ஒல்லிக்குச்சி உடம்பு வேணுமா.. இந்த "ஒரே காய்" போதும்.. சர்க்கரை நோயாளிகளின் "சீனி"க்காய்.. பெரிய பலன்
சென்னை: கொத்தவரங்காயை பற்றி தெரிந்துகொண்டாலே, அதை யாராலும் தவிர்க்க முடியாது. அந்த அளவுக்கு மருத்துவ குணத்தை தனக்குள் வைத்திருக்கிறது இந்த காய்.
இதற்கு சீனி அவரக்காய் என்றும் சொல்வார்கள்.. எந்த காய்களின் விலை உயர்ந்தாலும், எப்போதுமே விலை ஏறாத காய் இது மட்டும்தான்.. இந்த காயை நாம் ஏன் சாப்பிட வேண்டும் என்பதற்கு, நிறைய காரணங்கள் உள்ளன..
இந்த காய்களில் கலோரிகள் குறைவாக உள்ளது.. 100 கிராம் கொத்தவரங்காயில், வெறும் 35 கலோரி மட்டுமே இருக்கிறது. புரதங்கள், நார்ச்சத்துக்கள்,வைட்டமின் K, வைட்டமின் C, வைட்டமின் A, ஃபோலியேட்டுகள் மற்றும் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.

சுண்ணாம்பு சத்து: பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் இல்லை. நார்ச்சத்து, சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து, பொட்டாசியம், மங்கனிசு, பாஸ்பரஸ், பாலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.. எனவே, மலச்சிக்கலை தீர்க்ககூடிய காயாக இது உள்ளது.
முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.. அதேபோல உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கொத்தவரங்காயை அதிகம் சேர்த்து கொள்ளலாம்..
நாம் அதிக நார்ச்சத்து உணவை எடுத்துக்கொண்டால்தான், உடம்பில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலை குறைக்க முடியும். அதற்கு இந்த கொத்தவரங்காய் பேருதவி புரிகிறது.. கொத்தவரங்காயில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து இதய நோயின் அபாயத்தை தடுத்து நிறுத்தும்..
கொலஸ்டிரால்: கொத்தவரங்காயில் உள்ள உட்பொருள் ரத்தத்தில் உள்ள அதிகபடியான குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறதாம். இதை ஆராய்ச்சியாளர்களால், எலிகளை வைத்து பரிசோதித்து அதன்பின்னர் உறுதி செய்துள்ளனர்.. எனவே, மனிதர்களுடைய ரத்த குளுக்கோஸ் அளவிலும் இது போதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்கள்.. அதுமட்டுமல்ல, கெட்ட கொலஸ்டிராலை குறைத்து, நல்ல கொலஸ்டிராலை அதிகரிக்க இந்த காய் துணை செய்கிறது. ரத்த சோகை நீக்குகிறது..
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.. கர்ப்பிணிகள் தாராளமாக இந்த காயை சாப்பிடலாம்.. ஏராளமான பிறப்பு பிரச்சினைகள் மற்றும் கர்ப்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கிறது..
கருவில் உள்ள குழந்தைகளுக்கு இரும்பு + கால்சியம் குறைபாடுகளை இந்த காய் சரிசெய்துவிடும். வைட்டமின் A இதில் உள்ளதால், கண்பார்வைக்கும் நல்லது.. இதிலுள்ள ஆக்ஸிஜனேற்றிகள், வயிற்றில் புண்களை ஏற்படுத்தாமல் பாதுகாக்கிறது. ஆஸ்துமா தொல்லையால் பாதிக்கப்படுகிறவர்கள் கொத்தவரங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது: இந்த காய் நிறைய நார்ச்சத்துக்களை கொண்டது என்பதால், திடீரென அதிகமாக நார்ச்சத்துக்களை எடுக்கும்போது வயிறு மற்றும் வாயுத்தொல்லையை உண்டாக்கலாம். அதனால், ஆரம்பத்தில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கொள்வது நல்லது.. பிறகு, பத்தியம் இருந்து மருந்து சாப்பிடுபவர்கள், இந்த கொத்தவரங்காயை சாப்பிடக்கூடாது என்கிறார்கள்.. அதேபோல, வாதம், பித்தம் உள்ளவர்களும் இந்த காயை அடிக்கடி சாப்பிடக்கூடாதாம்..
புளிக்குழம்பு: பொதுவாக, இந்த பிஞ்சு காயை பொறியல் செய்வார்கள்.. கொஞ்சம் துவரம் சேர்த்து கூட்டாக செய்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.. அவியலிலும் சேர்ப்பார்கள்.. அதேபோல முற்றிய கொத்தவரங்காயை வற்றல் போட்டு, அதையும் வறுத்து சாப்பிடுவார்கள்.. சிலர் புளிக்குழம்பிலும் போடுவார்கள்.. இது அதிகம் சாப்பிட்டால் வாயு என்று சொல்லப்படுவதால், அளவோடு எடுத்து கொள்வது எப்போதுமே நல்லதுதான்..!!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி!












Click it and Unblock the Notifications