Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர்.. இது இவ்ளோ நாளா தெரியாம போச்சே.. இந்த இலையை தேய்த்தாலே கருகருன்னு முடி வளரும்.. செம சீக்ரெட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூக்களையும் மருந்தாக பயன்படுத்துவது நம்முடைய பழக்கவழக்கங்களில் இருந்து வருகிறது.. அதில் ஒன்றுதான் இந்த மரிக்கொழுந்து. வாசம் மிக்க மரிக்கொழுந்து அப்படியென்ன மருத்துவத்தை தந்துவிட போகிறது என்று நினைக்கிறீர்களா? இதை படியுங்கள்.

கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு இந்த மரிக்கொழுந்துவின் இலைகள், தண்டுகள் மூலம், மரிக்கொழுந்து அடர்த்தியாக வளரக்கூடியவை.. நிறைய கிளைகளுடன் காணப்படும்.. சாம்பல் நிறம் கலந்த பச்சை வண்ண இலைகளை கொண்டது.

Health Benefits of Marikkozhunthu Leaf and Do you know Marikozhunthu Leaf is the Excellent Medicine

வாசனை பூக்கள்: வெறும் வாசனைக்காக வண்ண மலர்களில் வைத்து கட்டப்படும் அலங்கார பூ மட்டுமில்லை.. நோய்களை ஓட ஓட விரட்டும் மகத்துவம் நிறைந்தது இந்த மரிக்கொழுந்து.

மரிக்கொழுந்து இலைகளை பறித்து சுத்தம் செய்து, அரைத்து விழுதுபோல எடுத்து கொண்டு, ஒரு டம்பர் நீரில் கலந்து சிறிது நேரம் ஊறவைத்து குடித்தால், வயிற்று வலி பறந்தோடிடும்.. சருமக்கோளாறுகள் இருந்தாலும், அதனை இந்த மூலிகை விழுது நீர் சரிசெய்யும்.. குடலை சுத்தம் செய்வதுடன், நீர்க்கடுப்பு பாதிப்புகளையும் தணிக்கக்கூடியது.

தலைவலி அவதி: தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கும் இந்த விழுது உபயோகமாகும்.. ஒரு வாணலியில் நல்லெண்ணை விட்டு, அதில், இந்த அரைத்த விழுதையும், சிறிது சுக்குத்தூளையும் கலந்து ஆறவிட வேண்டும். பிறகு இதை எடுத்து, நெற்றியில் பற்று போல தடவினால், தலைவலி நீங்கும்.

கை கால் மூட்டுவலி இருப்பவர்களும் இந்த விழுதை பயன்படுத்தலாம், இந்த மரிக்கொழுந்து எண்ணை விழுதை தடவினால் நிவாரணம் கிடைக்கும். சொரியாசிஸ் பிரச்சனை இருப்பவர்களும் இந்த விழுதை பயன்படுத்தலாம். வாணலியில் சிறிது தேங்காய் எண்ணெய்யை ஊற்றி, இந்த விழுதை அதில் கொட்டி, தைலம் போல வரும்வரை காய்ச்ச வேண்டும். பிறகு ஆறவைத்து பாதிப்புள்ள இடங்களில் தடவிவந்தால், சொரியாசிஸ் போன்ற தோல் வியாதிகளும் நீங்கும்.

கஷாயம்: மரிக்கொழுந்தை கஷாயம் போல காய்ச்சி குடித்து வந்தால், புற்றுநோய்களை நம்மை அண்டவிடாது.. செம்பட்டையான தலைமுடி உள்ளவர்கள், மரிக்கொழுந்து இலைகளை, நிலாவாரை இலைகளுடன் கலந்து அரைத்து, தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால், செம்பட்டை நீங்கி, கருப்பு முடிகள் வளர ஆரம்பிக்கும்.

அழகுசாதன பொருட்களிலும், வாசனை திரவியங்களிலும், மரிக்கொழுந்துவுக்கு தனி உடம் உண்டு.. இந்த மரிக்கொழுந்துவை வாசனை எண்ணை தயாரிப்பிலும், வாசனை மலர் மருத்துவத்திலும், பயன்படுத்துகிறார்கள்.

அதேபோல, சரும பிரச்சனைகளுக்கு முதல் தீர்வாக இருப்பது இந்த மரிக்கொழுந்துதான்.. சருமத்தில் ஏற்படும் தொற்றுகள், அரிப்புகள், பூஞ்ஜை தொற்றுகள், வீக்கங்கள், கட்டிகள், புண்கள் இருந்தால், அவைகள் அனைத்தையுமே அடியோடு விரட்டும் சக்தி இந்த மரிக்கொழுந்துவுக்கு உண்டு..

Health Benefits of Marikkozhunthu Leaf and Do you know Marikozhunthu Leaf is the Excellent Medicine

தூக்கமின்மை: தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், ஒரு கொத்து, மரிக்கொழுந்து இலைகளை தண்டுடன் சேர்த்து தலையணைக்கு அடியில் வைத்து படுத்தால், நிவாரணம் கிடைக்கும். உளைச்சலையும், மன வேதனையும் போக்கி மனதை அமைதிப்படுத்துகிறது.. மன நிலையை சீராக்குகிறது இந்த மரிக்கொழுந்து. சிறுநீரக கோளாறுகளை தீர்க்கிறது.

இந்தியாவிலேயே பெங்களூரில் இந்த மரிக்கொழுந்து நன்றாக விளைகிறது. நம்முடைய மதுரை, தேனி, திண்டுக்கல் பகுதிகளிலும் மரிக்கொழுந்து பயிரிடப்படுகிறது.. வெளிநாடுகளில் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம்.

அழகுசாதன பொருட்கள்: மரிக்கொழுந்துவின் மகத்துவம் வெளிநாடுகளில் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான், இங்கிருந்து ஏராளமான மரிக்கொழுந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன.. இவைகளை அழகுசாதன பொருட்களில் அவர்கள், நம்மைவிட பலவகைகளில் அதிகமாகவே பயன்படுத்தி கொள்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+