ஆரோக்கியம் தரும் ஆட்டுக்கறி.. அசைவ உணவில் இதை சேர்த்துடாதீங்க.. இறைச்சியில் எதையெல்லாம் தவிர்க்கலாம்
சென்னை: ஆட்டுக்கறி உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய சத்தான உணவாகும்.. அதேசமயம், மட்டனுடன் சேர்த்து சிலவகை உணவுகளை சாப்பிடும்போது, உடலுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுவிடும்.. அந்த உணவுகள் என்னென்ன தெரியுமா?
ஆட்டுக்கறியுடன் பால் பொருட்களை சேர்த்து சாப்பிடக்கூடாது.. குறிப்பாக தயிர் பச்சடியை தவிர்க்கலாம்.. வெறும் வெங்காயம் சாப்பிடலாமே தவிர, அதை தயிருடன் சேர்த்து சாப்பிடக்கூடாது.. அப்படி பால் பொருட்களை இறைச்சியுடன் சேர்த்து சாப்பிட்டால், வாயு, வீக்கம், அசௌகரியம், வயிற்று வலி, குமட்டல், அமில ரிஃப்ளக்ஸ், நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற தொந்தரவுகள் வரலாம்.

மட்டன்: மட்டனுடன் சேர்த்து தேன் சாப்பிடக்கூடாது.. அப்படி சாப்பிடும்போது, உடல் சூடு அதிகரிக்கும்... மேலும், இதயம் மற்றும் சிறுநீரகம் நேரடியாக பாதிப்புகளை தந்துவிடும். மட்டன், தேன் சேர்த்து சாப்பிடும்போது இதயம் மற்றும் சிறுநீரகம் நேரடியாக பாதித்துவிடும் அபாயமும் உள்ளது.
பொதுவாக, நமக்கு வேகமாக ஜீரணிக்க வேண்டுமானால், பப்பாளிக்காயுடன் சேர்த்து இறைச்சியை சாப்பிடலாம்... ஏனென்றால் இறைச்சியை மிருதுவாக மாற்றும் தன்மை பப்பாளிக்கு உண்டு.
கிழங்கு வகைகள்: அதேபோல, கிழங்கு வகைகளுடன் சேர்த்து மட்டன் சாப்பிடக்கூடாது.. காரணம், இறைச்சி வகைகள் ஜீரணமாக நேரம் பிடிக்கும்.. அதுபோலவே, கிழங்கு வகைகளும் எளிதில் ஜீரணமாகாது. இவை இரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது, செரிமானம் சிக்கலாகிவிடும். இது மலச்சிக்கலை உண்டுபண்ணிவிடும்.. நாளடைவில், உடல் எடை அதிகரிக்கவும் இது வழிவகுத்துவிடும். கிழங்கு வகைகளுக்கு மட்டுமல்லாமல், மைதா போன்ற மாவு வகைகளுக்கும் இது பொருந்தும்.
முள்ளங்கியையும் இறைச்சியையும் சேர்த்து சாப்பிடக்கூடாது. இவை இரண்டிலுமே புரதச்சத்து அதிகம் என்பதால், ரத்தத்தில் நச்சுத்தன்மை ஏற்பட்டுவிடக்கூடும்...
முள்ளங்கி: அதேபோல முளைகட்டிய பயிறு, கருப்பு உளுந்து உள்ளிட்ட தானியங்களுடன் இறைச்சியை சேர்த்து சாப்பிடுவதை தவிர்க்கலாம். இதனால் சிறுநீரகத்தில் கல் உண்டாக வாய்ப்புள்ளது.. கீரையுடன் இறைச்சி சாப்பிட்டால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம். அதேபோல, கடலை எண்ணெய், கடுகு எண்ணெய் போன்றவற்றில் அடர்த்தி அதிகம் என்பதால், இந்த எண்ணெய்யை அசைவத்துக்கு பயன்படுத்தக்கூடாது.
அதேபோல, மட்டன் சாப்பிட்டதும் டீ குடிக்கக்கூடியது.. ஜீரணமாகும் என்று நினைத்து சிலர் பிரியாணி சாப்பிட்டதும் டீ குடிப்பார்கள்.. ஆனால், இதற்கு நேர்மாறாக அஜீரணம், நெஞ்செரிச்சல் ஏற்படுத்திவிடும்.. அப்படி ஜீரணம் ஏற்பட வேண்டுமானால், பால் சேர்க்காத சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.. இதனால், வயிறு உபாதைகளும் நமக்கு சீராகும். அல்லது வெறுமனே சுடுநீர் குடிக்கலாம்..
பெருஞ்சீரக தண்ணீர்: அல்லது பெருஞ்சீரக தண்ணீர் குடிக்கலாம்.. இதனால் செரிமானம் விரைந்து நடப்பதுடன், உடலில் கெட்டக்கொழுப்பு சேராது. அல்லது ஜில்லென்று ஜூஸ் போல குடிக்க வேண்டுமானால், லெமன் ஜூஸ் குடிக்கலாம்.. இதனால் செரிமானமும் நன்றாக இருக்கும்.












Click it and Unblock the Notifications