அதலைக்காய் அதுக்குத்தான் வேணும்.. நீரிழிவு நோயை விரட்ட அற்புத காய்.. காமாலையை விரட்டும் கசப்பு காய்
சென்னை: பெரும்பாலும் கேள்விப்படாத பெயர் அதலைக்காய்.. எனவே, சமையலிலும் இதனை நிறைய பேர் பயன்படுத்துவதில்லை.. ஆனாலும், இதிலுள்ள மருத்துவ குணங்கள், எண்ணற்ற நோய்களை நீக்க துணை புரிகிறது. அதலைக்காய் பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
பாகற்காயின் குடும்பத்தை சேர்ந்தது இந்த அதலைக்காய். பாகற்காயை போலவே கசப்புக்காயாகும். எனவே, பாகற்காயை போலவே குழம்பு, பொரியல் செய்யலாம்.

சத்துக்கள்: பாகற்காய் எந்த அளவுக்கு சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுகிறதோ, அதுபோலவே அதலைக்காயும், நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
இந்த அதலைக்காயில் துத்தநாகம், வைட்டமின் C, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன.. இவைகளை தவிர, நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், நார்ச்சத்து போன்றவை அபரிமிதமாக நிறைந்துள்ளது.
மஞ்சள் காமாலை: இதை யாரும் பயிரிட தேவையில்லை.. அதுவாகவே வயலோரங்களில் முளைத்துவிடும். இலைகள் இதய வடிவிலும், மலர்கள் மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.. ஒரே கொடியில் ஆண் மலர்கள் தனியாகவும், பெண் மலர்கள் தனியாகவும் இருக்கும்.
மஞ்சள் காமாலையால் அவதிப்படுபவர்கள், இந்த அதலைக்காயை தினமும் உணவில் சேர்த்து கொள்வதால் தீர்வு கிடைக்கும். வயிற்றிலுள்ள குடற்புழுக்கள், கிருமிகளையும் வெளியேற்றிவிடும். இந்த காயை சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் நீங்கும்.. மூட்டு வலி, முழங்கால் வலியால் அவதிப்படுபவர்களுக்கு அதலைக்காய் கை கொடுத்து உதவுகிறது. சளி தொந்தரவு, அஜீரண சிக்கலும் தீர்கிறது.
சீசன் காய்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பகுதிகளிலும், கரிசல் காட்டு பகுதிகளிலும் அதிகமாக விளையக்கூடியது. அதிலும் மழைக்காலங்களில் மட்டுமே இந்த அதலைக்காய் கிடைக்கும். அதாவது, கார்த்திகை மற்றும் மார்கழி மாதப்பருவத்தில் மட்டும் விளையும் காயாகும்.
இதுஒரு சீசன் காய் என்பதால், வற்றல் போட்டு வைத்து பயன்படுத்தலாம். ஆனால், இந்த அதலைக்காயை உடனே சமைத்து விடவேண்டும். நீண்ட நாட்கள் வைத்திருந்தால் தானாகவே முளைக்க ஆரம்பித்துவிடுமாம்..
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications