ஒரே விதை போதும்.. உடல் எடை விறுவிறுனு குறையும்.. இந்த மேஜிக் இலையை இப்படி பயன்படுத்துங்க.. சூப்பர்
சென்னை: விதைகள் எப்போதுமே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவை. சம்பந்தப்பட்ட மரத்தின் மொத்த சத்துக்களை உள்ளடக்கியிருப்பதே அதன் விதைகள் என்பதை மறுக்க முடியாது. அதில் மிக முக்கியமானதுதான், சப்ஜா விதைகள்..
சப்ஜா விதைகளை, ஃபலூடா விதைகள் என்று அழைப்பார்கள்.. செடி துளசி இனத்துடன் சேர்ந்தது என்பதால், இதனை திருநீற்றுப்பச்சை என்றும் சொல்வார்கள். காரணம், இந்த செடியிலிருந்துதான் சப்ஜா விதைகள் கிடைக்கின்றன.

அதனால்தான், சிலர் சப்ஜா விதையும், துளசி விதையும் ஒன்று என்பார்கள்.. ஆனால், சியா விதைகளை சப்ஜா விதைகள் சற்று பெரியதாக இருக்கும்.. சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு டபுள் மடங்கு உள்ளது.. ஆனால், துளசி விதைகளை விட நார்ச்சத்து குறைவாக இருக்கும்.
கொழுப்பு: மிகவும் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது சப்ஜா விதைகள்.. நார்ச்சத்து நிறைந்தது.. இரும்பு, கால்சியம், மெக்னீசியம் போன்ற கனிமங்கள் அடங்கியது.. ஒமேகா-3 கொழுப்பு கலந்திருக்கிறது.. மொத்தத்தில், அபரிமிதமான ஊட்டச்சத்தினை அடக்கி வைத்திருப்பதுதான், இந்த சப்ஜா விதைகள். நார்ச்சத்து நிறைந்த பொருள் என்பதால், நம்முடைய உடலில் உள்ள தேவையற்ற நீரையேற்றுகிறது.
சப்ஜா விதைகள் எப்போதுமே தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்... உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த விதைகள் மிகவும் நன்மைதரக்கூடியது.. ஒரு ஸ்பூன் சப்ஜா விதையில் 7 கிராம் நார்ச்சத்து இருக்கிறதாம்.. அதனால்தான், எடை இழப்புக்கு மிகச்சிறந்த உணவாக இது பார்க்கப்படுகிறது. அத்துடன் பசியையும் கட்டுப்படுத்தக்கூடியது..
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டால், சர்க்கரை அளவு குறையும்.. அதேபோல, தினமும் ஒரு ஸ்பூன் நீரில் ஊறவைத்து சாப்பிட்டாலும், உடல் எடை மெல்ல குறைய தொடங்கும்.
இந்த விதைகள் பித்தத்தை நீக்கக்கூடியது.. மலச்சிக்கல் உள்ளவர்களும், இந்த சப்ஜா விதையை பாலில் கலந்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.. குடல் இயக்கத்தை ஊக்குவிப்பதால், மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.. ரத்தப்போக்கு பிரச்சினைகள் உள்ள பெண்களுக்கும், வெள்ளைப்படுதல் பிரச்சனைக்கும் இந்த விதைகள் தீர்வாகின்றன. புற்றுநோய்கள் மற்றும் இதய நோய் பிரச்சனைகளை தடுக்க இந்த விதைகள் தூண்டுகோலாகின்றன..
சப்ஜா விதைகள்: சப்ஜா விதை மட்டுமல்ல, சப்ஜா இலையும்கூட மருத்துவ குணம் வாய்ந்தது.. இந்த இலையை சாப்பிட்டால் தலைபாரம், மூக்கடைப்பு நீங்கும்.. அல்லது இந்த இலையை நீரில் கொதிக்க வைத்து குடித்தாலும், சளி, ஜூரம், தலைவலி போன்றவற்றிற்கு நிவாரணம் கிடைக்கும். இந்த இலையை அரைத்து சருமத்தில் பூசினால், சரும பிரச்சனைகள் நீங்கும். சருமத்துக்கு ஆரோக்கியமும் கூட... அளவுக்கு அதிகமாக குளிர்ச்சி அதிகமாகி, காதுவலி ஏற்பட்டாலும்கூட இந்த சாற்றினை பயன்படுத்தலாம்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications