Asthma home remedy: வெற்றிலை+ ஒரு துண்டு இஞ்சி போதும்! 48 நாளில் கரைந்தோடும் சளி! ஆஸ்துமாவுக்கு பைபை
சென்னை: சிலருக்கு சளி பிடித்தாலே போதும் அதுவே பெரிய பிரச்சினையாக கண்களிலும் தாடைகளிலும் நீர் கோர்த்து கொண்டு பாடாய்படுத்தி எடுத்துவிடும். அதிலும் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு காலை எழுந்ததும் தும்மல் போட்டே சோர்வாகிவிடுவார்கள். இந்த ஆஸ்துமா குணமாகவும் நெஞ்சு சளியை கரைக்கவும் எளிய முறை வீட்டு வைத்தியத்தை பார்க்கலாம்.
இதுகுறித்து அத்திமரக்காடு எனும் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கரையாத சளியையும் கரைக்கும் நாட்டு மருந்து!!

சுவாசத் தொகுதி தொடர்பான நோய்கள் பல அசெளகரியங்களை ஏற்படுத்துகின்றன. முக்கியமாக நுரையீரலில் தங்கி நிற்கும் சளி மற்றும் இருமல் போன்றவை எமது அன்றாட வாழ்வில் பல இன்னல்களை ஏற்படுத்தும். இவற்றுக்கு சரியான நிவாரணம் கிடைக்காவிடின், அதுவே வைத்திய உதவியை நாடவேண்டிய சுகாதாரப் பிரச்சினையாக மாறிவிடும்.
நெஞ்சு சளி, மூச்சுத்திணறல், ஆஸ்துமா, இருமல், கரையாத நுரையீரல் சளி மற்றும் நுரையீரல் தொடர்பான பல நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் ஓர் எளிய நாட்டு மருந்து பற்றி இங்கே பார்க்கலாம். இதை நீங்கள் செலவே இல்லாமல் வீட்டில் செய்து பார்க்க முடியும்.
தேவையான பொருட்கள்
ஒரு வெற்றிலை.
தோல் நீக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி.
சிறிதளவு தேன்.
செய்முறை
வெற்றிலையை அதன் காம்பை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். வெற்றிலைத் துண்டுகள் மற்றும் இஞ்சியுடன் 1 ஸ்பூன் வெந்நீரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து, அந்த சாற்றை வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் காரத் தன்மையை குறைக்க சிறிதளவு தேன் சேர்த்துக் கொள்ளலாம். இப்போது நாட்டு மருந்து தயாராகிவிட்டது.
நெஞ்சு சளி, இருமல் போன்ற பிரச்சினைகளால் அவதியுறுபவர்கள் இதனை செய்து தொடர்ந்து 1 வாரத்திற்கு காலை, மாலை என 10 மில்லிலிட்டர் அளவில் அருந்திவர இந்த பிரச்சினைகள் இல்லாமல் போகும். நெஞ்சிலுள்ள கரையாத சளியும் கரைந்துவிடும். இதை அருந்துவதால் செரிமான பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள், மூச்சுத்திணறல், ஆஸ்துமா போன்ற நோய்களால் கஷ்டப்படுபவர்கள் இந்த 10 மில்லிலிட்டர் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 48 நாட்கள் குடித்துவர நுரையீரல் பிரச்சினைகள் குணமாகி, நுரையீரல் ஆரோக்கியமானதாகவும் பலமுள்ளதாகவும் மாறிவிடும். இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications