கருவாடு வாங்கறீங்களா.. பெஸ்ட் இந்த 2 கருவாடுதானாம்.. ஆமா, சர்க்கரை நோயாளிகள் கருவாட்டை சாப்பிடலாமா?
சென்னை: சர்க்கரை நோயாளிகள் கருவாடு சாப்பிடலாமா? கர்ப்பிணிகள் கருவாடு சாப்பிடலாமா? சளி, இருமல் தொல்லைக்கு கருவாடு எப்படி பயன்படுத்தலாம்?
அசைவ உணவுகளிலேயே, அதிக கொழுப்பு சத்து இல்லாத உணவு இந்த கருவாடுதானாம்.. 80-85 சதவீதம் வரை புரதம் இந்த கருவாடில் இருக்கிறது.. கருவாடு சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. ஆண்டிஆக்ஸிடன்ட் நிறைந்த உணவு என்பதால், இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு சிறந்த மருந்தாகும்.

சுறா கருவாடு: சளித் தொல்லை, இருமல் பிரச்சினை உள்ளவர்கள் கருவாட்டு சாறு வைத்து சாப்பிடலாம்.. இதனால், வாத, கப நோய்களைக் கட்டுப்படுத்தும். மாதவிலக்கு பலவீன சீரமைப்பிற்கும், உடல் தேற்றத்திற்கும் இந்த சுறா கருவாடு உதவுகிறது.. கருவாடு எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது.
இதில் திருக்கை கருவாடு, பெண்களுக்கு மிகவும் பயன்தரத்தக்கது.. நீர்ப்பை, சினைப்பை, கருப்பை பிரச்சினைகளை சரி செய்வதில் முதன்மையானது.. பிரசவித்த பெண்களுக்கு பால் சுரக்க வேண்டுமானால், பால் சுறா கருவாடு போல சிறந்த தீர்வு வேறு கிடையாது..
இதயநோய்: சர்க்கரை நோய் உள்ளவர்கள், எந்த கருவாடையுமே சாப்பிடக்கூடாது.. பொதுவாக, எண்ணெயில் பொரித்த உணவை சாப்பிடுவதால்தான், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் வருகின்றன..
இதயநோய் வந்தவர்கள், கருவாடை நினைத்துக்கூட பார்க்ககூடாது.. கருவாடு, அப்பளம், ஊறுகாய் போன்றவற்றில் உப்பு அதிகமாக இருப்பதால்தான், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்களை இவைகளை தவிர்க்க சொல்கிறார்கள். அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களும் கருவாடு சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
கர்ப்பிணி பெண்களும் கருவாடு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமாம். காரணம், லிஸ்டேரியா எனப்படும் பாக்டீரியா நஞ்சுக்கொடி வழியாக பிள்ளையை சென்றடைந்தால், அது சிக்கலை தந்துவிடுமாம். அது தொற்றையும் ஏற்படுத்தக்கூடும் என்பதால், கர்ப்பிணிகள் கருவாடு தவிர்க்க வேண்டுமாம்.
கர்ப்பிணிகள்: உப்பில் ஊற வைத்த கருவாடு சாப்பிடும்போது, கர்ப்பிணிகளுக்கு வயிற்று அழற்சி, செரிமானமின்மை ஏற்படக்கூடும்.. கர்ப்பகால ரத்த அழுத்த உள்ள பெண்களுக்கு, இது கூடுதலான அழுத்தத்தை தந்துவிடும்.. சர்க்கரை நோய் உள்ள பெண்களும், கர்ப்ப காலத்தில் கருவாடு தவிர்த்தே ஆக வேண்டும். டாக்டர்களின் அறிவுரையை பெறாமல் இவைகளை சாப்பிடக்கூடாது.
கருவாடு சாப்பிட்ட பிறகு பால் பொருட்களை சாப்பிடக்கூடாது.. தயிர் சாப்பிடக்கூடாது... கீரைகளையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.. இவைகளை கலந்து சாப்பிட்டால், வெண் மேகம் போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளதாம்.. தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளிலும், கருவாடு உள்ளிட்ட கடல் உணவுகளை சாப்பிடக்கூடாது.
சுறா கருவாடு: வழக்கமாக, கருவாடு குழம்பு, வறுவல், தொக்கு செய்வார்கள்.. ஆனால், கருவாடு ரசம் போல வைத்தால் கூடுதல் பலன் தரும்.. மிளகு, பூண்டு, சீரகம், திப்பிலி இந்த 4 பொருட்களையும் சேர்த்து, ரசம் போல வைத்து குடிக்கலாம்.. கருவாடுகளிலேயே, பால்சுறா, சுறா இந்த 2 கருவாடும் மிகவும் சிறந்தது என்கிறார்கள். நிறைய மருத்துவ நன்மைகள் அடங்கியிருக்கிறதாம்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது?












Click it and Unblock the Notifications