Exclusive வெள்ளத்துல இருந்தீங்களா? அப்போ உடனே "இந்த" தடுப்பூசியை போடுங்க! மோசமானது! டாக்டர் பரூக்
சென்னை: சென்னை பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பு இந்த நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் பரூக் அப்துல்லா ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: புயல், வெள்ளம், அளவு கடந்த நீர் தேக்கம் இவையெல்லாம் வந்துவிட்டு சென்ற பிறகு அங்குள்ள அசுத்தமான நீர், கழிவு நீர் கலந்திருக்கும். அதில் கிருமிகள் இருக்கும். இதை சுத்தம் செய்யாமல் மக்கள் அப்படியே குடித்துவிட்டால் நீரினால் ஏற்படக் கூடிய தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

புயலின் போது நிறைய நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தது. இந்த சூழலில் பிரிட்ஜில் வைத்திருந்த சில உணவுகள் கெட்டு போயிருக்கும். ஆனாலும் வெளியே கிளைமேட் ஜில்லென்று இருக்கிறதே என நினைத்து கெட்டு போன உணவுகளை சாப்பிட்டு விடுவார்கள். கெட்டு போன நீர் இருக்கும் உணவுகளை சாப்பிட்டு விடுவார்கள். இதனால் ஃபுட் பாய்சனிங் கேஸ்கள் அதிகம் வரும்.
வீட்டை சுற்றி நீர் இருப்பதாலும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதாலும் சுவாச பாதையில் தொற்றுகள் எளிதாக பரவ வாய்ப்பிருக்கிறது. இது அல்லாமல் எலி உள்ளிட்ட கொரிப்பான்களுடைய சிறுநீர் வெள்ள நீரில் கலப்பதால் எலி காய்ச்சல் வர வாய்ப்பிருக்கிறது. இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய நோய். ஆரம்பத்திலேயே அறிகுறிகளை வைத்து சரி செய்ய வேண்டும்.
தேங்கியிருக்கும் தண்ணீரில் நடந்து செல்லும் போது கற்களில், ஆணிகளில் கால் குத்திவிடும். இதனால் கால்களில் கீரல்களும் புண்களும் உருவாக வாய்ப்பிருக்கிறது. அதில் கிருமி தொற்றுகள் ஏற்படும். டெட்டனஸ் கிருமி தொற்று ஏற்பட்டால் பிரச்சினைக்குரிய காய்ச்சல் ஏற்படும். அதாவது ரண ஜன்னி என்பார்கள். இதை தடுக்க தன்னார்வலர்கள், உணவு டெலிவரி செய்வோர் என்ன செய்ய வேண்டும் என்றால் டெட்டனஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும். இது அரசு மருத்துவமனைகளிலேயே இலவசமாக கிடைக்கிறது.
பொதுவாக நீரினுள் கால் ஊறிக் கொண்டே இருக்கும் போது பூஞ்சை தொற்றுகள் ஏற்படும். மழைக் காலங்களில் மக்களுக்கு உதவி செய்வோர் பூஞ்சை கிருமிகளுக்கு எதிரான ஆயின்மென்ட்கள் உள்ளன. அவற்றை மருத்துவரின் பரிந்துரையில் வாங்கி அதை கால்களில் போட்டுக் கொண்டு புண் வந்தாலும் அது பெரிதாக பரவாமல் இருக்கும்.
அதிலும் நீரிழிவு நோயாளிக்கு காலில் புண் ஏற்பட்டால் அது தீவிர தொற்றாக ஏற்படும். இவர்கள் முடிந்த வரை கால்களை ஈரமாக்காமல் பார்த்துக் கொள்வதுதான் நல்லது. சென்னை என்பது மலேரியா, டெங்கு போன்ற நோய்களுக்கான இடம்தான். மழைநீர் தேங்கும் இடங்களில் ஏடீஸ் கொசுக்கள் பல்கி பெருகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. கொசு கடியிலிருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசியம்.
கொசு கடிக்காதவாறு வலைகளை பயன்படுத்த வேண்டும். கொசுக் கடியிலிருந்து தப்பிக்க உதவும் மருந்துகளை பயன்படுத்த வேண்டும். காய்ச்சல் வந்துவிட்டால் மருத்துவரை அணுக வேண்டும். சுய மருத்துவம் செய்யக் கூடாது. பெருவெள்ளம் ஏற்பட்டவுடன் அடுத்த 6 வாரங்கள் தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது.
அதாவது 42 நாட்கள்! ஒரு கிருமி நம் உடலில் வந்து அதன் அறிகுறிகள் வெளியே தோன்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை இன்குபேஷன் பீரியட் என்போம். இந்த காலகட்டத்தில் எந்த காய்ச்சல் வந்தாலும், வயிற்று வலி, சளி, வயிற்று போக்கு ஏற்பட்டால் அதற்காக சுய மருத்துவம் செய்துக் கொள்ளக் கூடாது. மருத்துவரிடம் சென்றால் இந்த பாதிப்பு எந்த கிருமியினுடையது என்பது அவருக்கு தெரியும். அதனால் அவர் உரிய மருத்துவம் செய்வார். இவ்வாறு டாக்டர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications