ஆட்டு கண்ணின் சத்துக்கள்.. மட்டன் மூளையை ஆண்கள் சாப்பிடலாமா.. ஆச்சரியம் தரும் ஆட்டுக்கறி நன்மைகள்
சென்னை: ஆட்டிறைச்சி மூளையை சாப்பிடுவதால் கிட்னி காக்கப்படுகிறது, நுரையீரலும் காக்கப்படுகின்றன.. ஆட்டு மூளையை ஆண்களும், வளரும் குழந்தைகளும் மாதம் ஒருமுறையாவது சாப்பிட சொல்கிறார்கள் உணவு நிபுணர்கள்.. ஏன் தெரியுமா?
சமீபத்தில் வெளியாகியிருந்த ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வு முடிவில், நிறைவுறா கொழுப்புகள் நம்முடைய உடலில் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்வதாக தெரிவித்திருந்தது. இப்படிப்பட்ட நிறைவுறா கொழுப்புகள், மட்டனில் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

மட்டனில் வைட்டமின் B12, நியாசின், இரும்பு, செலினியம், போன்ற சத்துக்கள், நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மட்டனிலுள்ள செலினியம் நோயெதிர்ப்பு சக்தியை பெருக்க செய்கின்றன. மட்டனிலுள்ள நியாசின், உணவை ஆற்றலாக மாற்ற உதவி புரிகிறது. மற்ற இறைச்சி வகைகளுடன் ஒப்பிட்டால், மட்டனில் இரும்பு சத்துக்களும் ஏராளமாக உள்ளன.
ஆட்டுக்கறி: அதாவது, 100 கிராம் மட்டனில் சுமார் 3.8 மி.கி.இரும்புச்சத்து இருக்கின்றன. இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால், நமக்கு தேவைப்படும் B12 சத்துக்களில் 32 சதவீதம், ஆட்டுக்கறியிலேயே பெறமுடியுமாம். அந்தவகையில், ஆடுகளின் ஒவ்வொரு பாகத்திலும், சத்துக்கள் நிறைந்துள்ளன. அந்தவகையில் ஆட்டு மூளையை சொல்லலாம்.
ஆட்டு மூளையில் அஸ்கார்பிக் அமிலம், லெசித்தின், செரிப்ரோசைட், ரிபோஃப்ளேவின், நியாசின், தயாமின், புரதம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. ஆட்டு மூளையில் ஜிங்க் சத்துக்கள் நிறைந்துள்ளதால், விந்தணுக்களின் உற்பத்தி அதிகரிக்க செய்கிறது.. எனவே, தாது விருத்தியை உண்டாக்கக்கூடிய மூளையை, ஆண்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். இதில், வைட்டமின் B12 உள்ளதால் நரம்பு பிரச்சனைகளும் குறைகின்றன.
நினைவாற்றல்: நினைவாற்றலை பெருக்கும் சக்தி இருப்பதால், வளரும் குழந்தைகளுக்கு ஆட்டு மூளை வறுத்து தரலாம்.. அத்துடன், நெஞ்சு பகுதியிலுள்ள சளி, கபத்தை நீக்கிவிடும். ஆட்டு மூளையிலுள்ள பாஸ்பரஸ், கிட்னியில் தேங்கியிருக்கும் நச்சுக்களை நீக்கக்கூடியது.
நம்முடைய தசைகளின் வளர்ச்சியையும், வலிமையையும் மேம்படுத்த புரோட்டீன்கள் உதவுகின்றன. இந்த புரோட்டீன், ஆட்டு மூளையில் நிறைந்துள்ளது. இதனால் காயங்களை விரைந்து ஆற்றுகிறது. ஆட்டு மூளையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்அதிகமாக உள்ளதால், இதயத்துக்குவரக்கூடிய ஆபத்துகளும் குறைய செய்கின்றன. ரத்தம் உறைவதும் தடுக்கப்பட்டு, ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி பெருகுகின்றன.
ஆட்டு கண்: ஆட்டின் கண்கள், நம்முடைய கண்களுக்கு அதிக பலத்தை கொடுக்கிறது.. பார்வைத்திறனையும் அதிகரிக்க உதவுகிறது. கண் கோளாறுகளையும் சரிசெய்கிறது. எனவே, ஆட்டு மூளை எப்போது வாங்கினாலும், அதிலுள்ள மெல்லிய நரம்புகளை நீக்கிவிட்டு சமையலுக்கு பயன்படுத்தலாம். அதேசமயம், சர்க்கரை நோயாளிகள், அதிக உடல் பருமன் கொண்டவர்கள், இதய நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் ஆட்டு மூளையை மருத்துவர்களின் ஆலோசனையை பெறாமல் சாப்பிடக்கூடாது.












Click it and Unblock the Notifications