உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்த நடிகர் சரத்பாபு! செப்சிஸ் நோய் ஆபத்தானதா? அறிகுறிகள் என்ன?
ஹைதராபாத்: பிரபல நடிகர் சரத்பாபு செப்சிஸ் நோயால் அவதிப்பட்டு வந்தார் என்றும் அது மோசமான வியாதி என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆந்திராவை சேர்ந்தவர் சரத்பாபு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நிழல் நிஜமாகிறது என்ற படத்தில் அறிமுகமானார். இதுவரை ஆந்திர அரசின் 8 நந்தி விருதுகளை அவர் பெற்றுள்ளார்.

தென்னிந்திய மொழிகளில் இதுவரை 230 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் குணச்சித்திர வேடங்களில் நடித்த முத்து, அண்ணாமலை உள்ளிட்ட படங்கள் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவை. இரு படங்களிலுமே ரஜினிகாந்துக்கு இணையான ரோலில் நடித்திருப்பார்.
71 வயதாகும் சரத்பாபு செப்சிஸ் நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த மாதம் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவருடைய உடல் உறுப்புகள் செயலிழக்க தொடங்கியதாக மருத்துவர்கள் கூறியிருந்தனர்.
தற்போது அவர் ஹைதராபாத் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். இந்த மாதம் 3ஆம் தேதி நடிகர் மனோபாலா இறந்த நிலையில் தமிழ் சினிமாவுக்கு இன்னொரு இழப்பாக சரத்பாபுவின் இறப்பு அமைந்துவிட்டது. செப்சிஸ் நோயால் சரத்பாபு பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவர்கள் கூறியிருந்த நிலையில் அந்த நோய் என்றால் என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பதை காணலாம்.
செப்சிஸ் என்பது கொடிய நிலை நோயாகும். உடலில் நோய் தொற்று தீவிரமான நிலையில் அதை செப்சிஸ் என அழைப்பார்கள். தீவிர தொற்றால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அந்த தொற்று அழிக்கும். சாதாரணமாக உடலில் நோய் தொற்று ஏற்பட்டால் அதை அழிக்க நோய் எதிர்ப்பு சக்தியே போதுமானது. மேலும் மருந்து மாத்திரைகள் மூலமும் இந்த தொற்றிலிருந்து விடுபடலாம்.

உடலில் இந்த தொற்று தீவிரமடைந்துவிட்டால் அதை குணப்படுத்தும் எளிதல்ல. காய்ச்சல் அறிகுறிகள் வரும். இந்த தொற்றால் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டிருக்கிறதோ அதை பொருத்தே அறிகுறிகளும் மாறுபடும். வயிற்று பகுதியில் தீவிர தொற்று இருந்தால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படும். இந்த நோயை ஆன்டி பயாடிக்கும் ஆன்டி வைரல் மருந்துகளும் கட்டுப்படுத்தாது.
இந்த உடல் முழுவதும் பரவி ஒவ்வொரு உறுப்பாக பாதிக்கும். சிறுநீர் பாதையில் தொற்று இருந்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும், மேலும் இதய பாதிப்புகளும் ஏற்படும், ரத்த அழுத்தம் குறைந்துவிடும். பின்னர் நுரையீரலையும் இது பாதிக்கும். இது போல் உடல் முழுவதும் தொற்று பாதித்தால் அந்த நோயாளி சுயநினைவை இழக்க வாய்ப்பிருக்கிறது. இதை செப்டீமியா என்றும் அழைக்கலாம்.
யாருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறதோ அவர்களுக்கு இந்த நோய் வரும். அது போல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும், அதனால் அவர்களுக்கும் இந்த செப்சிஸ் வரலாம். முக்கியமாக புற்றுநோய் பாதித்தவர்களுக்கு, வயது முதுமை காரணமானவர்களுக்கும் வரலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால் இந்த செப்சிஸ் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications