குதிரைவாலி அரிசி.. சர்க்கரை நோயாளிகளின் சிறுதானிய தோழன்.. "இதய" நண்பன்.. டாப் பலனை தரும் குதிரைவாலி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறுதானியங்களை நோக்கி, சமூகம் திரும்பி கொண்டிருக்கிறது.. அந்தவகையில், அரிசி மற்றும் கோதுமை உணவுகளுடன் ஒப்பிடுகையில் அதிக சத்துக்களை கொண்டது குதிரைவாலி.. கோதுமையில் உள்ள நார்ச்சத்தின் அளவை விட 6 மடங்கு நார்ச்சத்து இந்த குதிரைவாலி அரிசியில் இருக்கிறது என்றால் பாருங்களேன்.

குதிரைவாலி அரிசியில் வைட்டமின் A, B, C, D, K, இரும்புச்சத்துக்கள், மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைந்திருக்கின்றன.. உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் என ஏகப்பட்ட சத்துக்கள் அடங்கி உள்ளன.

Kuthiraivali Rice is the Best Food for Heart Patients, and Do you know, Excellent Benefits in the Horsetail rice

சிறுதானியங்கள்: குதிரைவாலியை ஆதிகால மக்களே, பயன்படுத்தியிருக்கிறார்கள்.. அந்த அளவுக்கு சத்துக்கள் நிறைந்தது.. உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக இந்த குதிரைவாலி தானியத்தை பயன்படுத்தலாம்.. காரணம், மிகக்குறைந்த அளவே கலோரிகள் இதில் உள்ளன.

அதாவது, 25 கிராம் குதிரை வாலியை சமைத்தால், 75 கிராம் முதல் 90 கிராம் வரை சாப்பாடு கிடைக்குமாம்.. இதில் கிட்டத்தட்ட 65 கலோரிகள் வரை கிடைக்கும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, இதில் நார்ச்சத்துக்களும் அதிகம்.. 25 கிராம் குதிரை வாலியில் 2.4 கிராம் அளவிற்கு நார்ச்சத்து இருக்கிறது.. இதனால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கி, குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.

நார்ச்சத்து + கலோரிகள்: உடலில் தேங்கிக்கிடக்கும் நச்சுக்களையும், உப்புக்களையும் கரைத்து வெளியேற்றிவிடும். குறைந்த கலோரி + நார்ச்சத்து இவை இரண்டும் இருப்பதால்தான், உடல் எடை குறைய இந்த தானியத்தை பலரும் நாடுகிறார்கள்.

சர்க்கரை நோயாளிகளுக்கேற்ற உணவாக இந்த அரிசி உள்ளது.. கார்போஹைட்ரேட் வேகமாக செரிப்பதை இந்த அரிசி தாமதப்படுத்துவதுடன், உடலில் குளுக்கோஸ் அதிகரிப்பும் கட்டுப்படுத்தப்படுகிறது. குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதால், இந்த உணவை நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கக்கூடாது என்கிறார்கள். ரத்தசோகை பிரச்சனையை தீர்க்கிறது.. பீட்டா கரோட்டின் உள்ளதால், கண் சம்பந்தமான கோளாறு வரவிடாமல் செய்யும்.

ரத்தக்கொதிப்பு: இதயப்பிரச்சனை உள்ளவர்களும், ரத்தக்கொதிப்பு உள்ளவர்களும், சர்க்கரை நோயாளிகளும் குறிப்பிட்ட அளவில் இந்த அரிசியை பயன்படுத்தலாம். தசைகள், எலும்புகளுக்கு வலிமையை தருகிறது..

எப்படி சமைப்பது: இந்த குதிரைவாலி அரிசியைவைத்து, சர்க்கரை பொங்கல், லட்டு, அதிரசம் இப்படி தினுசு தினுசாக செய்து சாப்பிடலாம். ஆனால், டயட்டில் இருப்பவர்கள், இட்லி, இடியாப்பம் கொழுக்கட்டை இப்படி ஆவியில் வேகவைத்து இந்த அரிசியை பயன்படுத்தலாம்.. அல்லது நிறைய காய்கறிகளை நறுக்கி போட்டு உப்புமா செய்யலாம்.

கருவாடு வாங்கறீங்களா.. பெஸ்ட் இந்த 2 கருவாடுதானாம்.. ஆமா, சர்க்கரை நோயாளிகள் கருவாட்டை சாப்பிடலாமா?

இந்த குதிரைவாலி அரிசியில் சிலர் உளுந்து சேர்த்து களி செய்வார்கள்.. அல்லது கஞ்சி செய்வார்கள்.. காய்ச்சல் வந்தால், கஞ்சி செய்து குடித்தாலே காய்ச்சலும் சளியும் பறந்துடுமாம்.. அத்துடன் அடிக்கடி காய்ச்சல், சளி ஏற்படாமலும் தடுத்துவிடும்.

ஓரளவு மட்டுமே பாலிஷ் செய்யப்பட்ட அரிசியை பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும். இந்த அரிசியை நீண்ட நேரம் தண்ணீரில் ஊற வைத்து, அதற்குபிறகே சமைக்க பயள்படுத்த வேண்டும். தினமும் 60 கிராமில் இருந்து 90 கிராம் வரை வாரத்தில் 5 நாட்கள் சாப்பிடலாம். கருவுற்ற பெண்கள் தினமும் ஒருவேளையாவது இதை சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+