இத்துனூண்டு விதை.. ஓட ஓட நோயை விரட்டும் அற்புதமான அவரைக்காய்.. ஆமா, சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
சென்னை: ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள காய்கறிகளில் ஒன்றுதான் அவரைக்காய்.. துவர்ப்பு துவையான அவரைக்காய், பலவித நோய்களை சரிசெய்ய உதவுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
அவரை என்றாலே நார்ச்சத்து காய்.. மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தாராளமாக இந்த அவரையை சேர்த்து கொள்ளலாம். அவரையில் உள்ள விதை அதாவது பட்டாணியும் மிகச்சிறந்த உணவு.. அவரை பிஞ்சுவிலும் சத்துக்கள் அதிகம்.. இதை சமையலில் சேர்த்து கொண்டால் பித்தம் குறையும்..

உடல் ஆரோக்கியம்: உடல் உறுப்புகளுக்கு ஆரோக்கியம் தரும் அத்தனை சத்துக்களும் இந்த அவரை விதையில் உள்ளது.. ஜீரணசக்தியை அதிகரிக்கக்கூடியது.. இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், புரதச்சத்து, கால்சியம், நியாசின், பைரிடாக்சின், ரிபோபிளவின், தைமின், சோடியம், பொட்டாசியம், காப்பர், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், செலினியம், ஜின்க் என போன்ற சத்துக்கள் இந்த அவரையில் உள்ளது..
நார்ச்சத்து: ஏகப்பட்ட நார்ச்சத்து உள்ளதால், இதயத்துக்கு நல்லது. அவரையில் உள்ள கால்சியம், பற்களுக்கும், எலும்புகளுக்கும், ஆரோக்கியத்திற்கு வலுதரக்கூடியது.. அதேபோல, ஈறுகளுக்கு பலம் சேர்ப்பவை.. உடலில் புற்றுநோய் கட்டி வளர்வதை தடுப்பதில், இந்த அவரைக்கு நிறைய பங்கு உள்ளன..
நார்ச்சத்து மிகுந்த இந்த அவரையை, சர்க்கரை நோயாளிகள் அதிகம் சாப்பிடலாம்.. ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நோய்களை தடுப்பதிலும் அவரை அதிகம் உதவுகிறது.. நீரிழிவு நோயால் உண்டாகும் மயக்கம், தலைச்சுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை சரியாகும்.
உடல் எடை: உடல் எடை அதிகமாக இருப்பவர்கள், அல்லது டயட்டில் இருப்பவர்கள், இந்த அவரையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.. காரணம், நார்ச்சத்தும் அதிகம் என்பது மட்டுமல்ல, கொழுப்பை கரைக்கக்கூடிய அத்தனை தன்மையும் இந்த அவரைக்கு உண்டு.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நரம்பு கோளாறுகளையும் நீக்குகிறது.. இரவில் தூக்கமின்மை பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி அவரையை சாப்பாட்டில் சேர்த்து கொள்ளலாம். அவரைக்காய்களில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால், உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுக்கிறது.. அத்துடன், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகளையும் தடுக்கிறது..

அவரை விதை: ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், இரும்பு சத்து நிறைந்த அவரையை சாப்பிட்டு வரலாம்.. துவர்ப்பு சத்து உள்ளதாலும், ரத்தத்தை சுத்தப்படுத்தும். நுரையீரல் தொந்தரவுகளை இந்த அவரை நீக்குகிறது.. குறிப்பாக, இருமல், ஜுரம் மட்டுமல்லாமல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருந்தாலும், அவரையே சிறந்த தேர்வாக இருக்கிறது.. அவரையை அடிக்கடி சாப்பிட்டடால், நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க வகை செய்கிறது.
வயிற்றுப் புண்களை குணமாக்கும் இந்த அவரையை மூலநோய் தாக்கம் உள்ளவர்களும், மூட்டு வலி உள்ளவர்களும் வாரம் 2 முறையாவது சாப்பிட வேண்டும்.
அவரைக்காய்: பொதுவாக, அவரைக்காயில் பொரியல், சாம்பார், கூட்டு, அவியல் செய்வார்கள்.. ஆனால், முற்றிய அவரைக்காயை குழம்பு, பொரியலுக்கு தவிர்க்கலாம்.. அதற்கு பதிலாக முற்றிய அவரைக்காய் அல்லது வேறு ஏதாவது காய்கள் முற்றியிருந்தால், அனைத்தையும் சேர்த்து, சூப் செய்து மிளகு சேர்த்து குடிக்கலாம். இன்றும்கூட, கிராமப்புறங்களில், கொப்புளம், காயங்களுக்கு, அவரை இலையை அரைத்து பத்து போடுவது வழக்கம். மூட்டு வலிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.












Click it and Unblock the Notifications