சிறுநீரக கற்களை வெளியேற்றும் நெருஞ்சி இலைகள்.. நெருஞ்சியில் இருக்குது நன்மை.. அபார மூலிகை நெருஞ்சி
சென்னை: உடலுக்கு குளிர்ச்சியை தந்து, பல்வேறு நோய்களை குணப்படுத்தக்கூடிய நெருஞ்சில் செடியை பற்றி தெரியுமா? நெருஞ்சில் விதைகள், நெருஞ்சில் இலைகள் என ஆண்களுக்கும், பெண்களுக்கும் எந்தெந்த வழிகளில் பயன்தருகின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
இதய நோய்களுக்கும், பாலியல் பிரச்சனைகளுக்கும், சிறுநீரகக்கோளாறுகளுக்கும், மனநிலை சார்ந்த பிரச்சனைகளுக்கும், குழந்தையின்மை பிரச்சனைக்கும், கல்லீரல் பிரச்சனைக்கும், என பலவகையான நோய்களை தீர்க்க, சீன,கிரேக்க, சித்த மருத்துவங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதுதான் இந்த நெருஞ்சில்

நன்னாரி வேர்கள்: நன்னாரி வேர்களை போலவே, இந்த நெருஞ்சில் தாவரமும் குளிர்ச்சியை கொண்டது.. இந்த தாவரத்தையும் காய வைத்து, தண்ணீரில் கலந்து குடித்து வந்தால், உடலில் உஷ்ணம் தணிந்து குளிர்ச்சி கிடைக்கும்.. உடலில் வீக்கங்கள் இருந்தாலும் சரியாகிவிடும்.
நெருஞ்சி செடியின் இலை, வேர், காய், பூ, தண்டு என அனைத்து பாகங்களுமே உடலுக்கு நன்மை தரக்கூடியது.. இங்கு புல்வெளிகள், தரிசு நிலங்கள், வயல்வெளிகள், தோட்டங்கள் எங்கு வேண்டுமானாலும் காணப்படும்.
சிறுநீர்ப்பாதை: நெருஞ்சியில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் அபரிமிதமாக உள்ளன. சிறுநீரகத்துக்கு இந்த செடி மிகவும் நல்லது.. சிறுநீர்ப்பாதையில் தொற்றை குணப்படுத்தக்கூடியது இந்த நெருஞ்சி.. சிறுநீரகத்திலுள்ள கற்களையும் கரைக்கக்கூடியது,.
நெருஞ்சில் முள் 50 கிராம், கொத்தமல்லி விதை 5 கிராம் இரண்டையும் அரை லிட்டர் தண்ணீரில் கொதிக்க வைத்து, காலை, மாலை 2 வேளையும் 60 மில்லி அளவு குடித்து வரும்போது, சிறுநீர் கடுப்பு, நீர் எரிச்சல், கல் அடைப்பு போன்றவை குணமாகும்.. அல்லது நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இரண்டையும் சமஅளவு எடுத்து தூள் செய்து கொண்டு, இதிலிருந்து 2 கிராம் மட்டுமே எடுத்து இளநீரில் கலந்து குடித்து வந்தாலும் கல்லடைப்பு குணமாகும்.
நீர்வடிதல்: நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி, ஒரு பிடி அருகம்புல் சேர்த்து, தண்ணீரில் சுண்ட காய்ச்சி, இருவேளையும் 50 மில்லி அளவு, 3 நாட்கள் குடித்து வரும்போது, உடலிலுள்ள மொத்த உஷ்ணமும் தணிந்துவிடும்.. கண்எரிச்சல், கண்ணில் நீர்வடிதல் குணமாகும்..
நெருஞ்சில் செடியை அரைத்து வெள்ளாட்டுப் பாலில் ஊற வைத்து வடிகட்டி, தேனில் கலந்து சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கும் என்பார்கள்.. அதேபோல, நெருஞ்சில் விதைப்பொடியுடன் நீர்முள்ளி விதைப்பொடி, வெள்ளரி விதைப்பொடியையும் சேர்த்து பாலில் கலந்து குடித்துவந்தாலும், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஆண்மை பெருகும்: நெருஞ்சில் இலைகளை வெள்ளாட்டுப்பாலுடன் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் கலந்து குடிப்பதால் ஆண்மை பெருகும். அல்லது நெருஞ்சில் முள்ளை பசும்பாலில் வேகவைத்து எடுத்து, அதை காயவைத்து பவுடர் செய்து, தினமும் 2 கிராம், 2 வேளையும், பாலில் கலந்து குடித்து வந்தாலும் ஆண்மை பெருகுமாம்..
நெருஞ்சில் வேரினை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து குடித்து வரும்போது, பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவார்கள்... அதேபோல, 50 கிராம் நெருஞ்சில் இலையை சுத்தம் செய்து, அரை லிட்டர் தண்ணீரில் காய்ச்சி குடித்து வந்தால், கர்ப்பப்பைக் கோளாறுகள் விலகிவிடும்.
கல்லீரல்: கல்லீரலைப் பலப்படுத்தும் மூலிகையாகவும் நெருஞ்சிலை திகழ்கிறது.. இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், நெருஞ்சில் பொடியை பாலில் கலந்து, தூங்கும் முன்பு குடித்து வரலாம். இப்படி பல்வேறு பலன்களை இந்த நெருஞ்சில் தந்தாலும், மருத்துவர்களின் முறையான ஆலோசனையை பெற்றே மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications