எந்தெந்த நேரத்தில் கொய்யாப்பழம் சாப்பிடலாம்.. பெருங்குடல் புற்றுநோய் அண்டாது! கொய்யா பெஸ்ட் நன்மைகள்
சென்னை: பெருங்குடல் புற்றுநோய், மற்றும் மூலநோய் அபாயத்தை குறைக்க உதவக்கூடியது கொய்யாப்பழம் என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.. பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யாவை சாப்பிட சிறந்த நேரம் எது தெரியுமா? சுருக்கமாக பார்ப்போம்.
கொய்யாப்பழத்தில், வைட்டமின் C நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. இந்த வைட்டமின் C உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த பெரிதும் துணைபுரிகின்றது. ஜலதோஷத்தை குறைக்கவும் உதவும்.

உடலில் பாக்டீரியாவை எதிர்த்து போராடி செல்கள் சேதம் அடைவதை தடுக்க செய்கிறது.புற்றுநோய், இதயநோய், கீல்வாதம் போன்ற பயங்கர நோய்கள் நெருங்க விடாமல் காக்கும்.
சத்துக்கள்: வைட்டமின் A உள்ளதால், கண்புரை உள்ளிட்ட கண்கள் பாதிப்புகள் வருவதில்லை. வைட்டமின் B6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் சத்துக்கள் உள்ளன.. ஒரு கொய்யாவில் 112 கலோரிகள், 23 கிராம் கார்போஹைட்ரேட், 9 கிராம் நார்ச்சத்து, 1.6 கொழுப்பு, 4 கிராம் புரதம், உள்ளன. ஃபோலேட், பீட்டா கரோட்டீன் சத்துக்கள் உள்ளன.. நார்ச்சத்து அதிகம் என்பதால், குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது..
கொய்யாப்பழத்தில், ஸ்டார்ச் இல்லை என்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. சோடியம் அளவு குறைவாகவும், பொட்டாசியம் அளவு அதிகமாகவும் இருப்பதால், தாராளமாக சாப்பிடலாம்.. ஆனால், 100 கிராம் கொய்யாப்பழத்தில் 9 கிராம் சர்க்கரை இருப்பதால், தினமும் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவு மாறுபடலாம். எனவே, சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவிலேயே கொய்யாக்காய்களை தேர்ந்தெடுத்து, குறைந்த அளவு சாப்பிடலாம்.
கொய்யா இலைகள்: கொய்யா இலைகளில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பாலி சாக்கரைடுகள் உள்ளதால், ரத்த அழுத்தம் மற்றும் கெட்ட கொழுப்பை குறைக்க தூண்டுகின்றன.. இது இதயத்துக்கு பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் தருகிறது.. கொய்யாப் பழத்திலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை குறைப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கொய்யா மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது. ஒரே நாளில் மலச்சிக்கலைத் தீர்க்கும் வல்லமை கொண்டது கொய்யாவிற்கு இருக்கின்றது.
வைட்டமின்களும், தாதுச்சத்துக்களும் நிறைந்துள்ளதால் சருமம் பாதுகாப்பாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும்.. நார்ச்சத்து அதிகம் என்பதால், உடல் எடை குறைப்போருக்கு சிறந்த பழமாக கொய்யா உள்ளது. இந்த நார்ச்சத்துதான், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மூலநோய் அபாயத்தை குறைக்க உதவும் என்று அமெரிக்க வேளாண்மைத் துறையும் அறிவித்திருக்கிறது.
சிறந்த நேரம்: கொய்யா சாப்பிடுவதற்கு உரிய நேரம் உள்ளது.. அந்தவகையில், மதிய உணவு சாப்பிட்ட பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்து கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.. இதனால், செரிமான அமைப்பு சீராவதுடன், பழத்திலுள்ள பலனையும் முழுமையாக பெற முடியும்.
கொய்யா இலைகளின் சாறு பெண்களுக்கு நல்லது.. காரணம், இதிலுள்ள ஸ்பாஸ்மோலிடிக் பண்புகள், கர்ப்பப்பையின் மென்மையான தசைகளில் ஏற்படும் பிடிப்பு, வலியை போக்கக்கூடியவை.. எனவே, மாதவிடாய் சமயங்களில் கொய்யா இலைச்சாறு குடிப்பது மிகவும் நல்லது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications