எய்ட்ஸ் அலை.. அடுத்தடுத்து 60 பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு.. உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில்.. ஷாக்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் அடுத்தடுத்து பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு எப்போதும் மருத்துவ துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடிதான். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பெரும்பாலும் இந்தியாவின் சுகாதார தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டிற்கு முன்பே சென்னை இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக மாறியது, ஏனெனில் நாடு முழுவதிலும் இருந்து நோயாளிகளின் நிலையான வருகையை அப்போதில் இருந்தே சென்னை எதிர்கொண்டு வந்துள்ளது. 1835 ஆம் ஆண்டில், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரிதான் மாநிலத்தில் மருத்துவப் படிப்புக்கான முதல் நிறுவனமாகும்.

ஒவ்வொரு வருடமும் வெளிநாடுகளில் இருந்து 45 முதல் 50 சதவீத சுகாதார சுற்றுலாப் பயணிகளையும் உள்நாட்டில் 40 சதவீதத்தையும் ஈர்க்கிறது. இந்தியாவில் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான மருத்துவக் கல்லூரிகளுடன், தமிழ்நாடு நாட்டிலேயே மிகவும் மேம்பட்ட சுகாதார வசதிகளைக் கொண்டுள்ளது.
கொரோனா காலத்திலும் கூட தமிழ்நாட்டின் சுகாதாரம் மிக சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் பொது சுகாதாரத்தில் தமிழ்நாடு போல மற்ற மாநிலங்கள் அவ்வளவு சிறப்பானவை கிடையாது. தமிழ்நாட்டில் இருக்கும் வசதிகள் மற்ற மாநிலங்களில் கிடையாது.
உத்தர பிரதேசம்: தமிழ்நாடு பொது சுகாதாரத்தில் தனக்கென ஒரு முத்திரையை பதித்துள்ளது. மேலும் மலிவு விலையில், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதால் தமிழ்நாடு மிகவும் பிரபலமாக உள்ளது. ஆனால் குஜராத், உத்தர பிரதேசம் , பீகார் போன்ற மாநிலங்களில் இது போன்ற வசதிகள் கிடையாது. அங்கே நோய்கள் குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு இல்லை.
இந்த நிலையில்தான் உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் அடுத்தடுத்து பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 16 மாதங்களில் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்கான காரணம் தெரியவில்லை. அடுத்தடுத்து 16 மாதங்களில் இத்தனை பேருக்கு எய்ட்ஸ் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்கே உள்ள மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள் இடையே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போக மீரட்டில் உள்ள தனியார் Anti-Retroviral Therapy (ART) Centre of Lala Lajpat Rai Medical College என்று மருத்துவமனையில் 81 பெண்களுக்கு எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பிரசவத்திற்காக வருபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ததில் எய்ட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு எப்படி எய்ட்ஸ் பரவியது, அதை பற்றிய விழிப்புணர்வு இவர்களுக்கு இல்லையா? என்ன நடந்தது என்பது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு தற்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு எய்ட்ஸ் பரவி உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உத்தர பிரதேசத்தில் உள்ள மற்ற மருத்துவமனைகளிலும் பெண்களுக்கு எய்ட்ஸ் பரிசோதனை செய்ய உத்தரவிட்டு உள்ளது. அங்கே திடீரென எய்ட்ஸ் அலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பதற்றத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications