"மணி பிளான்ட்" வீட்டில் வைத்தால் என்னாகும் தெரியுமா.. குபேர மூலையில் பணமா? அட, வேற சமாச்சாரம் இருக்கு
சென்னை: மணி பிளான்ட் செடியை வீட்டுக்குள் வைத்தால் நிஜமாகவே பணம் சேருமா? செல்வம் பெருகுமா? எதற்காக வீடுகளில் இந்த மணி பிளான்ட் செடிகள் வளர்க்கப்படுகின்றன?
மணி பிளான்டினை வீட்டிற்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ வைத்து வளர்ப்பது வழக்கம்.. தென்கிழக்கு திசையில் வைத்தால் அதிக பாசிடிவ் எனர்ஜி கிடைக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் சொல்வார்கள். மணி பிளான்ட் வீட்டில் வைத்தால், கடன் பிரச்சனைகள் தீரும், செல்வம் வந்து சேரும் என்று காலங்காலமாகவே நம்பப்பட்டு வருகிறது.

மணி பிளான்ட்: எத்தனையோ செடிகள் அழகுக்காக வைக்கப்பட்டாலும், மணி பிளான்ட் மட்டும் செல்வம் பெருக வைக்கப்படுகிறது.. "மணி பிளான்ட்" என்று பெயரிலேயே இந்த செடியை அழைக்கவும் செய்கிறார்கள். இப்போதெல்லாம் கிச்சன்களிலும் இந்த வாஸ்து செடிகள் வைக்கப்படுகின்றன.. அதிலும், மணி பிளான்ட்டை பூஜையில் வைத்து வளர்ப்பது பல மடங்கு அதிகமான பலன்கள் கிடைக்கும்..
தென்கிழக்கு என்பது விநாயகருக்கு உரிய திசையாகவும், சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த திசை என்பதாலும் அங்கு வைப்பது சிறப்பானது என்றும்? ஆனால், வடக்கு திசையில் மட்டும் இந்த செடியை வைக்கக் கூடாது என்பார்.
இந்த செடியில், பழுத்த இலைகள் இல்லாமல் அதனை அடிக்கடி பராமரிக்க வேண்டும்.. பழுத்த இலைகள் இருந்தால், அது வீட்டில் உள்ளவர்களின் உடல்நலக்குறைவை குறிக்கிறது என்றும் நம்பப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த மணி பிளான்ட்டை யாருக்கும் தானமாக, அன்பளிப்பாக தரக்கூடாதாம்.. அப்படி தந்தால், தன் வீட்டு அதிர்ஷ்டத்தையும் சேர்த்து தந்துவிடுவது போலாகிவிடுமாம். அதேபோல, இந்த மணி பிளான்ட் செடியை, திருடி வைத்தால், அதிக அளவு நல்லது நடக்குமாம்..
உண்மை காரணம் என்ன: இதெல்லாம் தொடர்ந்துவரும் ஊறிப்போன நம்பிக்கைகள் என்றாலும், உண்மையிலேயே இந்த மணி பிளான்ட் செடியை வீட்டில் வளர்ப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும்? இந்த செடியின் மருத்துவ பயன்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
மணி பிளான்ட் என்பது காற்றில் உள்ள மாசுக்களை உறிஞ்சிக்கொண்டு, சுத்தமான காற்றினை வெளிவிடும் தன்மை கொண்டதாகும்.. அதாவது, காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடுகிறது..
இதனால், நம்மை சுற்றியுள்ள மாசு கலந்த காற்றை உள்வாங்கப்பட்டு, நமக்கு தேவையான நல்ல ஆக்ஸிஜைனை வெளியிடுகிறது.. மனிதனுக்கு தரக்கூடிய ஆக்ஸிஜனை வெளியிடும் தாவரங்களில் முதல் இடத்தில் உள்ளது இந்த மணி பிளான்ட்தான்,... இந்த மணி பிளான்ட் செடியிலிருந்து வரும் ஆக்ஸிஜனை நாம் சுவாசிப்பதால் நம்முடைய உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன..
விஷ ஜந்துக்கள்: இந்த செடியை நம் வீட்டில் வைக்கும்போது, பாம்பு, பூரான், தேள் போன்ற விஷம் கொண்ட பூச்சிகள் வருவது தடுக்க முடியும்.. காரணம், இந்த செடியின் வளர்ச்சியையும், அதன் இலைகளையும் பார்த்து விஷம் கொண்ட பூச்சிகள் வருவதில்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.. மணி பிளான்ட் செடியின் உண்மையான காரணமும் இதுதான்.
மாசு அதிகரிக்காமல், அந்த மாசை கட்டுப்படுத்துவது இந்த செடிதான்.. இந்த செடியை ஹாலில் வைத்து வளர்ப்பதற்கு காரணம், டிவி, மொபைல் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களையும் இந்த செடி கிரகித்து கொள்கிறது. இப்படியான எதிர்மறை ஆற்றல்களை இழுத்துகொண்டு, நேர்மறை ஆற்றல்களை வீட்டில் அதிகரிக்க செய்யும் தன்மைகொண்டது இந்த மணி பிளான்ட். இதனால் வீட்டில் இருப்பவர்களின் உடல் நிலையும் மன நிலையும் பாதுகாக்கப்படுகிறது.
இந்த செடி காட்டுப்பகுதிகளில் 50 முதல் 60 அடி உயரமாக வளரக்கூடியது.. ஆனால், வீட்டிற்குள், சின்ன செடியில் வைத்து வளர்க்கும்போது, 10 முதல் 15 அடி வரை மட்டுமே வளர முடியும்..
சமைக்கலாமா: மணி பிளாண்ட்டின் இலையை சாப்பிடலாம் என்கிறார்கள்.. இந்த செடியின் கொழுந்து இலைகள் மற்றும் பூக்களை காய்கறியாக சமைக்கவும் செய்யலாமாம்.. அல்லது, வேறு ஏதனும் பொருட்கள் சமைக்கும்போது இதனை சேர்த்துக்கொள்ளவும் செய்யலாம்.. இந்த மணி பிளான்ட் செடிகளுக்கு விதைகளும் உண்டு.. ஆனால், நம் கண்ணுக்கு அது மேலோட்டமாக தெரிவதில்லை.. இந்த விதையைகூட சாப்பிடலாம் என்கிறார்கள்.. அதை சாப்பிட்டால், கடலை பருப்பு டேஸ்ட் போலவே இருக்குமாம்.
எப்படி வளர்க்கலாம்: இந்த செடியை வளர்ப்பதற்கு பெரிய அளவிலான இடவசதி தேவையில்லை... படரும் வகையில் வளரக்கூடிய இந்த செடியை எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..
ஆனால், பராமரிப்பு மிக மிக முக்கியம்.. அதிக வெயில் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்த செடி வீட்டிற்குள்ளும், சூரிய ஒளி அதிகம் படாத இடத்தில் வைத்து வளர்க்கிறார்கள். இந்த செடி இரவில் அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை வெளிவிடும் என்பதால் படுக்கையறையில் வைக்கக் கூடாது.
நேரடி சூரிய வெளிச்சம்: நேரடி சூரிய வெளிச்சம் கிடைக்காத பகுதியிலும் வளரும் என்பதால் வீட்டினுள்ளும் வளர்ப்பதற்கு ஏற்றது. அதுவும் வீட்டிற்குள் மிகவும் குறைவான வெளிச்சத்தில், தண்ணீரிலேயே நன்கு வளரும் . இந்த செடியை வெளியிலும், தொட்டியிலும்கூட வளர்க்கலாம். இது கொடிபோல் படரும் தன்மை கொண்டது. அதனால் தொங்கும்படியும் வளர்க்கலாம். வாடிய இலைகள் இருந்தால், அதை உடனடியாக அகற்றிவிடுவது, செடியின் சீரான வளர்ச்சிக்கு ஏற்றது.
அதிக உப்புகளும், குளோரின் கலந்த நீரை இதற்கு ஊற்றக்கூடாது.. உரம் சேர்ப்பது செடியை செழிப்பாக வளர செய்யும்.. வாரம் ஒரு முறையோ இரு வாரத்திற்கு ஒரு முறையோ தண்ணீர் மாற்ற வேண்டும்.. இல்லை என்றால் பாசான் பிடித்துவிடும்.. இதன் இலைகள் நச்சுத்தன்மை கொண்டவை. எனவே, செல்லப்பிராணிகள் மற்றும் குழந்தைகள் இவற்றை வாயில் வைக்காமல் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சீக்ரெட் இதுதான்: பாஸிடிவ் எனர்ஜி தென்கிழக்கு திசையில் தான் அதிகம் பாஸிடிவ் எனர்ஜி கிடைக்கிறது. அதனால்தான், இந்த திசையில் இந்த செடியை வைக்க சொல்கிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications