தோசை மாவு அரைக்கறீங்களா? இதை மட்டும் சேர்த்துக்குங்க.. தயிர் இருக்கா? சத்தான இட்லிக்கு சூப்பர் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இட்லி, தோசை மென்மையாகவும், சத்தானதாகவும் கிடைக்க வேண்டுமானால், என்ன செய்ய வேண்டும் தெரியுமா? இதோ குட்டி டிப்ஸ்.

1 இட்லியில் 65 கலோரிகள், 2 கிராம் புரோட்டீன், 2 கிராம் நார்ச்சத்து, 8 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளதாலும், கொழுப்புச்சத்து இல்லாமல் உள்ளதாலும், இட்லி மிகச்சிறந்த உணவாக கருதப்படுகிறது.

How to make Healthy Idli Easily and Do you know what are the Super tips to make spongy Idly

எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு என்பதுடன், தசைகளை வலிமையடைய செய்கின்றன இட்லி.. ரத்தத்தை உற்பத்தி செய்வதில் இட்லிக்கு பெரும் பங்கு உள்ளது.. மூளையில் உள்ள செல்களுக்கு சுறுசுறுப்பை தருவதால், தினமும் இட்லி சாப்பிடுவது நல்லது.. இதனால், வயிற்றிலுள்ள புண்களும் ஆறிவிடும்.

சத்தான இட்லி: ஆனால் மாவு அரைக்கும்போது, வெறும் அரிசிக்கு, சத்து நிறைந்த தானியங்களை பயன்படுத்தியும் மாவு அரைக்கலாம்.. குறிப்பாக, கேழ்வரகு, ஓட்ஸ், கொள்ளு போன்றவற்றை சேர்த்து இட்லிக்கு மாவு அரைக்கலாம்..

அதேபோல பாசிப்பருப்பு சேர்த்தும் மாவு அரைக்கலாம்.. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.. எடையை குறைக்கவும் இந்த பயறு உதவும். அதேபோல, இட்லிக்கு மாவு அரைக்கும்போது, கருப்பு உளுந்து பயன்படுத்தினால் அதிக நன்மை கிடைக்கும்.

பருப்பு: இட்லி மென்மையாக வரவேண்டுமானால், மாவு அரைக்கும் பக்குவம் முக்கியமாகும்.. அரிசியுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து அரைக்க தேவையில்லை.. மாவு மட்டும் புளித்தால் போதும், உளுந்து புளிக்க தேவையில்லை.. எனவே, இட்லி அவிப்பதற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு, உளுந்தம்பருப்பை ஊற வைத்து, அரைத்து, அரிசி மாவுடன் கலந்து கொள்ளலாம்.. இப்படி செய்தால், இட்லி மென்மையாக வரும்.

இட்லி பஞ்சு போல கிடைக்கவேண்டுமானால், மாவு எப்போதுமே புளிக்க வேண்டும்.. ஏனென்றால், மாவு புளிக்கும்போது, புரோ பயாடிக்குகளை உருவாக்குகிறது..

செரிமானம்: செரிமானம் மேம்படவும், நுண்ணூட்டச்சத்துக்களை பலப்படுத்தவும் இந்த புளிப்பு மாவு தேவையானதாக உள்ளது. குறிப்பாக, குளிர் அல்லது மழைக்காலங்களில், மாவை நீண்ட நேரம் நொதிக்க வைக்க வேண்டும் என்கிறார்கள். அதேசமயம், வெப்பமான கோடை நாட்களில் தோசை மாவை அதிக நேரம் புளிக்க விடக்கூடாதாம்.. காரணம், அதிக வெப்பநிலை காரணமாக, கோடையில் நொதித்தல் செயல்முறை விரைவாக இருக்குமாம்.

இட்லி மாவில் பேக்கிங் சோடாவை சிறிதளவு சேர்த்தால் மென்மையான இட்லி கிடைக்கும்.. அல்லது ஒரு கப் அவலை ஊறவைத்து, விழுதாக நன்றாக அரைத்து, இட்லி மாவுடன் கலந்தாலும், இட்லி பஞ்சு போல மிகவும் மென்மையாக வரும்.

இளநீர்: மாவு புளிக்காதபோது, தயிர் சேர்த்தும் புளிக்கவைப்பார்கள்.. மாவை தயிருடன் கலக்கும்போது, நொதித்தல் செயல்முறை விரைவாகிறது, இதனால் இட்லிகள் மென்மையாக மாறும். குளிர்காலத்திலும் மாவு புளிக்காமல் போய்விடும்.. எனவே, இளநீர் தண்ணீரை இட்லி மாவுடன் கலந்தால் இட்லி மாவு சீக்கிரம் பொங்கிவிடும். இதில் இட்லி வார்க்கலாம்.

சுருக்கமாக சொல்லப்போனால், மாவு எவ்வளவு புளித்திருக்கிறதோ, அந்த அளவுக்கு இட்லிகள் மென்மையாகவும், பஞ்சு போன்றதாகவும் கிடைக்கும்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+