தினந்தோறும் பூலாங்கிழங்கு.. சரும ஆரோக்கியம், மினுமினுப்புக்கு கிச்சிலி கிழங்கு, கஸ்தூரி மஞ்சள் நன்மை
சென்னை: எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லாத, சருமத்துக்கு நன்மையையும், ஆரோக்கியத்தையும், மினுமினுப்பையும் தரக்கூடிய 3 விதமான கிழங்குகள் பற்றி தெரியுமா? இந்த கிழங்குகளை எப்படி பயன்படுத்துவது? இதன் சிறப்புகள் என்ன?
இதில் கஸ்தூரி மஞ்சள் முதன்மையானது.. உடலில் அடிபட்டுவிட்டால் காயங்களுக்கும், கட்டிகளுக்கும், சருமத்தில் தோன்றும் தேமலுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், இந்த மஞ்சள் பயன்படும்.

கஸ்தூரி மஞ்சள்: எனவேதான், அதனால்தான், வாசனை பவுடர்களிலும், குளிக்க பயன்படுத்தும் தைலங்களிலும், மூலப்பொருட்களாக கஸ்தூரி மஞ்சள் சேர்க்கப்படுகிறது. பாக்டீரியா எதிர்ப்புத்தன்மை நிறைய இருப்பதால், முகத்திலுள்ள பருக்கள், கருமை, சின்ன சின்ன முடிகளை நீக்கி, சூரியஒளியால் ஏற்படும் சேதத்தையும் கட்டுப்படுத்துகிறது..
இறந்த செல்களை எதிர்த்து போராடி, சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்கிறது. இதனால், எண்ணெய் சுரப்பிகளால், ஏற்படும் கட்டிகள், கரும்புள்ளிகளையும் இந்த மஞ்சள் நீக்குகின்றன. ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்திருப்பதால், புற்றுநோய் உண்டாக்கும் அபாயம் ஏற்படாமல் சருமத்தை இந்த கஸ்தூரி மஞ்சள் பாதுகாக்கிறது.
பூலாங்கிழங்கு: அடுத்ததாக பூலாங்கிழங்கு அல்லது கிச்சிலி கிழங்கு வகைகளை சொல்லலாம். வெள்ளை மஞ்சள் எனப்படும் இந்த கிழங்குகளை, மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் நீங்கும். இந்த கிழங்கை உலர்த்தி இடித்து பவுடராக்கி, சலித்து வைத்து, உடலுக்கு தேய்த்து குளிக்கலாம்.
முகப்பரு, கரும்புள்ளிகளுக்கு தரப்படும் சிகிச்சைகளிலும், தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை தருவதற்கும் இந்த கிழங்குதான் பயன்படுகிறது. குறிப்பாக, இந்த கிழங்கின் வேர்ப்பகுதிகள்தான் மருந்தில் சேர்க்கப்படுகின்றன. வெயில் காலங்களில் வேர்க்குரு, நமைச்சல், அரிப்பு, வியர்வை நாற்றம் போன்ற பிரச்சனைகளை கிழங்கை பவுடர் போல பயன்படுத்தி தீர்வு காணலாம்.. அந்த அளவுக்கு மிகச்சிறந்த கிருமி நாசினியாக கிச்சிலி கிழங்குகள் பயன்படுகின்றன.
ஆவாரம் பூ: கோரைக்கிழங்கு வகைகளையும் சருமத்துக்கு உபயோகப்படுத்தலாம.. பாசிப்பருப்பு, கடலை மாவு, ரோஜா மொட்டு, வெட்டி வேர், கோரைக் கிழங்கு மற்றும் கஸ்தூரி மஞ்சளுடன் ஆவாரம்பூவை சம அளவு சேர்த்து சிறிதளவு வசம்பும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். சோப்புக்குப் பதில் இந்த மூலிகைக் கலவையை தேய்த்துக் குளிப்பதன் மூலம் சருமம் நிறமாக மாறும். அத்துடன் சருமம் சுத்தமடைந்து தேமல், கரும்புள்ளிகள் மறையும். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சருமத்தில் சுருக்கங்கள் குறையும்.












Click it and Unblock the Notifications