ஆட்டிறைச்சி உறுப்பு.. தலைக்கறி முதல் நெஞ்செலும்பு வரை.. மட்டன் எடுத்தால் இதையும் சாப்பிடுங்க.. வாவ்
சென்னை: ஆட்டுக்கறி என்றாலே சதைப்பகுதியான மட்டன் என்றாகிவிட்டது.. உண்மையை சொல்லப்போனால் சதையைவிட, ஆட்டின் பாகங்களே உடலுக்கு நன்மையை தருகிறதாம். அவை என்னென்ன?
ஆட்டுக்கறியில் வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. முக்கியமாக வைட்டமின் B12 சத்துக்கள், நியூரான்கள் மற்றும் ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.. செலினியம் நோயெதிர்ப்பு அமைப்பு, வளர்சிதை மாற்றம், தைராய்டு செயல்பாட்டைத் தூண்டுகிறது, நியாசின் உணவை ஆற்றலாக மாற்ற துணைபுரிகிறது.

சரும பளபளப்பு: ஆட்டுக்கறியை பொறுத்தவரை, நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது.. உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது. மட்டன் சாப்பிடுவதால், நம்முடைய பார்வை கோளாறுகள் நீங்குவதுடன், கூர்மையான பார்வைகளுக்கு உதவுகிறது என்றே சொல்லலாம்.
மட்டனில் நிறைவுறா கொழுப்புகள் அதிகமாக உள்ளதால், மட்டனை சாப்பிடுவது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்தவகையில், மட்டன் மட்டுமல்லாமல் மட்டனின் பாகங்களும் உடலுக்கு எத்தகைய நன்மையை தருகின்றன என்பதை பார்ப்போம்.
தலைக்கறி: ஆட்டின் தலையை தலைக்கறி என்கிறோம்.. இந்த தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலிகள் நீங்கும்.. இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு பிரதான இடமுண்டு. பிரசவமான பெண்களுக்கு தலைக்கறி குழம்புகளை இன்னமும் வீடுகளில் வைத்து தருகிறார்கள்.. காரணம், தலைக்கறி சாப்பிட்டால், பச்சிளம் குழந்தைக்கு தலைக்கு உறுதியை தந்து தலை நிற்கும் என்பார்கள்.
அந்தவகையில், குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறி என்பது மிகவும் முக்கியமான உணவாகும்.. இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது.. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும்.. தலைக்கறியிலேயே ஆட்டின் கண்களும் வந்துவிடும்.. இதனையும் குழம்பில் சேர்த்து சாப்பிட்டால், நம்முடைய கண்கள் கூர்மையான பார்வையை பெறும்.
ஆட்டு கால்கள்: ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ஆட்டின் நெஞ்சு கறியை எடுத்து கொண்டால், நம்முடைய நெஞ்சிலுள்ள கபம், சளி நீங்கும். மார்புக்கு பலத்தையும், சக்தியையும் தரக்கூடியது.. அதனால்தான், பலவீனமானமாவர்களை, நெஞ்செலும்பாக வாங்கி சூப் வைத்து சாப்பிட சொல்கிறார்கள்.. இந்த கறியில் வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக்கூடியது.. ஆட்டின் கண்களையும் குழம்பில் சேர்த்து சாப்பிடும்போது, நமது கண்களின் பார்வையும் கூர்மையாகிறது.
கொழுப்புகள்: ஆட்டின் நுரையீரல், மற்றும் கொழுப்புகளும் நமக்கு நன்மையையே தருகின்றன.. இதனால், நம்முடைய உடலிலுள்ள வெப்பம் குறைகிறது.. நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கும் சிறந்த வலிமையை தருகிறது. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.
ஆட்டின் குடல் கறியை, "போட்டி" என்றும் சொல்வார்கள்.. செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் போட்டியை சமைத்து சாப்பிடலாம். ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களும் பலம் பெறும்..
ஆட்டுக்கறி: இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்கூட, ஆட்டுக்கறியை அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது. பொதுவாக, சிவப்பு இறைச்சி செரிக்கப்படும்போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது... சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்கிறார்கள்.
குறிப்பாக, சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகம் உள்ளது என்பதால், மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள். எனவே, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உடல்எடை அதிகமாக உள்ளவர்கள், மட்டனை தவிர்த்துவிடலாம்.. உடல் ஆரோக்கியமும், உடலுழைப்பும் மிக்கவர்கள் குறைந்த அளவு சாப்பிடலாம்..!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications