கற்பூரவல்லி.. நுரையீரலின் தோழன் "கற்பூரவள்ளி".. அதென்ன வத்தல் குழம்பு? நன்மைதரும் மருந்து குழம்புகள்
சென்னை: சளி, இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், கபம், போன்றவைகளுக்கு, வீட்டிலேயே மருந்து குழம்பு தயார் செய்து தரலாம். நாட்டுக்கோழி சூப், நண்டு சூப், பெப்பர் சிக்கன், என்று அசைவத்தில் பல டிஷ்கள் இருப்பதைபோலவே, சைவத்திலும் குழம்புகள் உள்ளன. அவற்றில் ஒருசிலவற்றை பார்க்கலாம்.
மிளகு குழம்பு: காய்ந்த மிளகாய், தனியா, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் என அனைத்தையுமே பொன்னிறமாக வறுத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, இவைகள் அனைத்தையும் மிக்சியில் கொட்டி சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள பொருட்களையும் போட்டு நன்றாக வதக்க வேண்டும். இதனுடன் புளிக்கரைசலை ஊற்றி, கல்உப்பு சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வந்தபிறகு இறக்கிவிடலாம். இதுதான் மிளகு குழம்பு. சிலர் இதில் நிறைய பூண்டுகளை உரித்து போட்டு சேர்ப்பார்கள், தேவைப்படுபவர்கள் தக்காளியையும் சேர்த்து கொள்வார்கள்.
மருந்துக்குழம்பு: ஒரு கடாயில் அரை ஸ்பூன் பச்சரிசி, அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு ஸ்பூன் மிளகு, கால் ஸ்பூன் வெந்தயம் என அனைத்தையும் நன்றாக வறுத்து, பிறகு மிக்சியில் பொடித்து வைத்து கொள்ள வேண்டும்.
அதே வாணலில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 2 ஸ்பூன் துவரம் பருப்பு, 2 ஸ்பூன் தனியா, 5 காய்ந்த மிளகாய், 2 ஸ்பூன் மிளகு, 1 ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் வெந்தயம், சிறிது பல் பூண்டு, சின்ன வெங்காயம், நன்றாக வதக்க வேண்டும். இவைகளை ஆற வைத்து, சிறிது புளி சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும்.
மீண்டும் அதே வாணலில், 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு, சின்ன வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் கொட்டி கிளற வேண்டும். சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும்போது, அரைத்து வைத்துள்ள மசாலா பொடியில் இருந்து ஒரு ஸ்பூன் சேர்த்து கலக்கி இறக்கிவிட வேண்டும்.
வத்தல் குழம்பு: ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, மிளகு, சீரகம் வெந்தயம், கடலை பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம், சேர்த்து வதக்க வேண்டும். மணத்தக்காளி வத்தலை அதில் கொட்டி வதக்க வேண்டும். பிறகு, சாம்பார் பொடியை சேர்த்து, அதனுடன் சிறிது புளிக்கரைசலையும் ஊற்றி கல்உப்பு சேர்க்க வேண்டும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது, ஒரு ஸ்பூன் எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து இறக்கிவிட வேண்டும். மணத்தக்காளி கிடைக்காவிட்டால், சுண்டக்காய், கத்தரிக்காய், மாங்காய், வெண்டைக்காய், கொத்தவரங்காய், பாவக்காய், அவரைக்காய் இப்படி எந்த காய்களை வேண்டுமானாலும், வத்தல் போல காய வைத்து எடுத்து கொள்ளலாம்.
இதே பாணியில் திரிகடகம் குழம்பு செய்யலாம். சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி இவை மூன்றும் சேர்ந்ததுதான் திரிகடகம் எனப்படும்.. சைனஸ் பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் தரக்கூடியது.. உடல் நோய்கள் வராமல் காக்கக்கூடியது.
கற்பூரவள்ளி இலை: கற்பூரவல்லி இலையை, ஓமவல்லி இலைகள் என்றும் சொல்வார்கள்.. இந்த இலையிலிருந்து சாறு எடுத்து சர்க்கரையுடன் கலந்து நெற்றியில் பற்றுப்போடலாம்.

இதனால் ஜலதோஷம், தலைவலி நீங்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனையும் தீரும். அதிகப்படியான கபம் பிரச்சனை இருப்பவர்கள், இந்த இலையை அரைத்து நீர் கலந்து கொதிக்க வைத்து, ஏலக்காய், கிராம்பு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து 3 நாள் தினமும் 2 வேளை குடித்தால் நிவாரணம் கிடைக்கும். கற்பூரவல்லி இலையை தண்ணீரில் சேர்த்து சுடச்சுட ஆவி பிடித்தாலும் தீர்வு கிடைக்கும்.
கற்பூரவல்லி மருந்துக் குழம்பு: இந்த இலைகளை அலசி பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு வாணலியில் மிளகு, சீரகம், ஓமம், சுக்கு, வெந்தயம், தனியா என அனைத்தையும் தனித்தனியாக சேர்த்து வறுத்து, மிக்சியில் பவுடராக்கி கொள்ள வேண்டும்..
அதே வாணலியில் சிறிது எண்ணெய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கி இதையும் தண்ணீர்விட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். அதே வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, நறுக்கி வைத்துள்ள கற்பூரவல்லி இலைகளை போட்டு வதக்கி, அதனுடன் புளிக்கரைசல், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அரைத்து வைத்துள்ள விழுதை கொட்டி, அதற்கு பிறகு, வறுத்து அரைத்த பொடியையும் சேர்த்து கிளறி இறக்கிவிடவும்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications