சேப்பங்கிழங்கில் மறைந்திருக்கும் அந்த அதிசயம்.. வாழ வைக்கும் வழ வழா சேனைக்கிழங்கு .. அடேங்கப்ப்பா
சென்னை: உருளைக்கிழங்கை சாப்பிடுவதில் காட்டும் ஆர்வம், இந்த சேப்பங்கிழங்குகளுக்கு நாம் காட்டுவதில்லை.. ஆனால், இதன் பலன்களும், மருத்துவ குணங்களும் தெரிந்தால், இந்த கிழங்கை விடவே மாட்டீங்க.
சேப்பங்கிழங்கு சிலர் சேனை என்பார்கள்.. சிலர் சோம்பு என்பார்கள்.. சிலர் சாமைக்கிழங்கு என்பார்கள்.. சிலர் சேமங்கிழங்கு, சேமைக்கிழங்கு என்பார்கள்..

சேப்பங்கிழங்கு: இந்த வழவழப்பான தன்மை கொண்ட சேப்பங்கிழங்கை பொறுத்தவரை, கிழங்கு மட்டுமல்ல, அதன் இலைகளும் சத்து வாய்ந்தவை என்பது ஆச்சரிய தகவல்..
இலை மட்டுமல்ல, சேப்பங்கிழங்கின் முழு செடியுமே, ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்தவை. சேப்பங்கிழங்கின் முழு செடியுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. 132 கிராம் வேகவைத்த ஒரு கப் சேப்பங்கிழங்கில் 187 கலோரிகள் இருக்கிறதாம்.. புரதம், கொழுப்பு, தாமிரம், மாங்கனீசு, பொட்டாசியம் போன்ற இதர சத்துகளும் இதில் அடங்கும்.
சமீபத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள், புற்றுநோய் ஆராய்ச்சியை மேற்கொண்டிருந்த நிலையில், அந்த ரிசல்ட்டையும் வெளியிட்டிருந்தனர்.. அதில், சேப்பங்கிழங்கில் காணப்படும் கிரிப்டோக்சாந்தின் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் வாய்ப்பை குறைப்பதில் நேரடி தொடர்பு கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாம்.
புற்றுநோய்: இது பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய்க்கு எதிராக பாதுகாக்கும். பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டிஆக்சிடெண்ட் இந்த சேப்பங்கிழங்கில் அதிகம் உள்ளதால், கண் பார்வையை சிறப்பாக்குகிறது. அத்துடன், கண்புரை போன்ற பாதிப்புகளையும் தடுத்து நிறுத்துகிறது.
பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்கள் இந்த கிழங்கில் உள்ளதால் பற்களுக்கும் எழும்புகளுக்கும் அதிக வலுவை தருகிறது.. நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமான கோளாறு பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கிறது.. நார்ச்சத்து அதிகம் உட்கொள்வதால் வயிறு நிரம்பியவாறே இருக்கும்.. இதனால் உடல் எடையும் குறையக்கூடும்.
குடல் புண்கள்: குடல் புண்கள் இருந்தால், சேப்பங்கிழங்கு சாப்பிட்டால் போதும்.. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.. நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த கிழங்கு ஒரு வரப்பிரசாதம்..
சேப்பங்கிழங்கில் வைட்டமின் A, E போன்றவை உள்ளதால், சருமத்துக்கும் இந்த கிழங்கு நன்மை தருகிறது.. சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் வரவிடாமல் பாதுகாக்கிறது. அதேபோல, சருமத்தில் உண்டாகும் காயம், கொப்பளம் இருந்தால், அதற்கும் தீர்வு தந்துவிடும் இந்த சேப்பங்கிழங்கு. சேப்பங்கிழங்கிலிருக்கும் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிஜென்டுகள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்து உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது.
எப்படி உபயோகிப்பது: சேப்பங்கிழங்கை எப்படி வேண்டுமானாலும் சமைக்கலாம்.. மசியல் செய்யலாம். பொரியல் செய்யலாம்.. மீன் போல வறுத்து சாப்பிடலாம்.. வேகவைத்து காரக்குழம்பு, புளிக்குழம்பு செய்யலாம். ஆனால், நன்றாக வேகவைத்து சாப்பிட வேண்டும்.. கட்டாயம், புளியை சேர்த்துதான் சமைக்க வேண்டும்..
மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த செடியை வீடுகளில் வளர்க்கலாம்.. சேப்பங்கிழங்கை வாங்கி வந்து, வீட்டிற்கு வெளியே அல்லது வீட்டிற்குள்ளே மண்ணில் புதைத்துவைத்தால் மிக எளிதாக வளர்ந்துவிடும்.. இதன் இலைகளும் பார்ப்பதற்கே கவர்ச்சிகரமாக இருக்கும். சிலர் கழிவுநீர் செல்லும் இடங்களான கிச்சன், பாத்ரூம்களிலும் நட்டு வைப்பார்கள். இதனால் நச்சுக்கள் ஈர்க்கப்பட்டுவிடும்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications