Beer: ஆல்கஹால் சதவீதம் குறைவுதான்! ஆனாலும் அடிக்கடி பீர் குடிக்கக் கூடாதாம்!
சென்னை: அடிக்கடி பீர் அருந்துகிறீர்களா? அவ்வாறு அடிக்கடி பீர் குடிப்பதால் ஏற்படும் உடல்நல கோளாறுகளை தெரிந்து கொள்ளலாம். பெண்கள் பீர் குடித்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
மது அருந்துவது உடல்நலனுக்குத் தீங்கு என எச்சரிக்கப்பட்டாலும், அதன் விற்பனை குறையவில்லை. இளைஞர்கள் வார இறுதி நாட்களில் பீர் அருந்தி மகிழ்வது வழக்கமாகிவிட்டது. எனினும், பீர் அதிகமாகக் குடிப்பது நல்லதல்ல என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆல்கஹால் சதவீதம் குறைவாக இருந்தாலும், அதை அதிகமாகச் குடிப்பது பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.பீர் அருந்துவது மகிழ்ச்சி தருவதாகப் பலர் கருதினாலும், அதில் உள்ள ஆல்கஹால் உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும். இது வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர வழிவகுத்து, எலும்புகளையும் பலவீனப்படுத்தும். குறிப்பாக, 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எலும்பு தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
பெண்கள் பீர் அருந்தும்போது ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படக்கூடும். ஆண்களுக்கு மார்பக அளவு பெரிதாதல் (Gynecomastia) போன்ற பாதிப்புகள் நிகழலாம். பீர் அதிகம் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழித்து, உடல் வறட்சி அடையும். இதன் விளைவாகத் தலைச்சுற்றல், தலைவலி, சோர்வு போன்ற குறைபாடுகள் தோன்றும்.
பீரில் உள்ள ஆல்கஹால் குடல் சவ்வுகளை எரிச்சலடையச் செய்யும். அதிகப்படியான பீர் கல்லீரலில் கடும் அழுத்தத்தை ஏற்படுத்தும். நீண்ட காலப் பயன்பாடு சிரோசிஸ், கொழுப்பு கல்லீரல், ஆல்கஹால் ஹெபடைடிஸ் போன்ற கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும். காலப்போக்கில், மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படலாம்.
அத்துடன், பீர் அதிகமாகக் குடிப்பதால் இதய ஆரோக்கியம் பழுதாகி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பீர் அருந்துவதைத் தவிர்ப்பதே சிறந்தது என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மதுபானங்களை முற்றிலும் கைவிடுவது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.
பீர் பழக்கத்தை உடனடியாக விட முடியாதவர்கள் படிப்படியாகக் குறைத்துக் கொள்ள முயல வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆறு மாதங்கள் மதுபானங்களைத் தவிர்ப்பது உடல், மன ஆரோக்கியத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். பீர் கைவிடுவது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
மதுவுக்கு அடிமையானவர்கள் தூக்கமின்மை சிக்கல்களால் பாதிக்கப்படுவார்கள். ஆரம்பத்தில் போதையில் உறங்கினாலும், பின்னர் தூக்கம் தடைபடும். இதனால் முறையான ஓய்வு கிடைக்காமல் சோர்வு, மன அழுத்தத்திற்கு ஆளாவார்கள். பீரில் கலோரிகள் மிகுதியாக இருப்பதால் விரைவாக உடல் எடை கூடி, உடல் பருமன் உருவாகும். உடலில் கொழுப்பின் அளவும் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications