங்கியுள்ளார்.

டாக்டர் தீபா
இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு டாக்டர் ஒய் தீபா அளித்த பேட்டியில் சிறுநீரகத்தில் உள்ள கற்களை எப்படி நீக்குவது என்பதை பார்க்கலாம். நிறைய தண்ணீரை குடிப்பதன் மூலமாக முதலில் சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கலாம். ஒரு நாளைக்கு 3 முதல் மூன்றரை லிட்டர் தண்ணீர் கொடுப்பது அவசியம். நீராகாரங்களாக நிறைய சேர்க்கும் போது சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படாது.

சிறுநீரக கற்கள்
இந்த சிறுநீரக கற்கள் எதனால் வருகிறது என்றால் கால்சியம், ஆக்ஸலேட் ஆகிய இரு உப்புகளும் ஒன்று சேரும் போது நமக்கு சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. இதை எப்படி தடுப்பது , அந்த கற்களை எப்படி கரைப்பது என்றால் விட்டமின் சி இருக்கக் கூடிய எலுமிச்சை, ஆரஞ்ச், சாத்துக்குடி ஆகியவற்றில் சிட்ரிக் ஆசிட் இருக்கிறது.

சிட்ரிக் அமிலம்
இந்த சிட்ரிக் ஆசிட் சிட்ரேட்டாக இருக்கும் போது கால்சியமும் ஆக்ஸலேட்டும் ஒன்று சேராமல் தடுப்பதற்கு இது உதவுகிறது. இதனால் கற்கள் ஏற்படாது. ஏற்கெனவே சிறுநீரகத்தில் கற்கள் இருப்பவர்கள் எலுமிச்சை ஜூலை ஒரு நாளைக்கு 3 முதல் 4 தடவை எடுத்து கொண்டே வந்தால் சிறுநீரக கற்கள் கரைத்துவிடும்.

துளசி இலைகள்
ஆன்டி இன்ஃபிளமேட்டரி எஃபெக்ட் இருப்பதால் 10 முதல் 20 துளசி இலைகளை கொதிக்க வைத்து தேன் கலந்து குடிப்பது மிகவும் நல்லது. அடுத்தது மாதுளை பழத்தில் துவர்ப்பு சுவையுடன் கூடியதை ஜூஸ் செய்து குடித்தால் சிறுநீரக கற்கள் நீங்கும். இளநீர், தர்ப்பூசணி, மோர் உள்ளிட்ட நீராகாரங்கள் நிறைய எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. இவ்வாறு டாக்டர் தீபா தெரிவித்தார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications