முருங்கைக்கீரை குச்சி.. ஆச்சரியம் தரும் "முருங்கை காம்பு".. பனிக்கால கோளாறை போக்கும் முருங்கை சூப்கள்
சென்னை: முருங்கையின் காம்புகளை, சமையலுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா? முருங்கை குச்சிகளின் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
முருங்கையில் எது செய்தாலும், அது பெண்களுக்கும், ஆண்களுக்கும், குழந்தைகளுக்கும் நன்மை தரக்கூடியது. அதிலும், முருங்கையின் குச்சிகளை, தூக்கிஎறிந்துவிடாமல், சமையலுக்கு பயன்படுத்தினால், பல நன்மைகள் கிடைக்கும்.

முருங்கைக்கீரையை சுத்தம் செய்யும்போது, அதிலுள்ள இளம்குச்சிகளைதான் ஈர்க்குச்சி என்பார்கள்.. இந்த குச்சிகளை தூக்கி போட்டுவிட்டு, கீரைகளை நாம் பயன்படுத்துவோம். ஆனால், கீரையைபோலவே, இந்த குச்சியிலும் நிறைய சத்துக்கள் உள்ளனவாம். முருங்கை ஈர்க்கு, கறிவேப்பிலை ஈர்க்கு இரண்டையுமே தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த சாறை மட்டும் குடித்தாலே, வயிற்றிலுள்ள புழு, பூச்சிகள் வெளியேறிவிடுமாம்..
முருங்கை காம்புகள்: பெரும்பாலும், இந்த குச்சிகளை வைத்து சூப் செய்வார்கள். இந்த முருங்கை காம்புகளை வைத்து, சூப் குடித்தால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் நீர்க்கோர்த்திருந்தால் வெளியேறிவிடும்.. வறட்டு இருமலும் நீங்கும்.. உடல் பலம் பெறும்.. மலச்சிக்கலும் தீரும். கால்சியம் நிறைய உள்ளதால், பற்களுக்கும், எலும்புகளுக்கும் மிகவும் நல்லது.. மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிறு வலி நீங்கும்.
அந்த சூப்களின் வகைகள் தான் இவை: முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம், கறிவேப்பிலை, பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து குடிக்கலாம்.. அல்லது வேறு வகையிலும், முருங்கை காம்பு சூப் செய்யலாம்.
பருப்பு ரசம்: முருங்கை காம்பை பொடியாக நறுக்கி நன்றாக அலசி எடுத்து வைத்து கெள்ள வேண்டும். பாசி பருப்பு அல்லது துவரம் பருப்பு வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில், எண்ணெய், பட்டை லவங்கம், பிரிஞ்சி இலை, பச்சை மிளகாய், மிளகு, வெங்காயம், தக்காளியை தக்கி, அதனுடன் முருங்கை காம்பையும் கொட்டி வதக்க வேண்டும். பிறகு, தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.. அதில், மஞ்சள் தூள், உப்பு, மசித்த பருப்பு கொட்டி மீண்டும் கொதிக்க வைத்து இறக்கினால், முருங்கை காம்பு சூப் ரெடி
கறிவேப்பிலை: அல்லது குக்கரில் பருப்பு வேகவைக்கும்போது, முருங்கை காம்பு, சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, மஞ்சள் தூள், எல்லாவற்றையும் ஒன்றாக, குக்கரில் வேகவைத்து எடுத்துக் கொண்டு, நன்றாக கடைந்து வடிகட்டிவிட வேண்டும். வாணலியில் 1 ஸ்பூன் நெய், சீரகம், சிறிது கறிவேப்பிலை, கரம் மசாலா, சீரக தூள், மல்லி இழை சேர்த்து இறக்கினால், முருங்கை காம்பு சூப் தயார்.
இந்த காம்புகளை வைத்து ரசம் வைக்கலாம்.. இதற்கு முருங்கை குச்சிகளை நன்றாக கழுவி, இடித்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து, அதில் இந்த இடித்த ஈர்க்குச்சிகளை போட்டு, உப்பு, மஞ்சள் தூள், தக்காளி, மிளகு, சீரகப் பொடி சேர்க்கவும்.. இப்போது, அடுப்பில் ஒரு வாணல் வைத்து, எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பில்லை, பெருங்காயம் தாளித்து, பாத்திரத்தில் கலந்து வைத்துள்ளதை கொட்டி இறக்கினால் முருங்கை காம்பு ரசம் தயார்.
முருங்கை குச்சி ரசம்: இந்த ரசத்தையே வேறு மாதிரியும் செய்யலாம்.. மிளகு, சீரகம், பூண்டு, காய்ந்த மிளகாய், மல்லி விதை, பெருங்காயம் போன்றவற்றை இடித்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, முருங்கை காம்புகளை அதில் போட்டு கொதிக்க விட வேண்டும். காம்புகளிலிருந்து சாறு இறங்கியதும், அதை மட்டும் தனியாக வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். புளி, தக்காளி இரண்டையும் தனியாக கரைத்து கொள்ள வேண்டும்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications