"ரொம்ப ஆபத்து.." கை கழுவினால் பாயும் பாக்டீரியாக்கள்.. தப்பி தவறியும் "இதை" மட்டும் செய்யாதீங்க
வாஷிங்டன்: பொதுவாக பாத்ரூமிற்கு செல்லும் போது அனைவரும் கைகளைக் கழுவுவது வழக்கம். ஆனால், இதுவே உங்கள் கைகளில் பாக்டீரியா வரக் காரணமாக இருக்கும் என்றால் நம்ப முடிகிறதா.. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தொற்றுநோய்களைத் தவிர்க்கவும் நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கவும் சிறந்த வழி, பொதுக் கழிப்பறைகளைப் பயன்படுத்திய பிறகு அடிக்கடி கைகளைக் கழுவுவதுதான். கைகளைக் கழுவிய பின்னர், நாம் பெரும்பாலும் கைக்குட்டை மூலம் கைகளைத் துடைப்போம்.

இல்லையென்றால் டிஷ்யூகளை வைத்து கைகளைத் துடைத்துக் கொள்வோம். ஆனால், இப்போது பல பொது கழிப்பறைகளில் ஹேண்ட் ட்ரையர்களும் ஒரு முக்கிய ஆப்ஷனாக இருக்கிறது.
ஆனால் ஹேண்ட் ட்ரையர்களை பயன்படுத்துவது எப்போதும் பாதுகாப்பானதா என்ற கேள்வி அவ்வப்போது எழுந்து கொண்டே தான் இருக்கிறது.
ஹேண்ட் ட்ரையர்கள்: கனெக்டிகட் ஸ்கூல் ஆஃப் மெடிசின் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஆய்வை நடத்தினர். அதில் ஹேண்ட் ட்ரையர் இல்லாத பாத்ரூம்களில் வெறும் ஆறு பாக்டீரியா நோய்க்கிருமிகள் மட்டுமே உள்ளன.. இவை அனைத்தும் மலத்திலிருந்து உருவாகின்றன..
அதேநேரம் ஹேண்ட் ட்ரையர்களைக் கொண்ட பாத்ரூம்களில் மொத்தம் 254 வகையான பாக்டீரியாக்கள் இருந்ததை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த நோய்க்கிருமிகள் உங்கள் கைகளில் மட்டும் பரவாது.. கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் அது பரவக்கூடும் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது.
இது ஒன்றும் புதிதான கருத்து இல்லை. பல காலமாகவே ஹேண்ட் ட்ரையர்கள் மூலம் பாக்டீரியாக்கள் பரவுவதாகவே சொல்லப்பட்டு வருகிறது. அதை உறுதி செய்யும் விதமாக இந்த ஆய்வு இருக்கிறது. இதனிடையே இது குறித்த வீடியோ ஒன்றும் இணையத்தில் பரவி வருகிறது.
டிரெண்டாகும் வீடியோ: அந்த வீடியோ ஹேண்ட் ட்ரையர்கள் இருக்கும் மூன்று வெவ்வேறு இடங்களில் பாக்டீரியாக்கள் எந்தளவுக்கு இருக்கிறது, என்ன டைப் பாக்டீரியா இருக்கிறது என்பதைக் காட்டுவதாக உள்ளது. மால், தியேட்டர், வேலை செய்யும் இடம் ஆகிய இடங்களில் உள்ள பாத்ரூம்களின் ஹேண்ட் ட்ரையர்களில் எத்தனை பாக்டீரியாக்கள் இருக்கிறது என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.
ஹேண்ட் ட்ரையர்களில் இருந்து பாக்டீரியாக்கள் உருவாகி, அது மற்றவர்களையும் பாதிக்கலாம். இதைத் தடுக்க ஹேண்ட் ட்ரையர்களில் வடிகட்டிகளைப் பொறுத்தலாம். ஆனால், அதுவும் கூட 75 சதவீத பாக்டீரியாக்களை மட்டுமே தடுக்கும்.
எனவே, ட்ரையருக்குப் பதிலாக பேப்பர் டவலைத் தேர்ந்தெடுப்பதே பாக்டீரியாக்களை தடுக்க சிறந்த வழியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கொரோனா காலம்: கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய காலத்தில் அனைவரும் நம்மிடம் அறிவுறுத்தியது அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என்பதுதான். கைகளைச் சோப்பு போட்டுக் கழுவினால் மட்டுமே பாக்டீரியா, வைரஸ்களை கொல்ல முடியும். இதன் மூலமே கொரோனா பாதிப்பைத் தடுத்து நிறுத்த முடியும் என்றார்கள். அவர்கள் சொன்னது போலவே அந்த காலத்தில் கை கழுவும் பழக்கமும் அதிகரித்தது. இதன் மூலமே நாம் கொரோனா பரவலை வெகுவாக குறைத்தோம்.
ஆனால், கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு கை கழுவும் பழக்கமும் வெகுவாக குறைந்தது. கை கழுவும் பழக்கம் குறைந்ததால் இப்போது மீண்டும் பல வித பாக்டீரியாக்கள், வைரஸ்கள் பரவ தொடங்கியுள்ளன.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications