தூதுவளை பழம்.. தூள் தூளாகும் நோய்கள்.. சூப்பர் பலனை தரும் தூதுவளையின் பூக்கள் + காய்கள்.. ஆச்சரியம்
சென்னை: தூதுவளையின் இலைகளின் பயன்கள் நமக்கு ஓரளவு தெரியும் என்றாலும், தூதுவளையின் பழங்கள், தூதுவளையின் காய்களும், வேர்களும்கூட நமக்கு உதவுகின்றன.. எப்படி தெரியுமா?
தூதுவளையின் இலைகள், சுவாச கோளாறுகளுக்கு அருமருந்தாகிறது.. இருமல், சளியை விரட்டும் தன்மை உடையது.. வெறும் தூதுவளை இலைகளை தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்துவந்தாலே, சளி, காய்ச்சல் நம்மை எளிதில் நெருங்காது என்பார்கள்.
இந்த இலையிலிருந்து சாறு எடுத்து, அதில் சிறிது மிளகுத்தூள் சேர்த்து குடித்தால், சளி, இருமல் குணமாகும். உடலின் கெட்ட கழிவுகளும் நீங்கும்... தேள், பூரான், தேனி, வண்டுகள், பூச்சிகள் என விஷபூச்சிகள் கடித்தாலும், இந்த தூதுவளை அவர்களின் உயிரை காப்பாற்றிவிடும்.

நரம்புத்தளர்ச்சி: நரம்புத் தளர்ச்சியை தூதுவளை இலை நீக்குகிறது.. ஆண்மை குறைபாடுகளையும், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்கிறது, ஆஸ்துமா நோயாளிகளுக்கு தூதுவளை சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த தூதுவளை இலை சாற்றில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு மிகவும் நல்லது..
கண் எரிச்சல், கண் வலி, கண் வீக்கம் நீங்கிவிடும். எதிர்ப்பு சக்தி குறைபாடுகளை போக்கக்கூடிய இந்த தூதுவளை இலையை வாரம் ஒருமுறையாவது உணவில் நாம் சேர்த்து கொள்ள வேண்டும்.
மொட்டுக்கள்: தூதுவளை பூக்கள், மொட்டுக்கள் போன்றவற்றை நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து காய்ச்சிய பால் சேர்த்து சாப்பிடலாம்.. கருப்பை புற்றுநோய் முதல் எந்த புற்றுநோயும் வராமல் தடுக்கலாம்.
சர்க்கரை நோய்க்கு சிறந்த மருந்தாகிறது இந்த தூதுவளையின் இலைகள்.. இதை வெறுமனே மென்று தின்றாலே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையுமாம். எனவே, டாக்டர்களின் அனுமதியுடன் இந்த இலையைப் பொடி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். ஹீமோகுளோபின் பிரச்சனையையும் இந்த தூதுவளை தீர்க்கிறது. தூதுவளை இலை பொடி என்று தனியாகவே விற்கிறார்கள்..
இலைகள்: தூதுவளையில் இலைகளை தவிர, காய்களும், பூக்களும்கூட மருந்தாகின்றன... இந்த தூதுவளை பூக்கள், மொட்டுக்களை பறித்து கழுவி சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி, பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து ஆறவைத்து, அதனை காய்ச்சிய பாலுடன் சேர்த்து குடித்தால் பெண்களுக்கு மிகவும் நல்லது. கருப்பை புற்றுநோய் முதல் எந்தவகையான புற்றுநோயும் வராமல் தடுக்கும் சக்தி இந்த பூக்களுக்கு உண்டு..
தூதுவளையின் பழங்களும், மருத்துவ குணம் கொண்டவை. பாம்பு கடித்தால், இந்த தூதுவளையின் பழத்தைதான் பயன்படுத்துவார்களாம்.. தூதுவளை பொடியை தண்ணீரில் கலந்து சாப்பிட்டால், பாதிக்கப்பட்ட நபருக்கு விஷ முறிவு ஏற்படும்... அதனால்தான் பாம்பு கடித்துவிட்டால் நஞ்சை முறிக்கும் வேறு சில மூலிகைகளோடு சேர்த்து, தூதுவளை பழங்களையும் உடனடியாக சாப்பிடுவார்களாம் மலைவாசிகள்.
தூதுவளை பழங்கள்: இந்த பழங்களை சாப்பிடுவதால், கப நோய்கள் நீங்குவதுடன், உடலிலுள்ள கெட்ட கழிவுகளும் நீங்கிவிடும்.. தூதுவளை பூவை நிழலில் உலர்த்தி பொடியாக்கி பாலில் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு சக்தி கொடுக்கும்.
தூதுவளை பழத்தை வெயிலில் காயவைத்து பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச்சளி, இருமலும் நீங்கும். தூதுவளையின் வேர்கள், காய்கள் இவைகளில் வற்றல் செய்யலாம்.. ஊறுகாய் செய்யலாம்.. தூதுவளை பழத்தை வற்றலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும்.












Click it and Unblock the Notifications