கதையை முடிக்க அமெரிக்கா போடும் பிளான்.. கறார் காட்டும் ஈரான்! டிரம்புக்கு செக்!

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஈரான்-அமெரிக்கா இடையே போடப்பட்ட தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கட்டுப்படுத்த ஒப்புக்கொண்டது. அதற்கு பதில், ஈரான் மீது போடப்பட்ட சர்வதேச பொருளாதார தடைகள் நீக்கப்பட வேண்டும். ஆனால், அமெரிக்கா இதை செய்யாமல் தொடர்ந்து அணுசக்தி விஷயத்தில் ஈரானை கட்டுப்படுத்துவதாகவும், இனி இந்த கதை நடக்காது என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானிடம் அணு ஆயுதத்தை உருவாக்கும் டெக்னாலஜி இருக்கிறது என்று சொல்லிதான் அமெரிக்கா இந்த போரை தொடங்கியது. சரி அமெரிக்கா கேட்பதை போல அணு ஆயுத டெக்னாலஜியை நாங்கள் விட்டுக்கொடுக்க ரெடி என்று ஈரான் வழிக்கு வர.. அதற்கு பதிலாக, சர்வதேச அளவில் எங்கள் மீது போடப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று ஈரான் கேட்டது.

US Iran trump

நியாயமான கேள்விதான். அமெரிக்காவும் வேறு வழியின்றி இதை ஏற்றுக்கொண்டது. முதற்கட்ட ஒப்பந்தத்தின்படி ஈரான் சொன்னதை செய்தது. ஆனால் அமெரிக்கா தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இப்படி இருக்கையில், "மேற்கத்திய நாடுகள் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஈரான் மீது தொடர்ந்து புதிய தடைகளை விதித்து வருகிறது" என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார்.

எனவே, ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட இடைக்கால விதிகளை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் முதலில் செயல்படுத்த வேண்டும்; அதன் பிறகே அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை நடக்கும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் இழுபறி நீடிக்கிறது.

ஈரான் விவகாரத்தின் பின்னணி

2015-ஆம் ஆண்டு ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே 'கூட்டு விரிவான செயல்பாட்டுத் திட்டம்' (JCPOA - Joint Comprehensive Plan of Action) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. 2018-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறி, ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார். அதன் பிறகு இந்த ஒப்பந்தம் முற்றிலும் முடங்கியது.

அமெரிக்காவின் விலகலைத் தொடர்ந்து, ஈரான் தனது அணு உலைகளில் யுரேனியம் செறிவூட்டும் பணியை 60% மற்றும் அதற்கு மேல் அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது. இது அணு ஆயுதம் தயாரிப்பதற்கான மிக நெருக்கமான அளவாகும் என சர்வதேச அணுசக்தி முகமை எச்சரித்துள்ளது. இந்தத் திடீர் முரட்டுத்தனமான நிலைப்பாடு, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

இதுதான் அமெரிக்கா வைக்கும் வாதம். ஆனால், புற்றுநோய் சிகிச்சைக்கும் யுரேனியத்தை 60% அளவுக்கு செறிவூட்ட வேண்டும். எனவே நாங்கள் மருத்துவ பயன்பாட்டுக்குக்கு யுரேனியத்தை பயன்படுத்துகிறோம் என்று ஈரான் கூறுகிறது. மட்டுமல்லாது, எங்கள் சொந்த நாட்டின் பாதுகாப்புக்கு நாங்கள் அணு ஆயுதங்களை உருவாக்கினால் என்ன தப்பு? என்றும் கேள்வி கேட்கிறது.

ஈரானின் கேள்வியில் நியாயம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காதான் உலக அளவில் அதிக அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடு. அப்படி இருக்கையில் அமெரிக்கா அணு ஆயுதத்தை பற்றி பேசலமா? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

நீங்க சொல்லுங்க மக்களே! அமெரிக்காவுக்கு இதைப்பற்றி பேச உரிமை இருக்கிறதா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+