வீட்டின் பக்கத்தில் புறாக்கள் இருக்கிறதா? எச்சரிக்கை தேவை.. உயிரை பறிக்கும் நோய் ஏற்படும்! ஷாக்
புறாக்கள் உள்ளிட்ட பறவைகளுக்கு உணவளிக்கும் போது நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
டெல்லி: பறவைகளுக்கு உணவு அளிப்பது நல்லதுதான்.. ஆனால், புறாக்களுக்கு நமது இருப்பிடத்திற்கு அருகிலேயே வைத்து உணவு கொடுப்பது நமது நுரையீரலைச் சீக்கிரம் பாதிக்கலாம்.. இது ஹைபர்சென்சிட்டிவ் நிமோனியா பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்
உலகில் பெரும்பாலான இடங்களில் நம்மால் புறாக்களை எளிதாகப் பார்க்க முடியும்... சென்னை போன்ற பெருநகரங்களில் காகத்தைப் பார்ப்பது கூட அரிது.. ஆனால், புறாக்களை நம்மால் அங்கும் பார்க்கலாம்.
இதற்கு முக்கிய காரணமே காகங்களால் அவ்வளவு எளிதாக இருக்கும் சூழலுக்கு ஏற்ப மாற முடியாது. இருப்பினும், புறாக்களால் தாங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப மிக எளிதாக மாறிவிட முடியும். இதனால் தான் நகரங்களிலும் புறாக்கள் எளிதாக நம்மால் பார்க்க முடிகிறது.

புறாக்கள்
புறாக்கள் என்றாலே அமைதியான சின்னமாகவே நாம் பார்க்கிறோம். பெரும்பாலான அரசியல் தலைவர்களும் அமைதியின் சின்னமாகப் புறாக்களைப் பறக்க விடுவார்கள்.. மேலும், பொதுமக்களும் பலரும் கூட்டமாக வரும் புறாக்களைப் பார்த்து ரசிப்பார்கள். மேலும், அதற்கு உணவளிப்பது, தண்ணீர் கொடுப்பது போன்ற செயல்களையும் செய்வார்கள். பறவைகளுக்கு உணவு அளிப்பது நல்லதுதான்.. ஆனால், புறாக்களுக்கு நமது இருப்பிடத்திற்கு அருகிலேயே வைத்து உணவு கொடுப்பது நமது நுரையீரலைச் சீக்கிரம் பாதிக்கலாம்.. இது ஹைபர்சென்சிட்டிவ் நிமோனியா பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நிமோனியா
ஹைபர்சென்சிட்டிவ் நிமோனியா என்பது சுவாச கோளாறை ஏற்படுத்தும் பாதிப்பாகும்.. பறவை வளர்ப்போர் மத்தியில் நுரையீரல் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், செல்லப்பிராணிகள் கடையில் வேலை செய்வோர்.. கோழிப் பண்ணைகளில் வேலை செய்வோர்.. தொடர்ச்சியாகப் புறாக்களுக்கு உணவளிப்போருக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. பறவையின் எச்சங்கள், அதில் இருந்து கிளம்பும் தூசி மற்றும் இறகுகளுடன் நாம் அடிக்கடி தொடர்பு கொள்வதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.

ஹைபர்சென்சிட்டிவிட்டி நிமோனிடிஸ்
ஏவியன் ஹைபர்சென்சிட்டிவிட்டி நிமோனிடிஸ் (Hypersensitive Pneumonia) என்றும் அழைக்கப்படும் இந்த பாதிப்பு.. பறவையின் எச்சங்கள், தூசிகள் மற்றும் இறகுகளால் சூழப்பட்ட இடத்தில் நீண்ட காலம் இருந்தால் ஏற்படும் பாதிப்பாகும். இது ஒரு நுரையீரல் நோயாகும்.. இது மெல்ல மெல்ல நுரையீரலில் மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்தும்,. இது மெதுவாகச் சுவாச செயலிழப்பை ஏற்படுத்துகிறது. இதைக் கண்டறிவது கடினம் என்பதால்.. மருத்துவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். இதனால் நுரையீரல் மோசமாகப் பாதிக்கப்படுகிறது.

அறிகுறிகள்
நெஞ்சு இறுக்கம், சோர்வு, மூச்சுத் திணறல், காய்ச்சல், இருமல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.. பொதுவாக நமது நாட்டில் பால்கனிகள், மொட்டை மாடிகள், கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து மக்கள் பறவைகளுக்கு உணவளிக்கிறார்கள். இந்தியாவில் 21% நுரையில் பாதிப்பு பறவையின் இறகுகள் மற்றும் எச்சங்களின் வெளிப்பாட்டால் ஏற்படுகிறது. இவர்களுக்கு ஹைபர்சென்சிட்டிவிட்டி நிமோனிடிஸ் ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம்.

எச்சரிக்கை தேவை
பறவைகள் வளர்ப்போர் மத்தியில் ஏற்படும் நுரையீரல் பாதிப்பு இதுவரை முறையாக ஆவணப்படுத்தப்படவில்லை என்றாலும், அது இப்போது அதிகரிக்கும் பிரச்சினையாக இருக்கிறது. ஹைபர்சென்சிட்டிவிட்டி நிமோனிடிஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதே சிறந்த வழியாகும். எனவே, முடிந்த வரை பறவைகள் அதிகம் இருக்கும் இடங்களில் அதிக காலம் செல்வதைத் தடுக்க வேண்டும். மேலும். வீட்டில் பறவைகளை வளர்த்தால், கவனமாக அடிக்கடி க்ளீன் செய்து சுத்தமாக வைத்திருங்கள். பறவைகளுக்கு உணவளிப்பதைத் தவிர்க்கலாம்.

சுத்தம்
உணவளிப்பதை வழக்கமாக வைத்திருந்தால்.. அந்த இடத்தையும் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து சுத்தமாக வைத்திருங்கள்.. அதன் எச்சங்கள் ஆபத்தானது என்பதால் அதில் இருந்து விலகியே இருங்கள். செல்ல பிராணிகள் கடையில் வேலை செய்வோர் என்றால்.. முறையான பாதுகாப்பு உபகரணங்களை அணிந்து கொள்ளுங்கள்.. பாதிப்பு ஏற்பட்டுவிட்டால்.. கார்டிகோஸ்டீராய்டுகள் எடுத்துக் கொள்ளலாம்.. இருப்பினும், மோசமான பாதிப்புகள் ஏற்பட்டால் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை கூட தேவைப்படலாம்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications