சாப்பாட்டு பிரியரா நீங்க.. ஓவரா சாப்பிட்டாலும் சிக்கல் தானாம்.. பாதிப்புகள் என்ன? தவிர்ப்பது எப்படி
சென்னை: அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று என ஒரு பழமொழி நமது ஊரில் சொல்வதுண்டு. உயிர் வாழ உணவு அடிப்படை தேவை என்றாலும் அதையும் அளவோடு சாப்பிடுவதுதான் உடல் நலனுக்கு நல்லது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள் மற்றும் அதை தவிர்ப்பதற்கான சில வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.
நாம் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதை அளவுக்கதிமாக சாப்பிடுவது என்று சொல்லப்படும். நம்மில் கூட எத்தனையோ பேர் வயிறு முட்ட சாப்பிடுவதை பார்த்து இருக்கலாம். வழக்கமாக குறைவாக சாப்பிட்டு வந்தாலும் கூட பிடித்தமான உணவு கிடைத்தால் நெஞ்சு வரை உணவு நிற்குதப்பா... என்று சொல்லும் அளவுக்கு ஒரு வெட்டு வெட்டி விடுவார்கள்.
இன்னும் சிலரோ எந்த சாப்பாடாக இருந்தாலும் ஒரு பிடி பிடிக்கும் நபர்களும் இருக்கிறார்கள். அது ஒவ்வொருவருவடைய உணவு பழக்க வழக்கத்தை சார்ந்தது. இருந்தாலும், தேவைக்கு அதிகமான அளவு நாம் சாப்பிடும் போது சில உடல் உபாதைகளும் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அதிகப்படியாக சாப்பிடுவது என்பது பொதுவாக குறைந்த நேரத்திற்குள் மிதமிஞ்சி சாப்பிடுவதைத்தான் குறிக்கிறது.

ருசித்து சாப்பிட வேண்டும்: இப்படி அதிகப்படியாக சாப்பிடுவதால் உடல் பருமன், டைப் 2 டையபட்டீஸ், உயர் ரத்த அழுத்தம், இதய பாதிப்புகள் மற்றும் பக்கவாதம் என பல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக சொல்கிறார்கள். அதிகப்படியாக சாப்பிடும் போது அதிகப்படியான கலோரிகளை உடல் கொழுப்புகளாக சேமித்து வைக்கிறது. இதனால், உடை எடை கூடுதல், உடல் பருமன் ஆகியவை ஏற்படும். அதிகப்படியாக சாப்பிடுவது வயிற்று வலி, அஜீரணம் போன்ற செரிமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
வெறும் உடல் ரீதியிலான பாதிப்புகள் மட்டும் இன்றி உளவியல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்குமாம். அதாவது மன அழுத்தம், கவலை ஆகியவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இப்படி அதிகப்படியாக சாப்பிடுவதால் ஏற்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு முதலில் நாம் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறோம் என்பதை கட்டும் அறிகுறிகளை தெரிந்து கொள்வது அவசியம். எனவே அதிகப்படியாக சாப்பிடுவதை உணர்த்தும் அறிகுறிகள் மற்றும் அதை தவிர்ப்பது எப்படி என்ற விவரங்களை பார்க்கலாம்.
* சாப்பிடும் போது உண்ணும் உணவு மீது கவனம் செலுத்த வேண்டும். அதாவது, உணவையும் அதன் சுவையையும் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது கவனம் சிதறாமல் உணவின் மீது கவனம் இருப்பது சிறந்த உணவை தேர்வு செய்து சாப்பிடுவதையும் அதிகப்படியாக சாப்பிடுவதை குறைப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

மதிய உணவு அவசியம்: * மதிய உணவை சாப்பிடுவதை தவிர்க்கக் கூடாது. ஏனெனில் மதிய உணவை சாப்பிடுவதை தவிர்ப்பது பசியின்மைக்கு வழி வகுக்கும். எனவே மதிய உணவை தவறாமல் சாப்பிடுவது அவசியம்.
* வேகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் வேகமாக சாப்பிட்டால் போதிய அளவு சாப்பிட்டு விட்டோம் என்ற உணர்வை கொடுக்க நேரம் எடுக்கும் . எனவே, நிதானமாக நன்கு மென்று சாப்பிட்டால் போதிய அளவு சாப்பிட்டதும் வயிறு மூளைக்கு தகவல் கொடுத்து விடும்.
* சாப்பிடும் போது பெரிய அளவிலான பிளேட்களை பயன்படுத்தக் கூடாது என்று ஆய்வு சொல்கிறது. சிறிய அளவிலான பிளேட்டுகளில் சாப்பிடும் போது தட்டு நிறைய உணவு பொருள் இருக்கும் என்பதால் நமக்கு அதிகமாக சாப்பிட்ட திருப்தி கிடைக்கும் என்று ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
* பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் (நட்ஸ்) உள்ளிட்டவற்றை சாப்பிடுவதும் அதிகப்படியாக நாம் உணவு உண்பதை தவிர்ப்பதற்கு உதவும்.
* டிவி பார்த்துக் கொண்டோ, மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டோ சாப்பிடக்கூடாதாம். ஏனனில், நமது கவனம் சாப்பாடு மீது இல்லாமல் செல்போன்கள் மீது இருந்தால் எவ்வளவு சப்பிடுகிறோம் என்ற அளவு தெரியாமல் அதிகம் சாப்பிட்டு விடுவோம்.
* போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஏனனில் தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் பசியை கட்டுப்படுத்தி வைப்பதோடு, நாள் முழுவதும் உடல் சீராக இயங்க உதவிகரமாக இருக்கும்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications