கொட்டிக் கிடக்குது கொண்டைக்கடலையில் கோடி நன்மைகள்.. எலும்பு உறுதிக்கு ஊறவச்ச கருப்பு கொண்டைக்கடலை
சென்னை: எலும்புகளுக்கு உறுதி தருவது முதல் மார்பக புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் போராடக்கூடியது வரை அனைத்து முதன்மையான பணிகளையும் செய்யக்கூடியதுதான் கொண்டைக்கடலை.. இந்த பயிரிலுள்ள சத்துக்கள் என்னென்ன? நன்மைகள் என்ன தெரியுமா?
கொண்டை கடலையில், புரோட்டீன், மாவுச்சத்து, கலோரி, ஃபோலிக் ஆசிட், நார்ச்சத்து, தாது உப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, மெக்னீஷியம், சோடியம், பொட்டாஷியம், தாமிரம், துத்தநாகம் அடங்கியிருக்கின்றன.. நார்ச்சத்துக்களின் சங்கமம் என்றே சொல்லலாம். ஏனென்றால், 1 கிண்ணம் கொண்டை கடலையில், 12.5 கிராம் நார்ச்சத்து உள்ளது.

முளைக்கட்டிய கொண்டைக்கடலை
எனவேதான் ஜிம்முக்கு போகிறவர்கள், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், இந்த கொண்டைக்கடலையை கட்டாயம் உணவில் சேர்த்து கொள்கிறார்கள். கருப்பு, வெள்ளை என இரு வகையான கடலைகளும் நல்லதுதான் என்றாலும், சிறிய அளவிலான கறுப்பு கொண்டைக் கடலையில், ஏராளமான நார்ச்சத்து உள்ளதாம். எனவே, இந்த கொண்டைக்கடலையை முளைக்கட்டி சாப்பிட்டால், கொழுப்பு விரைந்து கரைகிறது.
இந்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண சக்தியை மேம்படுத்த உதவுகிறது. உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.. இதனால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக உள்ளது..
மலச்சிக்கலை போக்கும் கடலை
கருப்பு கொண்டைக்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலை போக்க முடியும்.. கொண்டைக்கடலை நாள்பட்ட நோய்களை விரட்டவும் உதவுகிறது. சருமம் வயதாகுவதையும் முன்கூட்டியே தடுக்கிறது. ஏனென்றால், இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகின்றன.
கொண்டைக்கடலையிலுள்ள கால்சியம் சத்துக்கள் எலும்பு மற்றும் பற்களின் வலிமையை அதிகரிக்க செய்கிறது.. அதனால்தான், வளரும் பிள்ளைகளுக்கு இந்த கடலையில் சுண்டல் செய்து சாப்பிட தருவது நல்லது என்பார்கள்.
ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை தடுத்து, வயிற்றில் குடல் பகுதியில் வரும் புற்றுநோயை தடுக்கக்கூடிய தன்மை, இந்த கொண்டைக்கடலைக்கு உண்டு.. சிறிதளவு கொழுப்பு இருக்கிறதென்றாலும், நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள், சாப்பிடக்கூடிய பயிறு வகையாகும். கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளுக்கு கொண்டைக்கடலை மிகவும் நல்லது.
நார்ச்சத்து நிறைந்த கொண்டைக்கடலை
அதுமட்டுமல்லாமல், தினந்தோறும் 30 கிராம் நார்ச்சத்து எடுத்துக்கொண்டால், டைப் 1 நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் வீக்கத்தை குறைப்பதாக 2014 ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்விலும் நிரூபிணமாகியிருக்கிறது.
ரத்தசோகை உள்ளவர்களுக்கு கைகொடுத்து உதவுகிறது கொண்டைக்கடலை.. எனவே, கொண்டைக்கடலையை முளைகட்டி சாப்பிடுவதால் கூடுதல் பலன் பெறலாம்.. அல்லது இந்த கடலையை அவித்து அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும்..
தலைமுடி உதிர்வு இருந்தால், புரோட்டீன் நிறைந்துள்ள கொண்டைக்கடலையை சாப்பிட்டு வரலாம்.. அடிக்கடி சமையலில் கொண்டைக்கடலையை சேர்த்து வந்தால், தலைமுடியும் சீக்கிரத்தில் நரைக்காது என்றும் சொல்வார்கள்.
தலைமுடி, மூலநோய
கொண்டைக்கடலையில் நார்ச்சத்து அதிகம் என்பதால், இரவில் சாப்பிடுவதை தவிர்த்து, காலையில் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.. சிறுநீரகக்கோளாறு இருப்பவர்கள், கண்டிப்பாக இதனை தவிர்க்க வேண்டும். அதேபோல, வாத நோய் உள்ளவர்கள், மூல நோய் உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்களும் இதனை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், அஜீரணம் ஏற்படும்.. வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படலாம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications