Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சர்க்கரை நோயாளி.. "இதை" குடித்தாலே போதும்.. வியக்க வைக்கும் கொட்டை.. ஆச்சரியம் தரும் பட்டை.. சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாவல் மரத்தின் பழங்களும், இலைகளும் எந்த அளவுக்கு நன்மைகளை தருகிறதோ அதுபோலவே, ஆச்சரியம் தரக்கூடிய பலன்கள் நாவல் மரத்தின் பட்டைகளிலும், வேர்களிலிருந்தும் நமக்கு கிடைக்கின்றன.

புரோட்டீன், மெக்னீசியம், வைட்டமின்C, B, குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து இப்படி பல சத்துக்களை அடக்கியதுதான் நாவல் பழம்.. இதய நோய்கள் வராமல் தடுப்பதில் நாவல் பழத்திற்கு பெரும் பங்கு உண்டு.. ஞாபக சக்தியையும் அதிகரிக்க செய்கிறது.

Excellent Uses of Jamun Barks and and Do you know How to prepare Super Health Effects of Dried Naval Pattai Powder

ரத்த உற்பத்தி: உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கக்கூடியது... அனீமியா பிரச்சனை இருப்பவர்கள், உடல் எடை குறைய நினைப்பவர்கள், இந்த பழத்தை தேர்வு செய்யலாம்.. காரணம், மிகக்குறைந்த கலோரி பழம் என்பதுடன், உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை இந்த நாவல் பழத்துக்கு உண்டு.

வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த இலைகளை சுத்தமாக கழுவி, அதை இடித்து சாறு எடுத்து, 3 நாட்கள் சாப்பிட்டால், வயிற்றுப்போக்கு கட்டுப்படும். அல்லது நாவல் மரத்தின் இலைக்கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்...

நாவல் இலை: நாவல் பழத்தின் இலையை பொடி செய்து, அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால், ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.

நாவல் பழ விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் கரைந்துவிடும். நிறைய கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் C அடங்கியுள்ள இந்த விதைகள், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு துணை புரிகிறது. மூளையும் பலம் பெறும். நினைவாற்றலும் அதிகரிக்கும்.

வரப்பிரசாதம்:
நாவல் விதைகளை, சர்க்கரை நோய்க்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க செய்கிறது இந்த விதைகள். நாவல் கொட்டைகளை பவுடராக உட்கொண்டவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர்களது சர்க்கரை அளவும், சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்திருந்ததாம்.

எனவே, நாவல் விதைகளை நன்றாக காய்ந்தபிறகு, மிக்ஸியில் அரைத்து, சலித்து வைத்து கொண்டாலே போதும். தினமும் 2 வேளை, ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், ஒரு மாதத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்

பட்டைகள்: நாவல் மரத்தின் பட்டைகளும் மருத்துவ குணம் நிறைந்தது.. இந்த பட்டைகளை நன்றாக கழுவி, தண்ணீரில் சேர்த்து கொதிக்கவிட வேண்டும். பிறகு இதனை வடிகட்டி ஆறவைத்து குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்... அல்லது, நாவல் மர மரப்பட்டைகளை இடித்து சலித்து வைத்து கொள்ள வேண்டும். இந்த பவுடரை எருமை தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தாலும், பெண்களின் உதிரப்போக்கு குணமாகும்.

அதேபோல, நாவல் மரப்பட்டை, குரலின் இனிமையை அதிகரிக்க செய்யுமாம். அத்துடன், ஆஸ்துமா, தாகம், களைப்பு போன்றவற்றுக்கும் அருமருந்தாகிறது. வாய் சுகாதாரம் பேணப்பட வேண்டுமானால், இந்த மரத்தின் பட்டைகளே போதும்.. நாக்கு, வாய், தொண்டை புண்களுக்கும் தீர்வை தருகின்றன இதன் சாறுகள்.

மரப்பட்டைகள்:
இந்த மரப்பட்டைகளை தூள் செய்து வைத்து கொண்டாலே பல பிரச்சனைகளுக்கு நிவாரணமாக பயன்படுத்தலாம்.. உடலில் காயங்கள் ஏற்பட்டுவிட்டாலோ அல்லது ரத்தம் வழியும் புண்கள் ஏற்பட்டுவிட்டாலோ, இந்த மரப்பட்டை தூளை தூவினால் விரைவில் புண்கள் ஆறுமாம்.. அதேபோல, நாவல் மர பட்டைகளில் கஷாயம் போல வைத்து, அந்த தண்ணீரை கொண்டும், புண்களையும் கழுவினால், நிவாரணம் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு சில சமயம் மந்தம் ஏற்பட்டுவிடும்.. அல்லது வயிற்றுப்போக்கு, சீதபேதி போன்று ஏற்பட்டுவிட்டால், நாவல் மரப்பட்டையை வெள்ளாட்டுப்பாலுடன் சேர்த்து நன்றாக காய்ச்சி வடிகட்டி சிறிது தருவார்களாம்.. இப்படி பல நன்மைகள் இருந்தாலும், மருந்தாக உட்கொள்ளும்போது, மருத்துவர்களின் முறையான அனுமதியை பெறுவது ஆரோக்கியத்துக்கு நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+