"மாதவிடாய்".. அண்ணன் கேட்ட கேள்வி.. மலங்க விழித்த பெண்.. ரத்தக்கறையா? மலரும்போதே கருகிய மொட்டு.. ஐயோ
மும்பை: இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் நம் நாட்டில் நடந்திருக்கிறதா என்று தெரியவில்லை.. மிக கொடுமையான, அதேசமயம் நம்மால் ஜீரணிக்க முடியாத அளவுக்கு இந்த கொடுமை நடந்திருக்கிறது.
மும்பை அருகில் உள்ளது உல்லாஸ் என்ற நகரம்.. இங்கு சுமித் என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார்... இவர்களுடன், சுமித்தின் தங்கையும் வசித்து வருகிறார்..
அந்த பெண்ணுக்கு 12 வயது ஆகிறது.. இந்நிலையில் ஒருநாள், சுமித் தன்னுடைய தங்கையின் ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததை பார்த்தார்.. உடனே பதறிப்போய், இந்த ரத்தக்கறை எப்படி வந்தது என்று தங்கையை மிரட்டியிருக்கிறார்.

விழிப்புணர்வு: அந்த 12 வயது குழந்தை பூப்பெய்திருக்கிறாள்.. ஆனால், தான் வயதுக்கு வந்திருக்கிறோம் என்பதைகூட, சரியாக சொல்ல தெரியவில்லை... இதனால், அண்ணன் அப்படி கேட்டதுமே, என்ன பதில் சொல்வதென்று தெரியாமல், கூச்சத்தில் விழித்து இருக்கிறார்.. பதில் சொல்லாமல் தங்கை விழிப்பதை கண்டதுமே, அண்ணனுக்கு சந்தேகம் வந்துவிட்டது.
தன்னுடைய 12 வயது தங்கை, யாருடனோ பாலியல் உறவு வைத்துக்கொண்டதால்தான் ரத்தக்கரை படிந்திருப்பதாக சுமித் சந்தேகம் அடைந்தார்.. அந்த சந்தேகம், கோபமாக மாறியது.. உடனே தங்கையின் வாயில் துணியை வைத்து அடைத்துள்ளார்.. அதற்கு பிறகு, கட்டிப்போட்டு உதைத்துள்ளார்.. அப்போதும் ஆத்திரம் தீராமல் உடம்பெல்லாம் தீயால் சூடு வைத்திருக்கிறார்... இந்த ஒவ்வொரு சித்ரவதையிலும் அந்த பிஞ்சு அலறி அலறி துடித்தது.. உடம்பெல்லாம் நெருப்பு காயமும், ரத்தக்காயமும் அடைந்துள்ளார்..
அந்த சிறுமியின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்தனர்.. சிறுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. தீவிரமான சிகிச்சை சிறுமிக்கு தரப்பட்டது.. ஆனால் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்..
மாதவிடாய்: தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சுமித்திடம் விசாரித்தபோதுதான் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.. இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, சிறுமிக்கு முதல் முறையாக அப்போதுதான் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது... அதனால், ஆடையில் ரத்தக்கரை ஏற்பட்டுள்ளது.. சிறுமியும், விளையாட்டு தனமாக அதை கவனிக்காமல் இருந்திருக்கிறார்.. அண்ணன் கேட்டபோதும், அதுகுறித்து விளக்கம் சொல்ல தெரியவில்லை..
யாருடனோ சிறுமிக்கு பாலியல் தொடர்பு ஏற்பட்டு, தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டதால்தான் ரத்தக்கரை படிந்திருப்பதாக அண்ணன் சந்தேகப்பட்டிருக்கிறார்.. ஆத்திரம் அடைந்த சுமித், தங்கையின் வாயை பொத்தி தீ வகாயப்படுத்தியுள்ளார்.. அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்.. இந்த கொலையில் சுமித் மனைவிக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம் என்றனர்.. இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அம்மாவின் அரவணைப்பு : முதல் மாதவிடாய் குறித்து பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, தாய்மார்களின் இன்றைய கட்டாயமாக உள்ளது.. பருவம் வரும் முன்னே, அனைத்து பெண்களுக்கும் நடக்கும் இயல்பான ஒன்றுதான் இது என்பதையும் எடுத்து சொல்ல வேண்டியிருக்கிறது..
காரணம், ஒரு சம்பவம் நிகழ்ந்த பிறகு அது குறித்துப் பேசுவதும் பிறகு மறந்து விடுவதும் நம் இயல்பாக இருக்கிறது. மாதவிடாய் பற்றி விரிவாக விவாதிக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். சிறுமிகளை விட பெற்றோருக்கு அது குறித்த விழிப்பு உணர்வு இங்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.. இப்படி முன்கூட்டியே சொல்லி வைத்தால்தான், அவர்களுக்குள் புரிதல் ஏற்பட்டு பதட்டமின்றி முதல் மாதவிடாயை எதிர்கொள்ள முடியும்.. ஆனால், உயிரிழந்த இந்த 12 வயது பெண்ணுக்கு, குடும்பத்தில் பெண்கள் யாரும் அறிவுறுத்தவில்லை என்றே தெரிகிறது.
கருகிய மொட்டு: அதுமட்டுமல்ல, முதல் மாதவிடாய் ஏற்படும்போதும்சரி, அதற்கு பின்பும்சரி, தாயின் உதவியும், அரவணைப்பும் சிறுமிகளுக்கு அதிகம் தேவை என்பார்கள்.. ஆனால், இந்த பெண்ணோ, பூப்பெய்தபோதே உயிரை விட்டு விட்டாள்.. மலரும் முன்பேயே கருகிவிட்டாள்.... கல்யாணமாகி, மனைவியுடன் குடும்பம் நடத்தும் ஒரு அண்ணனுக்கு, இந்த அடிப்படை புத்திகூட இல்லாமல் போனது, பேரதிர்ச்சியாகவே இருக்கிறது..!!!












Click it and Unblock the Notifications