மது அருந்திவிட்டு இந்த மருந்துகளை மட்டும் மறந்தும் சாப்பிட்டுறாதீங்க.. என்னாகும் தெரியுமா?
சென்னை: நீங்கள் தினசரி மருந்து எடுத்துக்கொள்பவரா? அல்லது உடல்நிலை பாதிப்பு காரணமாக மருந்து எடுத்துக்கொள்வீர்களா?
மருந்து எடுத்துக்கொள்ளும் சமயங்களில் மது அருந்தினால் என்ன நடக்கும் என்பதை இப்போது பார்ப்போம்.
மது அருந்துவது இன்றைக்கு சர்வசாதாரணமாக மாறி உள்ளது. நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும் நேரங்களில், கொண்டாட்டங்களில் மது அருந்துகிறார்கள். மது அருந்துவதால் உடல் நலம் பாதிக்கும் என்றாலும், அதை பொருட்படுத்தாமல் மது அருந்துகிறார்கள்.

இந்நிலையில் மது அருந்திய பின்னர் சில மருந்துகளை எடுத்துக்கொள்வது உடல் நலத்தை பல வகையில் கடுமையாக பாதிக்கலாம். இதுகுறித்து மருத்துவர்கள் கூறிய தகவல்களை இப்போது பார்ப்போம்.
பொதுவாக நீங்கள் சாப்பிடும் மருந்து நேரடியாக வயிற்றுக்குள் சென்று அங்கிருந்து கல்லீரலுக்கு செல்கிறது. அந்த மருந்து ரத்தத்தில் கலப்பதற்கு முன்பாக உடைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் ஒவ்வொரு மருந்துமே இப்பபடித்தான் கல்லீரலில் உடைக்கப்பட்டு அது ரத்தத்தில் கலக்கிறது. இது செயல்முறையாக தொடர்கிறது.
இந்தசூழலில் நீங்கள் மது அருந்தும் போது, கல்லீரலில் அதுவும் உடைக்கப்படும். அவையும் ரத்தத்தில் கலக்கும். அப்படி கலக்கும் போது மருந்தின் அளவை மது பாதிக்கலாம். நீங்கள் எடுத்துக்கொண்ட மதுவும், மருந்தும் உடலில் ஒன்று சேர்ந்து சில விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. அதேநேரம் எடுத்துக்கொள்ளும் மருந்து மற்றும் மதுவின் அளவு, வயது, பாலினம், மரபியல், உடல்நலம் ஆகியவற்றை பொறுத்துதான் அது விளைவுகளை ஏற்படுத்தும்.
எந்த மருந்தை மதுவுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதை இப்போது பார்ப்போம்.. பல மருந்துகள் மதுவுடன் எடுத்துக்கொள்ளும் போது பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை மெதுவாக்கும் மருந்துகளை மது அருந்திய பின் எடுத்துக்கொண்டால், உங்களுக்கு தூக்கம் அதிகம் வரலாம். அவை உங்களுடைய சுவாசம் மற்றும் இதயத் துடிப்பைக் குறைக்கலாம். சில தீவிர நிகழ்வுகளில், கோமா மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தலாம். ஆனால் அதேநேரம் ஒன்றுக்கும் மேற்பட்ட இந்த வகை மருந்துகளை எடுத்துக்கொள்ளும் போதுதான் இவை ஏற்பட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
தூக்க மாத்திரை சோல்பிடெம்மை மதுவுடன் எடுத்துக்கொள்ளக்கூடாது. இதன் பக்கவிளைவு அரிதானது என்றாலும் தீவிர விளைவுகள் ஏற்படும் போது தூக்கத்தில் உண்பது, தூக்கத்தில் நடப்பது போன்றவை ஏற்படலாம்.
இதேபோல் மனச்சோர்வுக்கான ஃபெனெல்சைன், டிரானில்சிப்ரோமைன் மற்றும் மோக்ளோபெமைடு, ஆன்டிபயாடிக் லைன்சோலிட் போன்ற சில மருந்துகள், பார்கின்சன் நோய்க்கான செலிகிலின் மற்றும் புற்றுநோய்க்கான புரோகார்பசின் போன்றவற்றை மது அருந்தியவர்கள் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தின் அளவை அபாயகரமான அளவிற்கு அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மெட்ரோனிடசோல் என்ற மருந்தை இரவில் எடுத்துக்கொள்பவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு மது அருந்துவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ஆன்டிபயாடிக்ஸ் எடுத்துக்கொள்ளும் போது முடிந்த அளவிற்கு மதுவை தவிர்த்துவிடுங்கள். வயிற்றுவலி, தலைச்சுற்றல் மற்றும் தூக்கமின்மை போன்ற ஒரே மாதிரியான பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications