சோம்பு தண்ணீர் ஆரோக்கியம்.. பெருஞ்சீரகம் தீர்க்கும் பெருந்தொல்லைகள்.. நார்ச்சத்து அதிகமுள்ள சோம்பு
சென்னை: பெருஞ்சீரகம் எனப்படும் சோம்பு ஏகப்பட்ட மருத்துவ குணங்களை கொண்டது.. அந்தவகையில், சோம்பை உணவில் எப்படி, எந்த வகையில் சேர்த்து கொள்ளலாம்? சோம்பு நீர் குணப்படுத்தும் நோய்கள் என்னென்ன என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
உடலிலுள்ள கார்போஹைட்ரேட்டுகளின் அளவை குறைப்பதில் பெருஞ்சீரகம் பயனுள்ளதாக இருக்கிறது.. சோம்பு விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், நார்ச்சத்து, உட்பட ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சர்க்கரை நோயாளிகள் சோம்பு குடிநீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், திசுக்களில் நீர் கோர்ப்பது தடுக்கப்படும்

சோம்பு விதைகள் நன்மைகள்
துத்தநாகம், செலினியம் போன்ற உயர தாதுக்கள் சோம்பு விதைகளில் உள்ளன.. அந்தவகையில், அரை ஸ்பூன் சோம்பு விதையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வந்தாலே ஜீரண சக்தி அதிகமாகும்.. வாய் துர்நாற்றம் நீங்கும். கல்லீரல் பலம் பெறும்.. அவ்வளவு ஏன்? கல்லீரல் புற்றுநோயையும் முன்கூட்டியே தடுக்கும்..
சோம்பு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வளர்சிதை மாற்றம் துரிதமாகும்.. இநத விதைகளில் நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளன. எனவே, இதய ஆரோக்கியத்திற்கு சோம்பு உதவுகிறது.
நல்ல தூக்கத்துக்கு வழி வகுக்கிறது
வைட்டமின் C அதிகமாக சோம்புகளில் உள்ளதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது.. இது தொற்றுகளில் இருந்தும் நம்மை காக்கிறது. சோம்பு விதைகளில் மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளதால் மன அமைதி கிடைக்கிறது.. நல்ல தூக்கத்தையும் பெற முடியும்.. காரணம், மூளையில் பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி செய்து, தூக்கத்தை தரும்.
அதேபோல, ஈரல் நோய் இருந்தால், சோம்பை லேசாக வறுத்து தூள் செய்து, தேன் கலந்து, தினமும் 2 வேளை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.. சர்க்கரை நோயாளிகள் சோம்பை உணவில் சேர்த்து வருவது நல்லது..
கர்ப்பப்பை குறைபாடுகள்
கர்ப்பப்பை சார்ந்த குறைபாடுகளை சோம்பு நீக்கக்கூடியது.. சோம்பை லேசாக வறுத்து பவுடர் செய்து, தினமும் ஒருவேளை, 2 கிராம் வீதம் பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டு வந்தால் கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். எனவே, மலட்டுத்தன்மை நீங்கி, குழந்தைப்பேறு கிடைக்க சோம்பு விதைகள் உதவுகின்றன.. சோம்பு நீரை கொதிக்க வைத்து, சிறிது வெண்ணெய் கலந்து சாப்பிட்டால், இளம் தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.. மாதவிலக்கு தொந்தரவுகளுக்கும் சோம்பு மிகவும் நல்லது.
சோம்பு விதைகளை நன்றாக மென்று சாப்பிடும்போது உமிழ்நீரின் உற்பத்தி அதிகரித்து, செரிமானத்திற்கு உதவியாக இருக்கிறது. கடுமையான செரிமான பிரச்சனை இருந்தால் சோம்புடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
யூரிக ஆசிட்டுகள்
நீரில் சோம்பை இரவு ஊறவைத்துவிட்டு, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேறும், ரத்தமும் சுத்திகரிப்பாகும்.. வாயு தொல்லை, வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளும் தீரும்.
சோம்பு தண்ணீரை தினமும் குடித்து வரும்போது, சதைப்பகுதியிலுள்ள கொழுப்புகள் கரைய தொடங்கும்.. துத்தநாகம், பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, தாதுக்கள், போன்றவை சோம்பு தண்ணீரில் உள்ளதால்தான், ஹை-கொலஸ்ட்ரால் இருந்தாலும் குறைந்துவிடும். அதனால்தான், ஆயுர்வேத மருத்துவத்தில் சோம்பு தண்ணீருக்கு முக்கியத்துவம் உள்ளது.
தோல், கொப்புளம்
தோல் அழற்சி, கொப்புளங்கள், தோலில் வெடிப்பு உள்ளவர்களும், ஆஸ்துமா அலர்ஜி இருப்பவர்களும் இந்த தண்ணீரை தவிர்க்கலாம்.. கர்ப்பிணி பெண்களும் சோம்பு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். நோய்க்காக மருந்து உட்கொள்பவர்களும் இந்த தண்ணீரை தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்று சோம்பு தண்ணீரை குடிப்பது, சிறந்த ஆரோக்கியமாகும்.












Click it and Unblock the Notifications