பரங்கிக்காய்.. திருஷ்டிக்கு மட்டுமல்ல தீர்க்காயுசு தரும் மஞ்சள் பூசணிக்காய்.. பலன் தரும் பரங்கி விதை
சென்னை: என்ன காரணமோ தெரியவில்லை.. இந்த பரங்கிக்காயை திருஷ்டிக்கு உடைப்பதற்காகவே ஒதுக்கிவைத்து விட்டார்கள். ஆனால், பரங்கியில் இலை முதல் காய் அத்தனையும் மருத்துவம் - அத்தனையும் மகத்துவம்.
பூசணி வகைகளில் 2 வகைகள் இருக்கின்றன. ஒன்று, சர்க்கரை பூசணி, மற்றொன்று வெண்பூசணி.. இந்த சர்க்கரை பூசணியைதான், சர்க்கரைப் பரங்கி அல்லது பரங்கிக்காய் என்பார்கள்.

வைட்டமின் A: பரங்கிக்காயில் வைட்டமின் A ஏராளமாக நிரம்பியிருக்கின்றன.. அதனால், கண்பார்வைக்கும், கண் கோளாறுகளை சரிசெய்யவும் உதவக்கூடியது.. இந்த காயில், வைட்டமின்கள் B, C உள்ளதால், உடம்பில் உள்ள சூட்டை குறைத்து, குளிர்ச்சியை தரக்கூடியது.. அதேசமயம், இருமல் இருந்தாலும் இந்த கீரை சாப்பிட்டால் குணமாகும்.. மேலும்,சீரான சிறுநீர் வெளியேற்றத்துக்கு இந்த பரங்கிக்காய் பயனளிக்கும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உதவும் காய்.. காரணம், இந்த பரங்கிக்காய் ஜூஸில், பெக்ட்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது.. இதைக் குடிப்பதனால் கொழுப்பு சத்து குறைந்துவிடும்..
ரத்த சோகை: இரும்புச்சத்து குறைபாட்டை தீர்க்கும் வல்லமை இந்த பரங்கிக்காய்க்கு உள்ளது.. தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், ஒரு டம்ளர் பரங்கிக்காய் சாறுடன், தேன் கலந்து குடித்து வந்தால் தூக்கம் சுகமாய் வரும்.. கல்லீரலுக்கு இந்த பரங்கிக்காய் நல்லது.. ஹெப்படைட்டிஸ் - A- என்ற வைரஸ் கிருமியை நீக்குவதன் கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்கிறது.. பரங்கிச்சாறு தலைமுடிக்கும் அருமருந்து..
தீப்புண்களை ஆற்றும் தன்மை இந்த குளிர்ந்த காய்க்கு உள்ளது.. அதேபோல கொப்புளங்களையும் குணப்படுத்தும்.. பித்தத்தை போக்கும் குணம் இந்த பரங்கிக்காய்க்கு உண்டு.. விஷம்வாய்ந்த வண்டுக்கடி இருந்தாலும் உடனே அதை குணப்படுத்தீவிடும்.. இந்த சாறை தலைக்கு தடவி குளிப்பதால் தலைமுடி கொட்டுவது நிற்கும்.. தலைக்கும் குளிர்ச்சிதரக்கூடியது.
சிறுநீரக கோளாறு: பசியை தூண்டுவதுடன், குடல் சம்பந்தமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும்.. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு அருமருந்துதான் இந்த பரங்கிக்காய். சிறுநீரக கற்களால் பாதிப்பு உள்ளவர்கள், தினமும் 3 வேளை என 10 நாட்களுக்கு பரங்கிக்காய் சாற்றை அரை டம்ளர் குடித்துவந்தால், சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.. ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பும் நீங்கும். இதனால், மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது.
தீமைகள்: நோயுற்று உடல் மெலிந்தவர்கள் அல்லது நோயாளிகள், இந்த பரங்கிக்காயை சாப்பிட வேண்டாம் என்பார்கள்.. காரணம், உடம்பை மேலும் உருக்கிவிடுமாம். எனினும், இதுகுறித்து உறுதியாய் தெரியவில்லை. அதேபோல, சில பக்கவிளைவுகளும் உண்டு என்கிறார்கள்.. அதாவது உடலில் கெட்ட ரத்தத்தை தோற்றுவிக்கக் கூடியதாம்.. இது ஜீரணம் ஆவதற்கும் நீண்ட நேரம் பிடிக்கும்.. அத்துடன், வாத குணம் இதிலுள்ளது.. எனினும், சுக்கும், வெந்நீரும் இதனுடன் சேர்ந்து சாப்பிட்டால், எந்தவிதமான கெடுதியும் வராது..
பரங்கியில் பிஞ்சு, காய், பழம் என எல்லா பருவத்திலும் சமைத்து சாப்பிட முடியும். பரங்கியில் காய் மட்டுமல்ல, இதன் இலைகளையும் சமைக்கலாம். பரங்கிக்காயின் பிஞ்சுவில் வறுவல் செய்வார்கள்.. பரங்கிக்காயில் புளிக்குழம்பு, சாம்பார், பொரியல் கூட்டு, சூப், அல்வா என பாயாசம் என பலவகைகளில் செய்வார்கள்.
மணல்பாங்கான இடங்களில் விளையும் பரங்கி காய் மிகவும் சுவையாக இருக்குமாம்.. அது கெட்டியாகவும் இருக்கும். பொதுவாக பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்வார்கள். ஒரு டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்பார்கள்.
சாணிப்பிள்ளையார்: பரங்கிக்கொடியில் ஆண் பூ, பெண் பூ என்று தனித்தனியாக இருக்கிறது. இந்த பூக்களைத்தான், மார்கழி கோலங்களுக்கு நடுவில் சாணிப்பிள்ளையாரால் சொருகி வைப்பார்கள்.. அதுவும் பரங்கியின் ஆண் பூக்களை செருகி வைப்பார்களாம். பெண் பூ என்றால் காம்புக்கு அடியில் சின்ன சைஸில், குண்டாக காய் தெரியும்.. ஆண் பூ என்றால், காம்பில் இருந்தே நேரடியாக நீளமாக பூக்கும். இதுதான் அடையாளம்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications