உறை ஊற்ற தயிர் இல்லையா? பரவாயில்லை! இந்த 3 பொருள் இருந்தால் சூப்பரான கெட்டி தயிர் ரெடி!
சென்னை: இந்த 3 பொருட்கள் இருந்தால் போதும் தயிர் இல்லாட்டியும் பாலை உறை ஊற்றலாமே!
தயிர் உடலுக்கு நன்மையானது. கோடை காலங்களில் தயிர் இருந்தால் போதும். சாம்பார், ரசம் உள்ளிட்டவை எல்லாம் சாப்பிட்டாலே வயிறு எரிகிறது. ஆனால் தயிர் சாப்பிட்டாலோ தலை முதல் கால் வரை அப்படியே ஜில் ஜில்னு இருக்கிறது.

வயிறு பிரச்சினை என்றாலும் கூட தயிர் சாப்பிட்டால் போதும். வயிற்றுப் போக்கு, வயிற்று வலி ஆகியவை நின்றுவிடும். சில நேரங்களில் தயிர் சாப்பிட சாப்பிட குளிர்ச்சியாக இருக்கிறது என்பதற்காக உறைக்கு கூட வைக்காமல் அப்படியே குண்டானை சாய்த்து கொள்ளும் அளவுக்கு சாப்பிடுவோரும் இருக்கிறார்கள்.
இதனால் பால் நிறைய இருந்தும் உறைய வைக்க தயிர் இல்லாத நிலை சில வீடுகளில் இருக்கும். மேலும் காசு கொடுத்து உறைக்காக ஒரு தயிர் பாக்கெட்டை வாங்க வேண்டுமா என்ற யோசனையும் சிலருக்கு இருக்கும். இன்னும் சொல்ல போனால் பாக்கெட் தயிரே பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழல்களில் கைவசம் 3 பொருட்கள் ஐடியா இருக்கின்றன. அதாவது முதலில் பாலை ஓரளவுக்கு சுண்ட காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதை நன்கு ஆற வைத்து அதில் 3 அல்லது 4 பச்சை மிளகாயை காம்புடன் சேர்த்துவிட வேண்டும். பின்னர் அப்படியே மூடி வைக்க வேண்டும். காலை விடிந்ததும் பார்த்தால் கெட்டியான தயிர் தயாராகிவிடும்.
அது போல் இஞ்சியை தோல் சீவி நன்கு கழுவியும் பாலில் போட்டால் அது உறையாகிவிடும். பிறகு இஞ்சியை எடுத்து விடலாம். இல்லாவிட்டால் அப்படியே இஞ்சியை நசுக்கி தயிரை தாளித்துக் கொள்ளலாம். அது போல் எலுமிச்சை பழச் சாறையும் பயன்படுத்தலாம். ஆனால் பாலை நன்கு ஆற வைத்திருக்க வேண்டும்.
ஒரு வேளை ஆறாமல் இருந்தால் எலுமிச்சை சாறு விட்டதும் பால் திரி திரியாக போய்விடும். சிலர் பன்னீர் தயாரிக்கவும் பாலை எலுமிச்சை சாறு போட்டு திரிய விட்டு பிறகு அதை நன்கு வடிகட்டி கைகளால் பிசைந்து அதை சிறிது நேரம் கழித்து விரும்பிய வடிவங்களில் கட் செய்து பயன்படுத்தலாம்.
தயிரை தினசரி சாப்பிட்டு வருவதால் இதயம் வலுப்பெறும். உயர் ரத்த அழுத்தம் ஏற்படாது. தயிரை சாப்பிட்டால் பெண்களின் பிறப்புறுப்பில் நோய் தொற்று ஏற்படாது. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும் தோல் பகுதியையும் தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது.
பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் சியை தருகிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துகளை கொண்டுள்ளது. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர்தான் சிறந்த மருந்து. தயிரில் லேக்டிக் அமிலம் இருப்பதால் அவை கிருமிகளை விரட்டும்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications