Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கானா வாழை இலையின் அவசியம்.. மூலம், தொற்றுக்களை விரட்டும்.. தாம்பத்யம் சிறக்க உதவும் கானா வாழைக்கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுநீரக பைகள், கல்லீரல் , மண்ணீரல், நுரையீரல் என முக்கிய உறுப்புகளுக்கு வலிமையை தருவதுடன், அவற்றின் கோளாறுகளையும் சரிசெய்யக்கூடிய கானா வாழையை பற்றி தெரியுமா? பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்போக்கு நோய்க்கு, இந்த கானா வாழை கீரை எப்படி மருந்தாகிறது தெரியுமா? அனைத்தையும் சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

புரதம், மாவுச்சத்து, நீர்ச்சத்து போன்ற சத்துக்கள் கொண்ட கானா வாழை இலைகள் குளிர்ச்சி நிறைந்தது.. உஷ்ண கோளாறுகளுக்கு இந்த கீரை ஒரு வரப்பிரசாதமாகும்.

Kaana Vaazhai Keerai kana valai leaf Calf Grass

மூல நோய் பறந்துவிடும்

இந்த கானா வாழை கீரையை நன்றாக சுத்தம் செய்து, நீரில் கொதிக்க வைத்து, மிளகு கலந்து குடித்துவரும்போது, எப்பேர்ப்பட்ட காய்ச்சலும் தணியும்.. அதேபோல, இந்த குளிர்ச்சி நிறைந்த இலைகள், அல்சரை ஆற்றக்கூடியது.. மூல நோயால் அவதிப்படுபவர்களுக்கு கானா வாழை சிறந்த மருந்தாகும்.. இந்த இலைகளுடன் துத்தி இலைகளையும் சேர்த்து குடித்தால், இரத்த மூலம் மெல்ல குணமடைய துவங்கும்.

இரத்தத்தை சுத்தம் செய்யக்வடியது கானா வாழை கீரை.. உடம்பில் உள்ள உறுப்புகளுக்கு பலத்தை தரக்கூடியது.. அத்துடன், சிறுநீர்ப்பாதை, நுரையீரல் பாதைகளில் உள்ள தொற்றுக்களையும், அழுக்குகளையும் அழிக்கக்கூடியது..

ஆண்களுக்கு நிவாரணம்

ஆண்களுக்கு நரம்புகள் பலமற்று இருந்தால் அதற்கும் இந்த இலையே உதவுகிறது.. ஒரு கிளாஸ் நீரில் கானா வாழை இலையுடன் தூதுவளை பூ , மற்றும் முருங்கைப்பூவினையும் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க வைத்து, சூடான பாலில் பனங்கற்கண்டுடன் கலந்து 40 நாட்கள் குடித்து வரும்போது, தாது விருத்தி பெருகும் என்பார்கள். அல்லது இதன் சாற்றில் ஜாதிக்காயை ஊற வைத்து காயவைத்து தூள் செய்து,. தினசரி 3 கிராம் சாப்பிட்டு வந்தாலும் ஆண்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

கானா வாழையின் இலையுடன் சிறிது கொட்டைப்பாக்கு வைத்து அரைத்து சாப்பிட்டு வருவதால் தாம்பத்யம் சிறக்கும் என்பார்கள்.. அல்லது, இந்த கீரையை, முருங்கைப்பூ, துவரம்பருப்பு சேர்த்து பொரியல் செய்து, நெய் கலந்து, 21 நாட்கள் சுடுசோறுடன் பிசைநது சாப்பிடுவதாலும் தாம்பத்யம் செழிக்கும்.

புற்றுநோய் நெறிக்கட்டி நோய்

கானா வாழை இலையுடன் சம அளவுக்கு கீழா நெல்லியை விழுதாக அரைத்து, புதிய தயிரில் கலந்து தினமும் 3 வேளை குடித்து வந்தால், பெண்களை பாதிக்கக்வடிய வெள்ளைப் போக்கு பாதிப்பு குறையும்..

அவ்வளவு ஏன், கானா வாழையை உணவில் சேர்த்து வரும்போது, புற்றுநோய் நெறிக்கட்டி நோயும் தடுக்கப்பட்டுவிடுமாம். புண்கள், காயங்களுக்கும் இந்த கீரையை மஞ்சளுடன் அரைத்து பற்று போல போடலாம். பெண்களுக்கு மார்பகத்தில் கட்டி, வீககம் இருந்தாலும், இப்படி பற்று போட்டால் நிவாரணம் கிடைக்கும். அதேபோல, பெண்கள் மாதவிடாய் சமயங்களில் அதிக உதிரப்போக்கு இருந்தாலும், இந்த கீரையை சமையலில் சேர்த்து கொள்ளலாம்.

முறையான ஆலோசனை முக்கியம்

இந்த கானா வாழை இலையை கசக்கி சாறு எடுத்து அதில் மஞ்சள் சேர்த்து முகப்பருக்களின் மேல் பூசி வந்தால், பருக்கள் உடைந்து காயம் ஆறிவிடும்.. கானா வாழை இலைச்சாற்றை, நீருடன் கலந்து வாய் கொப்பளித்தால், வாய்ப்புண் குணமாகிவிடும்.. பற்கள், ஈறுகளுக்கும் பலம் கிடைக்கும். இவ்வளவு சத்துக்கள் இருந்தாலும், டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று சாப்பிடுவதே ஆரோக்கியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+