குட்டி குட்டி "இலை".. கல்லீரலின் காவலன்.. ஆயுளை கூட்டும் சீக்ரெட் மட்டும் தெரிஞ்சா, இதை விடமாட்டீங்க
சென்னை: இயற்கையிலேயே பூமியில் நிறைந்து கிடக்கிறது மூலிகைகளும், தழைகளும், இலைகளும்.. அதில் ஒரு வரப்பிரசாதமாக நமக்கு கிடைத்துள்ளதுதான் கீழாநெல்லி.
கீழா நெல்லியை தவிர்த்துவிட்டு மருத்துவத்தை அறிய முடியாது.. இலைகளை தாங்கிப் பிடிக்கும், நடு நரம்பின் கீழ்ப்பாகம் முழுவதும் குட்டி குட்டி காய்கள் காணப்படும்.. அது தலைகீழாக குவிந்திருக்கும்.. பூக்களும் காய்களும் என மொத்த தொகுப்பாக காணப்படும்.
இந்த இலைகளுக்கு கீழே உள்ளதால்தான், கீழ்க்காய் நெல்லி என்பார்கள்.. கீழ்வாய் நெல்லி என்றும் சொல்வார்கள்.. இவைகள் எங்குமே கிடைக்கப்பெறாத, அரிய இலை ஒன்றும் கிடையாது..

கீழாநெல்லி: எங்கெல்லாம் ஈரமான இடங்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் நிறைந்து கிடக்கும் இந்த கீழாநெல்லி.. சாலையோரங்களில், வயல் வரப்புகளில், பாழ் நிலங்களில் என சாதாரணமாக சிதறிப்பூத்து கிடக்கும்.. கீழா நெல்லியில் பொட்டாசியம், வைட்டமின் C, இரும்புச்சத்து, மினரல்ஸ், கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது.
கீழாநெல்லியை கல்லீரலின் பாதுகாவலன் என்பார்கள்.. காரணம், இதன் தலையாய பயன் என்னவென்றால், மஞ்சள் காமாலை நோயை அடியோடு தீர்க்கிறது..
நீரிழிவு நோய்: இந்த இலையை சுத்தம் செய்து அப்படியே கொண்டுவந்து மைய அரைத்து, மோருடன் கலந்து குடித்து வந்தால், காமாலை மட்டுமல்ல நீரிழிவு நோயும் சேர்ந்தே குணமாகும். அல்லது கீழா நெல்லி பொடியை நீரில் கொதிக்க வைத்து, சிட்டிகை சீரகத்தூள், தேன் சேர்த்து குடித்தால் காமாலை குணமாகும் என்பார்கள்.. அல்லது இந்த செடியை காய வைத்து பொடி செய்து அதை மோரில் கலக்கி சாப்பிட்டும் வரலாம்.. வாய்ப்புண்ணும் ஆறும்.. வயிற்றுப்புண்ணும் ஆறும்.. உடலுக்கு குளிர்ச்சியும்கூட.
உடல் உள்ளுறுப்புகளை சுத்தம் செய்ய பேருதவி புரிகிறது இந்த கீழாநெல்லி. கீழாநெல்லி இலையை நசுக்கி, அதனை 2 டம்ளர் தண்ணீரில் போட்டு பாதியாக சுண்ட காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால், வெள்ளைபடுதல் நீங்கும்..
சர்க்கரை நோய்: கீழாநெல்லியில் 3 பங்கு நீர் சேர்த்து, 1 பங்கு நீராக சுண்ட காய்ச்சி குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் உடைந்து சிறுநீரகத்தில் வெளியேறுமாம்.. தினமும் 3 வேளை சாப்பிட்ட பின்பு, கீழாநெல்லி பொடியை அரைடீஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால், சர்க்கரை கட்டுக்குள் வரும் என்பார்கள்.. ஆனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருப்பவர்கள், டாக்டரின் அட்வைஸ்கள் இல்லாமல் இதை சாப்பிட கூடாது..
இந்த நீரை குடிப்பதற்கு அரைமணி நேரத்துக்கு முன்பும், குடித்த பிறகு அரைமணி நேரம் கழியும் வரையும் வேறு எந்த ஆகாரமும் சாப்பிடக்கூடாது என்பார்கள்.. இப்படி பெரிய பெரிய நோய்களுக்கு, தீர்வாக திகழ்ந்து வருகிறது கீழாநெல்லி என்றாலும், சரியான ஆலோசனையை பெற்று சாப்பிடுவது சிறந்தது, பாதுகாப்பானதும்கூட.
தொற்று நோய்களை முறிக்கக்கூடியது இந்த கீழாநெல்லி.. இந்த இலைகளை அரைத்து காயத்தின் மீது வைத்து கட்டினால், காயங்கள் குணமாகும். எலிக்கடி விஷம் குணமாகவும், தேள்கடி விஷம் குணமாகவும் இந்த கீழாநெல்லி உதவுகிறது..
தலைமுடி உதிருகிறதா: தலைமுடி பிரச்சனைக்கும் கீழாநெல்லி உதவுகிறது.. தலைமுடி உதிர பெரும்பாலும் காரணம், உடல் சூடுதான்.. இந்த கீழாநெல்லியோ குளிர்ச்சியை தரக்கூடியது. அதனால், தலைமுடி உதிர்வு பிரச்சனை இருந்தால், கீழாநெல்லி இலையை அரைத்து முடியில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்து குளித்தால் முடி உதிர்வு சட்டென்று நிற்கும். சரும வியாதிகள் இருந்தாலும், கீழாநெல்லி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து சருமத்தில் தடவி ஊறவைத்து குளித்தால் சரும பிரச்சனைகள் நீங்கும்.
மருத்துவம்: கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
இந்த செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால், பல்வலியும் குணமாகும். ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால், ஈறு நோய்கள் குணமாகும். யாருமே விதைக்காமல், அதுவாகவே மிக சாதாரணமாக வளர்ந்து, மனிதர்களின் அத்தனை உள்ளுறுப்புகளை பத்திரப்படுத்தவும், பாதுகாக்கவும் பேருதவி புரிந்து கொண்டிருக்கிறது இந்த கீழ்க்காய் நெல்லி என்ற கீழாநெல்லி.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications