"வயாகரா".. மாத்திரையை சாப்பிட்டு ஆசை ஆசையாய்.. "இப்ப மானமே போச்சே".. டாக்டர்கள் சொல்வது என்ன? ஹெல்த்
சென்னை: சில குறிப்பிட்ட உடல்நல பிரச்சனை இருப்பவர்கள், வயாகராவை பயன்படுத்த கூடாது என்கிறார்கள்.. இதுகுறித்து டாக்டர்கள் பலமுறை எச்சரிக்கைகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு, உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜ் என்ற பகுதியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்தது.. அந்த இளைஞருக்கு 28 வயதாகிறது.. கல்யாணம் ஆகி 3 மாதங்கள்தான் ஆகியிருந்தது. ஆனால், ஆண்மை குறைபாடு இருந்ததாக உணர்ந்திருக்கிறார்.. இதனால், மனஉளைச்சலில் தவித்து, நிம்மதியில்லாமல் கஷ்டப்பட்டும் வந்துள்ளார்..
கடைசியில் தன்னுடைய நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.. அவர்களோ, வயாகரா மாத்திரைகளை எடுத்து கொள்ளுமாறு சொல்லி உள்ளனர்.. உடனே இந்த இளைஞரும் வயாகராவை வாங்கி சாப்பிட்டுள்ளார்..
வயாக்ரா: தினமும் 25-30 மில்லி கிராம் வயாகராவை சாப்பிட்டுள்ளார்.. அதனால், எந்தவித பலனும் இல்லை என தெரிகிறது.. அதனால், மறுபடியும் நண்பர்களின் ஆலோசனையின் பேரில், வயாகரா அளவை அதிகரித்தார்.. 200 மிகி வயாகரா சாப்பிட தொடங்கினார்.. அது ஓரளவு பலனும் தந்துள்ளது.. ஆனால், தொடர்ந்து வயாகராவை சாப்பிட்டபடியே இருந்திருக்கிறார்.. இயல்பையும் தாண்டி மனைவியிடம் உறவிலும் இருந்துள்ளார்.
நாளடைவில் அந்த இளைஞருக்கு உடல்நலக் கோளாறுகள் மெல்ல மெல்ல எட்டி பார்த்தன.. ஆனால், அப்போதும் வயாகராவை விடவில்லை.. தொடர்ந்து சாப்பிட்டார்.. திடீரென ஆணுறுப்பில் வலி ஆரம்பித்தது.. இறுதியில், விறைப்புத்தன்மையில் கொண்டு வந்துவிட்டுவிட்டது. வலியும் நிற்கவில்லை.. இதனால் பயந்து போன இளைஞர், டாக்டரிடம் ஓடினார்..
ஆபரேஷன்: உடனடியாக ஆபரேஷனும் செய்யப்பட்டது.. ஆனால், அந்த வலியை மட்டும் குணப்படுத்த முடிந்ததே தவிர, விறைப்புத்தன்மை குறையவில்லை.. இனி எப்போதுமே குறையாதாம்.. வாழ்நாள் முழுவதும் அப்படியேதான் இருக்கும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர்..எனவே, விறைப்புத் தன்மை வெளியே தெரியாமல் இருக்க, இறுக்கமான துணியையும் அணிய வேண்டிய நிலைமைக்கு அந்த இளைஞர் ஆளாகி உள்ளார்..

உடல்நலக்கோளாறு என்றாலும், டாக்டரிடமும் போகாமல், சரியான அட்வைஸும் இல்லாமல், தன்னிச்சையாக வயாகராவை சாப்பிட்டு, வாழ்க்கையை தொலைத்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மற்றொரு பக்கம் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உயர்ந்து வருகிறது.. சமீபத்தில்கூட, மகாராஷ்டிரா மாநிலத்தில் வயாகரா பயன்படுத்திய 40 வயது நபர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.. அவருக்கு 41 வயதாகிறது.. பெண் தோழியுடன் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கியுள்ளார்..
மாத்திரைகள்: மது அருந்திக்கொண்டே, தான் வாங்கி வந்த 2 வயாகரா மாத்திரைகளையும் சாப்பிட்டுள்ளார்.. அதாவது, வயாக்ராபிராண்டின் சில்டெனாபில் எனப்படும் அந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டுள்ளார்.. பிறகு, மறுநாள் காலை வாந்தியெடுத்துள்ளார்... உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சைபலனின்றி இறந்துவிட்டார்..
போஸ்ட் மார்ட்டம் செய்யப்பட்டதில், அவரது உடலில் இருந்து டாக்டர்கள் 300 கிராம் உறைந்த ரத்தத்தையும், ஆல்கஹால் மற்றும் மருந்துகளின் கலவையையும் கண்டறிந்துள்ளனர். மூளைக்கு போதிய அளவு ஆக்சிஜன் செல்லாததே உயிரிழப்புக்குக் காரணம் என்றார்கள் டாக்டர்கள்.. அந்த நபருக்கு இதற்கு முன்பு எந்தவித உடல் கோளாறும் இருந்தது கிடையாதாம்.. இதுவரை எந்த ஆபரேஷனும் செய்து கொண்டதில்லையாம்..
உடல்நலக்கோளாறு: ஆனால், ரத்த அழுத்தம் மட்டும் இருந்துள்ளது.. ரத்தத்துடன் வயாகரா கலந்து ரத்தக்கட்டி ஏற்பட்டிருக்கிறது. ரத்தக்கட்டி காரணமாக, உடலுக்குள் ஆக்சிஜன் செல்ல முடியவில்லை. ஏற்கெனவே இருந்த அதிகப்படியான ரத்த அழுத்தமும் சேர்ந்துகொண்டதால் உயிரிழப்பு நேரிட்டுள்ளது.
இப்படி டாக்டர்களின் ஆலோசனையில்லாமல் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் வயாகரா காரணமாக தசைகளுக்குள் உள்ள ரத்த நாளங்கள் தூண்டப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், வயாகராவின் பக்க விளைவுகள் குறுகிய காலத்திற்கு இருக்கும் என்கிறார்கள்.. எனினும், கடுமையான தலைவலி, சருமத்தில் சிவப்பு நிற மாற்றம், வயிறு தொடர்பான பிரச்சனைகள், அமிலத்தன்மை பிரச்சனைகள், தசை வலி போன்றவை எல்லாம் இதன் பொதுவான பாதிப்பாகும்.
நிற பார்வை: வயாகரா எடுத்துக்கொள்ளும் பலருக்கு திடீரென ஒன்று அல்லது இரண்டு கண்களிலுமே பார்வை இழப்பு ஏற்படலாம்.. இது தமனி அல்லாத இஸ்கிமிக் ஆப்டிக் நியூரோபதி (NAION) எனப்படும் தீவிர கண் பிரச்சனையாகும். அதாவது, நிற பார்வையையே சேதப்படுத்திவிடுமாம்..
விழித்திரை: சமீபத்தில், 31 வயதான நோயாளி ஒருவர் டாக்டரை சந்திக்க வந்துள்ளார்.. 2 நாட்களாகவே சிவப்பு நிறத்தை சரியாக பார்க்க முடியவில்லை என்று சிகிச்சைக்காக வந்திருக்கிறார்.. வயாகரா மாத்திரையை சாப்பிட்டபிறகே இந்த அறிகுறிகள் தனக்கு தோன்றியதாக நோயாளி சொன்னார்.. அதாவது, சாதாரண டோஸ் 50mg அளவை விட அதிகமாக எடுத்துக்கொண்டாராம்.. அதனாலேயே கண்பார்வையை இழந்ததாக சொல்கிறார்.. அதற்கேற்றவாறு, அவரது விழித்திரையில் நச்சுகள் இருந்ததையும் டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்..
இதுகுறித்து டாக்டர்கள் அவ்வப்போது எச்சரிக்கைகளையும், அறிவுரைகளையும் தந்தபடியே உள்ளனர்.. முக்கியமாக, குறைந்த இரத்த அழுத்தத்திற்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், வயாகராவை உட்கொள்ளக்கூடாது என்கிறார்கள்.. ஒரு மாத்திரையை எடுத்துக் கொண்ட ஒன்று அல்லது 2 மணி நேரத்திற்குப் பிறகு உங்கள் ரத்த அழுத்தம் அசாதாரணமாக குறைந்துவிடும் என்றும் சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்தாகலாம் என்றும் டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
எச்சரிக்கை: இதயம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் வயாக்ராவை உட்கொள்ளக்கூடாது.. இது இதயத்தில் அழுத்தத்தை அதிகரித்துவிடும்.. மாரடைப்பு, பக்கவாதம் இருந்தாலும், வயாகராவை உட்கொள்ளக்கூடாது.. அதேபோல, வயாகராவை மற்ற நைட்ரேட் மருந்துகளுடன் தவறுதலாக கூட எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கிறார்கள்.
அளவு எவ்வளவு: மருத்துவர்களை பரிந்துரைக்கும் அளவு 25 மில்லி கிராம்தானாம்.. ஆனால், பெரும்பாலான ஆண்கள் இந்த அளவு தெரியாமல் 50 மில்லி கிராம், 100 மில்லி கிராம் என வீரியம் அதிகம் உள்ள High Dosage வாங்கி பயன்படுத்துகிறார்கள். இதனால் வயாகராவுக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது.. பல மருந்து கடைகள் இதனை வியாபாரம் ஆக்குவதாகவும் குற்றச்சாட்டுகளும் எழுகின்றன..
மேலும், இப்போதுள்ள மருத்துவ ஆராய்ச்சியின் மூலம் இந்த வகையான மாத்திரைகள் அதிக பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதால்தான், இந்த வகையான மாத்திரைகள் உபயோகிக்கும் முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுதல் மிகவும் நல்லது என்றும், பாதுகாப்பானது என்றும் அறிவுறுத்துகிறார்கள்.
-
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications