நரை முடியை கருப்பாக்கும் நெல்லிக்காய் + தேங்காய் எண்ணெய்! 7 நாளில் முடி கொட்டுதலுக்கு ஃபுல்ஸ்டாப்!
சென்னை: நரை முடியை கருப்பாக்கும் நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இன்று பள்ளி மாணவர்களுக்குக் கூட நரைமுடி, முடி உதிர்தல் பிரச்சினை நிலவுகிறது.
இதுகுறித்து சமூகவலைதளத்தில் உங்கள் உலகம், உங்கள் செய்திகள் எனும் பக்கத்தில் கூறியிருப்பதாவது: வெள்ளை முடியை கருப்பாக்க என்ன செய்வது என நம்மில் பலரும் கூகுளில் அதிகம் தேடுவது உண்டு. ஆனால் கஷ்டமே இல்லாமல், ஆரோக்கியமான முறையில் முடியை கருப்பாக, அடர்த்தியாக வளர்ச்சி செய்ய வழி உள்ளது.

அதுவும் ஏழே நாட்களில் ரிசல்ட் தெரிய 2 பொருட்களை மட்டும் சரியாக பயன்படுத்தினால் போதும். முடி கொட்டுதல், உதிர்தல், நரைத்தல், மற்றும் உலர்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இயற்கை முறையில் இந்தப் பிரச்சினைகளை தீர்க்க, நெல்லிக்காய் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய் உங்களுக்கு ஒரு ஆச்சரியமான தீர்வை தரும். இந்த இரண்டு பொருட்களை மட்டும் சரியான முறையில் பயன்படுத்தினால் ஒரே வாரத்தில் இயற்கையான முறையில் உங்களின் நரை முடியை கருப்பாக்கி, அடர்த்தியாக வளர வைக்க முடியும்.
நெல்லிக்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்க் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூள்
4 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
செய்முறை
ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை கொதிக்காமல் வெதுவெதுப்பாக சூடாக்கவும். இதில் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் தூளை சேர்த்து நன்றாக கலக்கவும்.
5-10 நிமிடங்கள் மிதமான தீயில் வெதுவெதுப்பாக இருக்கட்டும். பிறகு குளிர்ந்ததும், முடி வேர்களில் மெதுவாக மசாஜ் செய்து பூசவும்.
குறைந்தது 1 மணி நேரம் வைத்து பிறகு மிதமான ஷாம்பூ கொண்டு அலசவும்.
7 நாட்களில் முடி வளர்ச்சி மற்றும் கருமை அதிகரிக்க
முடியை வாரம் இருமுறை இந்த எண்ணெய் கலவையை வைத்து மசாஜ் செய்யவும்.
தினமும் ஆரோக்கியமான உணவுகள் - பச்சை காய்கறிகள், ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும்.
தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்கவும் - முடிக்கு தேவையான ஈரப்பதம் கிடைக்கும். தலைக்கு குளிர்ச்சியான எண்ணெய்கள் தேய்க்கவும் - பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
முடியை அதிகமாக ஹீட் (Heat) கொடுக்காமல் பாதுகாக்கவும் - ஸ்டிரெய்ட்னிங், ஹேர் ட்ரையர் போன்றவற்றை குறைத்துக் கொள்ள வேண்டும்.
கடுமையான ரசாயனங்கள் கொண்ட தயாரிப்புகளை விட, இயற்கையான முறைகளைப் பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும், கருமையாகவும் வளரும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொறுப்புத் துறப்பு: இது சமூகவலைதளத்தில் வெளியான பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்த விரும்புவோர் மருத்துவரை கலந்தாலோசிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
-
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications