முருங்கைக்காய் சாப்பிட்டால் தீரும் மூலநோய்.. முருங்கைக்காயின் நன்மை இவ்வளவா? நம்ப முடியாத பலன்கள்
சென்னை: பல்வேறு நன்மைகளை தரக்கூடிய முருங்கைக்காய்களை யாரெல்லாம் சாப்பிடலாம்? யாரெல்லாம் தவிர்க்கலாம்? ரத்தசோகை உள்ளவர்கள் இந்த முருங்கைக்காயை எப்படி உணவில் எடுத்துக் கொள்ளலாம்?
முருங்கை மரத்தில் எல்லாமே சத்துக்கள்தான்.. இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் என ஒவ்வொரு பாகமும், உடலிலுள்ள நோய்களை தீர்க்கக்கூடியது.. அந்தவகையில், முருங்கைக்காய்களும் தவிர்க்க முடியாதவை.

சத்துக்கள்: புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம் என்ற 4 சத்துக்களின் மிகச்சிறந்த ஆதாரமாக முருங்கை திகழ்வதே இதன் பிளஸ் பாயிண்ட்டாகும்.. இதிலுள்ள வைட்டமின் C சத்தானது, ஆரஞ்சுப் பழத்தைவிட அதிகம். மற்ற அனைத்து கீரைகளில் இருப்பதைவிட, இந்த முருங்கையில் ஏகப்பட்ட இரும்புச் சத்துக்கள் உள்ளன.
இதிலிருக்கும் பொட்டாசிய சத்து, வாழைப்பழத்தை விடவும் அதிகம்.. இதிலிருக்கும் புரோட்டின் சத்துக்களோ, முட்டைக்கு இணையானது.. கால்சியம் சத்துக்கள், பசும்பாலைவிட, 4 மடங்கு அதிகம். அதனால்தான், முருங்கை மரத்தை முன்னோர்கள் நம்முடைய வீடுகளில் தவறாமல் நட்டு வளர்த்து வந்துள்ளனர்.
காய்கள்: முருங்கைக்கீரைகள் ரத்தவிருத்தியை தருவதைப்போலவே, இந்த காய்களும் இரும்புச்சத்து கொண்டிருக்கின்றன. அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் தவறாமல் முருங்கையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த இந்த முருஙகை உதவுகிறது.. வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் C-யின் சிறந்த ஆதாரமாக உள்ளதால், ரத்த சோகை வருவதைத் தடுக்கிறது.
இரும்புச்சத்து: முருங்கைக்காயில் உள்ள இரும்புச்சத்து உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது.. தொற்றுக்கள் உண்டாக்குவதை தவிர்க்கக்கூடிய வைட்டமின் C முருங்கைக்காயில் உள்ளது. வைட்டமின் A உள்ளதால், மூளை மற்றும் கண்பார்வை வளர்ச்சியும் மேம்படும்..
கர்ப்பிணிகள் முருங்கையை அடிக்கடி சாப்பிட வேண்டும். தாய்க்கு மட்டுமல்லாமல், வயிற்றிலுள்ள குழந்தைக்கும், அதிக நன்மையை தருவதால், முருங்கைக்காய் கர்ப்ப காலத்தில் ஒரு சிறந்த சப்ளிமெண்டாகவே செயல்படுகிறது. அதுமட்டுமல்ல, கர்ப்ப காலத்தில் 100 கிராம் அளவு முருங்கைக்காய் சாப்பிடுவதால், வயிற்றிலுள்ள கருவினுடைய உறுப்புகள் நன்றாக வளரும். எனவே டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று கர்ப்பிணிகள் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ளலாம்.
நுரையீரல்: நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள், மூலநோயால் அவதிப்படுபவர்கள், வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த காய் சிறந்த மருந்தாகும்.. காரணம், ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, கட்டுக்குள் வைக்க செய்யும் இந்த காய்களுக்கு உண்டு. ரத்தமும், சிறுநீரும் சுத்தமாகிவிடும்.. மலச்சிக்கலும் தீர்ந்துவிடும்.
வெறுமனே சாம்பார், பொரியல் செய்யாமல், முருங்கைக்காயில் சூப் செய்து குடிக்கலாம்.. முருங்கை விதைகளையும் தனியாக எடுத்து உலர்த்தி தூள் செய்து பயன்படுத்தலாம். இதில், தினமும் ஒரு ஸ்பூன் எடுத்து, பாலில் கலந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாள்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சோர்வு குறையும். ரத்தசோகை விலகும். எலும்புகள் உறுதியாகும்.
மாதவிடாய்: மாதவிடாய் நேரத்தில் பெண்களுக்கு ஏற்படும் ரத்த இழப்பை சரிசெய்துவிடும். தலைவலி, தசைப்பிடிப்பு இருந்தாலும் தீர்த்துவிடும். அதேபோல, முருங்கை விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால், ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மையும் அதிகமாகும். அத்துடன் பலவீனமான நரம்புகள் பலப்படும்.. இது குழந்தை பேறுக்கு வழிவகுக்கும்.
எப்போதுமே முருங்கையை நன்றாக வேகவைத்து சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால், முருங்கையிலுள்ள பாக்டீரியாக்கள் உடலுக்கு தொந்தரவு தந்துவிடலாம். சுத்தமாக கழுவாத முருங்கைக்காயிலும் ஒட்டுண்ணிகள், பாக்டீரியாக்கள் இருக்கலாம். எனவே நன்றாக கழுவி, நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும்.
மலச்சிக்கல்: சிலருக்கு முருங்கை அலர்ஜியை தந்து மலச்சிக்கலை, நெஞ்செரிச்சலை உண்டாக்கலாம்.. தலைவலி, மயக்கம், சருமத்தில் தடிப்பு உள்ளிட்ட அலர்ஜி தோன்றினால், முருங்கைக்காய் சாப்பிடுவதை நிறுத்திவிடலாம். அதேபோல, முருங்கைக்காயின் நடுவே இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிறம் காணப்பட்டால் அந்த காயை வாங்குவதை தவிர்த்துவிட வேண்டும்..
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications