அத்திப்பழத்தை நீரில் ஊறவெச்சு சாப்பிடலாமா? தேனில் ஊறிய அத்திப்பழம்.. மூலம், அனீமியாவுக்கு பெஸ்ட்
சென்னை: அத்திப்பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா? அத்திப்பழத்தை வெறுமனே சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் என்னென்ன? தேனில் ஊறவைத்து சாப்பிட்டால் என்னாகும்? அல்லது தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால் என்னாகும்? சுருக்கமாக பார்ப்போம்.
அத்திப்பழத்தில், இரும்புசத்து, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், தயாமின், நார்சத்து, வைட்டமின் C, A, K, E, K நிறைந்திருக்கின்றன. உலர் அத்திப்பழத்தில் அதிகமான நார்ச்சத்துக்கள் உள்ளன... நம்முடைய உடலுக்கு தேவையான ஏராளமான வைட்டமின்கள் உள்ளன.. அத்திப்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அந்த தண்ணீரை குடிக்கலாம்.

அத்திப்பழம்: அத்திப்பழம் ஊற வைத்த தண்ணீர் பருகுவதால் ஏராளமான பலன்கள் கிடைக்கின்றன. நீரில் இரவு முழுவதும் அத்திப்பழத்தை ஊறவைத்தால் போதும்.. அத்திப்பழத்திலுள்ள நார்ச்சத்து உடல் எடை குறைக்க உதவுகிறது.. இதனால் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் முடிகிறது.. மெடபாலிஸத்தை துரிதப்படுத்தி சரியான உடல் எடையை பராமரிக்கவும் தூண்டுகிறது. இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகின்றன..
ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து உள்தளால், பெண்கள் மாதவிடாய் காலத்தில் அத்திப்பழ நீரை எடுப்பதால், ஹார்மோன்கள் சமநிலையாகின்றன. வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகளும் தீர்வதுடன், ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
Bகால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம் போன்றவை அத்திப்பழத்தில் உள்ளதால், எலும்புகள் வலுவாகின்றன.. அதுமட்டுமல்ல, துத்தநாகம், மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற கனிமங்களின் கலவை உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியமான கருவுறுதலுக்கு தூண்டுகோலாகின்றன.
இரட்டிப்பு பலன்: அதேபோல, தேனில் அத்திப்பழத்தை ஊறவைத்து சாப்பிடும்போது பலன்கள் இரட்டிப்பாகின்றன. உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களில் 9 வகையான அமினோ அமிலங்களும் தேனில் உள்ளது. மேலும், வைட்டமின் C சத்துக்களும் அதிகம்.. சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் ஆகிய தாதுகள் தேனில் உள்ளதால், புற்றுநோய் செல்களின் பெருக்கத்தைத் தடுத்து நிறுத்தும் அற்புத மருந்தாகத் தேன் செயல்படுகிறது.
சொத்தை இல்லாத, புழுக்கள் இல்லாத தரமான 20 அத்திப்பழங்களை கழுவி சிறு சிறு துண்டாக நறுக்கி 30 ஸ்பூன் சுத்தமான தேனை ஊற்றி, பழத்தை மூழ்க வைத்துவிட வேண்டும். இதை தினமும் காலை, மாலை வெயிலில் அரைமணி நேரம் வைத்து கலந்து விட்டு வர வேண்டும்.. ஈரமான கைகளையோ, வேறு வேறு கரண்டிகளையோ அதில் பயன்படுத்தாமல் இருந்தே, இந்த அத்திப்பழம் கெட்டுப்போகாமல் நன்றாக இருக்கும்.
மலச்சிக்கல்: தேன், அத்திப்பழம் இரண்டுமே குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கக்கூடியவை. மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், தொடர்ந்து 21 நாட்கள் தினமும், இந்த ஊறவைத்த அத்திப்பழத்தின் 2 துண்டுகளை சாப்பிட்டு வந்தால் நிவாரணம் பெறலாம். ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு இது சிறந்த மருந்தாகிறது.. உள் மூலம், வெளி மூலத்தின் உபாதைகளும் குறையும்.
ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை தூண்டக்கூடியது இந்த தேனில் ஊறவைத்த அத்திப்பழம்.. கல்லீரல் வீக்கத்தை குறைக்கக்கூடிய தன்மை அத்திப்பழத்துக்கு உண்டு.. தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், நம்முடைய சருமத்திலுள்ள எரிச்சலை ஆற்றி, பராமரிப்பை தருகிறது.. அத்திப்பழத்திலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தோல் அழற்சியை குறைக்க செய்கிறது. எனினும், தேனுடன் அத்திப்பழத்தை சேர்த்து சாப்பிட்டால் சிலருக்கு அலர்ஜி வரலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications
