குடல்வால் தொற்று.. எள்ளுடன் நெய் சேர்த்து சாப்பிடலாமா? நிறைய எள் விதைகள் கேன்சருக்கு வழிவகுக்குமாமே
சென்னை: எள் விதைகள் உடலுக்கு நல்லதா? எள்ளை வெல்லத்துடன் அல்லது நெய்யுடன் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? எள் அதிகமாக சாப்பிடுவதால் உடலில் பிரச்சனைகள் ஏற்படுமா? அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
எள் விதைகளை பொறுத்தவரை, உடல் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது.. படபடப்பு தன்மையை குறைத்து, மனதை சாந்தப்படுத்தக் கூடியவை.. சிறுநீர் தாராளமாக பிரிய எள் விதைகள் உதவுகின்றன.. இதனால், சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதும் தடுக்கப்படுவதுடன், சிறுநீர் கடுப்பு, சிறுநீர் எரிச்சலும் தணியக்கூடும்.

வயிற்று கழிவுகள்: வயிற்று கழிவுகளை வெளியேற்றி, குடல் ஆரோக்கியத்தை பெருக்க செய்யக்கூடியது எள் விதைகள்.. மூலநோய் உபாதை இருந்தால், எள்ளு விதையை லேசாக வறுத்து தூள் செய்து, நெய்யுடன் கலந்து சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். எள் இலைகளுடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டாலும், ரத்த மூலநோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.
அதேபோல 1 ஸ்பூன் வறுத்த எள்ளுடன், 1 ஸ்பூன் வெல்லத்தை சேர்த்து சாப்பிடும்போது, இதயத்துக்கு நல்லது.. காரணம், ஏனென்றால், எள் மற்றும் வெல்லம் இரண்டிலுமே நிறைவுறா கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால், இதயத்துக்கு வரக்கூடிய ஆபத்துகள் நெருங்குவதில்லை.
செரிமான பிரச்சனைகள்: எனினும், எள் விதைகளை அதிகமாக சாப்பிடக்கூடாது.. அழற்சி பிரச்சனையை சிலருக்கு ஏற்படுத்திவிடும்.. மேலும் இதிலுள்ள எண்ணெய் செரிமான பிரச்சனைகளை உண்டுபண்ணிவிடுவதுடன் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளையும் கொண்டுவந்துவிடுமாம்.
அதேபோல, எள் விதைகளை அதிகமாக சாப்பிட்டால், குடலுறுப்பில் அழற்சியை ஏற்படுத்தி குடலின் ஆரோக்கியத்தை பாதித்துவிடும்.. இதன்காரணமாக, குடலின் உட்சுவற்றில் சிறு சிறு பைகள் போல உருவாகி, கடுமையான வயிற்று வலி, வயிற்று பிடிப்புக்களை ஏற்படுத்திவிடும்.
குடல்வால் தொற்று: சிலசமயம், குடல்வாலில் தொற்று ஏற்படலாம்.. சிலசமயம் குடல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக ஆய்வுகளில் சொல்லப்பட்டுள்ளது.. ஆய்வு ஒன்றின் படி, ஒருவர் தினமும் 15 நேனோகிராமிற்கும் அதிகமான அளவில் எள்ளு விதைகளை சாப்பிட்டால், அது குடலை பெரிதும் பாதிப்பிற்குள்ளாக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. எள்ளு விதைகளின் அபாயகரமான பக்க விளைவு என்றால், அது இந்த குடல் புற்றுநோய்தான். இது மரணம்வரை கொண்டுபோய் விட்டுவிடலாம்.
அதேபோல, மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்கிறார்கள்.. அதாவது, மார்பக செல்களின் வளர்ச்சியை மேம்படுத்தக்கூடியவை.. அத்துடன், எள் விதைகளிலுள்ள கொழுப்புகள் மார்பக புற்றுநோயின் வளர்ச்சியுடன் தொடர்புடையது என்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.
கர்ப்ப காலம்: அதேபோல, மலச்சிக்கல் உள்ளவர்கள் இதை குறிப்பிட்ட அளவு சாப்பிடலாமே தவிர, அதிகமாக யார் சாப்பிட்டாலும், வயிற்றுப்போக்கு ஏற்பட்டுவிடுமாம். அதைவிட முக்கியமாக, கர்ப்ப காலத்தில் எள் விதைகளை சாப்பிடுவது சரியானதல்ல எனறு அறிவுறுத்துகிறார்கள். அதிகமாக எள் சாப்பிட்டால் கருச்சிதைவும் ஏற்படலாம். எனவே, குறைந்தபட்சம் கர்ப்பம் தரித்து அடுத்த 4 மாதங்களுக்காவது எள் விதைகளை சாப்பிடாமல் இருக்க வேண்டுமாம்.
எள்ளு விதைகள் சருமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை.. ஒருவர் எள்ளு விதைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது நல்லெண்ணெயை அதிகம் உணவில் சேர்த்துக் கொண்டாலோ, அவர்களுக்கு சரும அரிப்புக்கள் ஏற்படும் அபாயம் அதிகமாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications