Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முகத்திற்கு மஞ்சள் பூசி குளிக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்.. எக்ஸ்பர்ட் தரும் விளக்கம்

முகத்திற்கு மஞ்சள் பூசினால் முகப்பரு உள்ளிட்ட பிரச்சினைகள் வராது- டாக்டர் ஒய். தீபா

Subscribe to Oneindia Tamil

சென்னை: முகத்திற்கு மஞ்சள் பூசினால் முகப்பரு உள்ளிட்ட பிரச்சினைகள் வராது என அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ஒய். தீபா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    முகத்திற்கு மஞ்சள் பூசி குளிக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்..!

    மஞ்சளை முகத்திற்கு பூசினால் முகம் மெச்சூரிட்டி அடைந்தது போல் இருக்கும் என சிலர் எண்ணி அந்த அருமையான மருத்துவ குணம் கொண்ட ஒன்றை சிலர் பயன்படுத்த தயங்குகிறார்கள். அத்துடன் வெயில் காலத்தில் முகத்தில் மஞ்சள் பூசினால் எரியும் என்பதும் சிலருடைய எண்ணமாக இருக்கிறது. இதற்கான விளக்கத்தை எக்ஸ்பர்ட்டிடம் கேட்டோம்.

    இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் இயற்கையான முறையில் சரும அழகை எப்படி பராமரிக்கலாம் என பலருக்கும் விழிப்புணர்வு வந்துவிட்டது. எத்தனைதான் விலை மதிப்புள்ள அழகு சாதனபொருட்கள் வந்தாலும், ரசாயன பொருட்கள் கிடைத்தாலும் இயற்கையை விரும்பும் நிலை உள்ளது.

    மஞ்சள்

    மஞ்சள்

    ஆனால் நிறைய பேருக்கு மஞ்சளை முகத்தில் போட்டால் மெச்சூரிட்டி ஏற்படும் என நிறைய பேர் சொல்கிறார்கள். அதனால் மஞ்சளை முகத்திற்கு போடுவது சரியா தவறா என்பதை பார்ப்போம். மஞ்சளில் ஆன்டி மைக்ரோபியல். ஆன்டி இன்ஃப்ளமேட்டரி, ஆன்டி ஃபங்கல், ஆன்டி வைரல் எபெர்க்ட் ஆகியன இருக்கின்றன.

    மஞ்சளில் இருக்கும் குர்குமின்

    மஞ்சளில் இருக்கும் குர்குமின்

    அந்த மஞ்சளில் இருக்கும் குர்குமின் அந்த அளவுக்கு மருத்துவ குணமுடையது. மஞ்சளை நமது சமையல்களில் சேர்த்து வருகிறோம். ஆனால் முகத்தில் போடும் போது நாம் செய்யும் தவறுகள் என்ன என்பதை பார்க்கலாம். முகத்தை தண்ணீரில் கழுவி மஞ்சளை போட்டுவிட்டு அது நீண்ட நேரம் முகத்தில் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அப்ளை செய்துவிட்டு உடனே கழுவி விடலாம்.

    கழுவி விடலாம்

    கழுவி விடலாம்

    சிலர் மஞ்சளை பூசிவிட்டு அதை கழுவிவிட்டு அதன் பிறகு சோப்பு போட்டு பேஸ்வாஷ் செய்வார்கள். அது தவறு. இது போல் நாம் செய்தால் தோலில் உள்ள சிறிய துளைகள் எல்லாம் அடைத்துக் கொள்ளும். மஞ்சளில் இருக்கும் குர்குமின் நமது தோலில் உள்ள துளைகளை திறந்து முகத்தை ஹைட்ரேட் செய்து, மைக்ரோபியல் எஃபெக்ட்டை கிரியேட் செய்யும்.

    வினிகர்

    வினிகர்

    முகப்பருக்கள், வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்சினைகளுக்கு மஞ்சள் ஒரு நல்ல தீர்வாக இருக்கும். சோரியாசிஸ் உள்ளிட்ட நோய்களுக்கு கூட மஞ்சளுடன் வேப்பிலையை சேர்த்து அப்ளை செய்து வந்தால் சருமம் பொலிவடையும். சிலர் மஞ்சளுடன் தயிர், லெமன், ஆப்பிள் வினிகர் இப்படி நிறைய சேர்ப்பார்கள். எல்லாவற்றுடனும் இல்லாமல் ஏதாவது ஒரு பொருளுடன் கலந்து முகத்திற்கு போட்டால் அது மிகவும் எஃபெக்ட்டிவ்வாக இருக்கும்.

    மஞ்சள் முகம்

    மஞ்சள் முகம்

    எலுமிச்சையுடன் சேர்த்து மஞ்சளை முகத்தில் அப்ளை செய்தால் இறந்த செல்களை அகற்றும். தயிருடன் மஞ்சளை சேர்த்து அப்ளை செய்யும் போது அந்த ஸ்கின்னுக்கு பொலிவையும் கண்டிஷனிங் எஃபெக்ட்டை தரும். ரோஸ் வாட்டருடன் கலந்து மஞ்சளை முகத்தில் தேய்த்தால் கூலிங் எஃபெக்ட்டை கொடுக்கும். சந்தனத்துடன் மஞ்சளை சேர்க்கும் போது டேனிங்கை நீக்கி முகத்தை பொலிவாக்கும்.

    கஸ்தூரி மஞ்சள்

    கஸ்தூரி மஞ்சள்

    கஸ்தூரி மஞ்சளை பேஸ் பேக்காக போடும் போது மஞ்சள் நிறம் முகத்தில் தெரியாமல் இருக்கும். அந்த காலங்களில் பெண்கள் மஞ்சளை பூசி குளித்ததால் முகப்பரு, சரும பிரச்சினைகள் இல்லாமல் இருந்தனர். பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்லும் போது இல்லாவிட்டாலும் தினமும் மாலை வேளைகளிலாவது மஞ்சளை முகத்தில் தேய்த்து இயற்கையான அழகை பெறுவோம். இவ்வாறு டாக்டர் ஒய் தீபா தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+