ஒல்லி ஒல்லியா ஆகணுமா.. அந்த 4 விஷயத்தையும் டயட்ல சேருங்க.. சீக்கிரம் எடை குறைக்கலாம்.. ஜஸ்ட் ட்ரை
சென்னை: உடல் எடை குறைய வேண்டும் என்றால், பச்சை காய்கறிகளும், உடற்பயிற்சியும் மிக மிக அவசியம்.. இவைகளை தவிர்த்துவிட்டு, உடல் எடையை குறைப்பது சாத்தியமும் கிடையாது.
பச்சை காய்: எனினும், அவைகளுடன் சேர்ந்து ஒரு சில டிப்ஸ்களையும் பின்பற்றினால், விரைவில் எடைகுறைய உதவியாக இருக்கும்.. அதில் ஒன்றுதான்.. இளநீரை போன்ற நீர்க்காய்.. இதை சமைத்து சாப்பிடுவதை விட, பச்சையாக சாப்பிடுவதுதான் நல்லது.. உடலுக்கு குளிர்ச்சியானது.. சமைக்கும்போது, இதிலுள்ள பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய உப்புகள் அழிந்துவிடுகிறது.

வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து. பொட்டாசியம் நிறைந்துள்ளன.. 100 கிராம் வெள்ளரிக்காயில், 96 சதவீதம் ஈரப்பதம் இருக்கிறது.. மற்ற 4 சதவீதத்தில் உயர்தரமான புரதம், கொழுப்பு, மாவுச்சத்து,தாது உப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின் "பி' போன்றவை உள்ளன.. ஓரளவு வைட்டமின் "சி'யும் இருக்கிறது.
உடல்எடை: உடல் எடை குறைக்க வேண்டுமானால், இந்த காயை தாராளமாக சாப்பிடலாம்.. இதில் கலோரிகள் மிக மிக குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க பேருதவி புரிகிறது. வெள்ளரி பிஞ்சுவில் நார்ச்சத்து நிறைய இருக்கிறது.
இதை சாப்பிடும்போது, வயிறு நிரம்பி நீண்ட நேரம் பசி எடுக்காது... அத்துடன் தொப்பையை குறைக்கவும் இந்த காய் உதவுகிறது. மதிய அல்லது இரவு ஏதாவது ஒருவேளையில், வெள்ளரிக்காய் மற்றும் வெள்ளரி பிஞ்சு சாலட் செய்து சாப்பிட்டால், தொப்பை குறையும் என்கிறார்கள். இந்த காயில், ஸ்டேரோல் என்ற பொருள் இருப்பதால், நம்முடைய உடம்பில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைய செய்கிறது..
அதேபோல, தேன் + இலவங்கப்பட்டை இரண்டையும் தண்ணீரில் கலந்து குடித்தால் உடல் எடையில் நல்ல மாற்றம் தெரியும் என்கிறார்கள்.. அதாவது ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, ஒரே ஒரு நீளமான இலவங்கப்பட்டை சேர்க்க வேண்டும்.. அல்லது அரை ஸ்பூன் இலவங்கப்பட்டை பவுரை சேர்க்கலாம். இப்போது நன்றாக கொதிக்க வைத்து இறக்கி ஆறவிட வேண்டும்.
எலுமிச்சம் சாறு: கடைசியாக தேன், எலுமிச்சம் சாறு கலந்து குடித்து வந்தால், உடலுக்கு மிகவும் நல்லது.. முக்கியமாக தொப்பையிலுள்ள கொழுப்பை குறைக்க இந்த பானம் பயன்படுகிறது.
தேன், இலவங்கப் பட்டை இரண்டிலுமே நோயை குணப்படுத்தும் பல்வேறு மருத்துவங்க்ள் உள்ளன.. இதில் தேன், எலுமிச்சம் கலந்து குடிக்கும்போது, புத்துணர்ச்சி கிடைக்கிறது.. உணவு உட்கொள்ளும்போது, பீன்ஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள காய்களை எடுத்துகொண்டால் போதும்.. அல்லது இவைகளை தனியாக வேகவைத்து, மிளகுதூள், கல் உப்பு சேர்த்து சாப்பிட்டாலும் முழு பலன் கிடைக்கும்.

தயிர் நல்லதா: பெரும்பாலானோர் தயிர் பயன்படுத்துவதில்லை.. நிறைய புரோட்டீன் உள்ளதால், இது எடை இழப்புக்கு மிகவும் உபயோகப்படுகிறது.. ஒரு கப் தயிரில் 8.5 கிராம் புரோட்டீன் உள்ளது. ஒரு கப் குறைந்த கொழுப்புள்ள தயிரில் 13 கிராம், கொழுப்பு இல்லாத ஒரு கப் தயிரில் 10 கிராம் புரோட்டீன் இருக்கிறதாம்..
இதில் புரோட்டீன் மட்டுமில்லாமல் கால்சியம் சத்து நிரம்பியுள்ளதால், நம் எலும்புகளின் வலிமைக்கும் தயிர் உதவி புரிகிறது.. இப்படி கால்சியம் நிறைந்துள்ள தயிர் எடையை குறைக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்கும் என்றாலும், அதிகம் எடுத்துக் கொள்ளாமல், ஒரு கப் தயிர் ஒருநாளைக்கு சாப்பிட்லே போதும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications