முருங்கைக்கீரையை விட்றாதீங்க.. முருங்கையிலைக்காய் குழம்பு தெரியுமா? நீரிழிவு நோயாளிகளின் அருமருந்து
சென்னை: யாராலும் தவிர்க்க முடியாத, தவிர்க்க கூடாத கீரைதான் முருங்கைக்கீரை.. இந்த கீரையில், சாம்பார் பொரியல், கூட்டு செய்தாலும், இன்னும் ஒருசில முறைகளில் செய்து சாப்பிடும்போது, சத்துக்கள் முழுமையாக கிடைக்கின்றன.
முருங்கைக்கீரையை சாப்பிட்டால், உடலின் சர்க்கரையை குறைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது.. கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவுகிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது.. தலைமுடியும் வளரும். நரைமுடியும் குறையும். மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும்.. தோல் வியாதிகள் தீரும்.. உடல் சூட்டை தணிக்கும்.. வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.. இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு நீங்கும். பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும்.
தோல் சுருக்கங்கள்: தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்கும்.. முருங்கையை தின்னால் முன்னூறு நோய்கள் விலகும் என்று இதற்குதான் சொன்னார்கள். இந்த முருங்கைக்கீரையை சூப் வடிவில் சாப்பிடும்போது, கூடுதல் பலன் தரகிறது.
இதற்கு இளசான முருங்கைக்கீரையை ஒரு கைப்பிடி எடுத்து கொண்டு, 1 டீஸ்பூன் நெய் விட்டு, வதக்கி, 5 பல் பூண்டு, 5 மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம் போன்றவற்றை பொடித்து, தினமும் மதிய உணவில் சேர்த்து கொண்டாலே பல நன்மைகள் கிடைக்கும். இதையே ஜூஸ் போலவும் சாப்பிடலாம்..
தேங்காய் விழுது: அதேபோல, தேங்காய் அரைத்து ஊற்றி இந்த கீரையை குழம்பு செய்யலாம்.. ஒரு வாணலியை மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு என தனித்தனியாக சேர்த்து அரைத்து, பொடித்து கொள்ள வேண்டும். பிறகு தேங்காயையும், விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். இப்போது, வாணலில், பாசிப்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.. பாதி அளவு பருப்பு வெந்ததும், அதனுடன் முருங்கைக்காய், சுத்தரிக்காய் வெட்டிப்போட்டு வேக விட வேண்டும்.
காய்கள் ஓரளவு வந்ததும், முருங்கைக்கீரையையும் அதில் கொட்டி வேகவைக்க வேண்டும்.. பிறகு, அரைத்து வைத்துள்ள மசாலா பொடி, தேங்காய் விழுது சேர்ந்து கொதிக்க வைத்து, கொத்தமல்லித் தழையை தூவி இறக்கிவிடவேண்டும். இப்போது மறுபடியும் இன்னொரு வாணலில், எண்ணெய், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து கொட்டினால், காய் முருங்கைக்கீரை ரெடி.

முருங்கை சட்னி: ஒரு வாணலில், எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய், முருங்கைக்கீரை இரண்டையும் சேர்த்து வதக்கி ஆற விடவேண்டும். இவைகளுடன், சிறிது தேங்காய் துருவல், இஞ்சி, புளி தண்ணீர், உப்பு சேர்த்து மொத்தமாக மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். இன்னொரு கடாயில், எண்ணெய், கடுகு, உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொட்டினால், முருங்கை சட்னி ரெடி. இதனுடன் விருப்பப்பட்டால், வறுத்த வேர்க்கடலையும் சேர்த்து கொள்ளலாம்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications