பச்சை வைரம் துத்திக்கீரை.. முறிந்த எலும்பு முதல் மூலம், கிட்னி பிரச்சனைக்கு உதவும் துத்தி இலை.. செம
சென்னை: மூலம் நோய்களுக்கு சரியான தீர்வை தரும் துத்திக்கீரையை பற்றி தெரியுமா? ஒட்டுமொத்த குடல ஆரோக்கியத்துக்கும் துத்தி கீரைகள் மருந்தாக காரணம் என்ன தெரியிமா? குளிர்ச்சி நிறைந்த துத்திக்கீரைகள் தரும் மருத்துவ குணங்கள் என்னென்ன? யார் எலும்பு முறிவு ஏற்பட்டோருக்கு இந்த கீரை தரும் நன்மை என்னென்ன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.
துத்திக்கீரைகள் என்பது மற்ற கீரைகளை போலவே சமையலுக்கு பயன்படக்கூடியவை.. இதய வடிவில் இலைகளும், சக்கர வடிவில் காய்களுக்கும் இருக்கும். பாசிபருப்பு, சின்னவெங்காயம், சீரகம் சேர்த்து கடைந்து சாப்பிட்டால் அபார ருசியாக இருக்கும்.

துத்திக்கீரை துவையல்
அல்லது சின்ன வெங்காயம், துவரம்பருப்பு. மிளகுத்தூள் சேர்த்து இந்த கீரையை கூட்டு போலவும் சாப்பிடலாம். வெறுமனே துத்தி கீரையில் கசாயம் போல வைத்து குடிக்கலாம். அல்லது சின்ன வெங்காயம், பச்சை பயறு சேர்த்தும் கூட்டு வைக்கலாம். அல்லது தோசை மாவுடன் துத்திக் கீரையை பொடியாக நறுக்கி போட்டு தோசை சுட்டு சாப்பிடலாம்.
இந்த இலையில் ரசம் வைத்து குடித்தால், கிட்னி தொந்தரவுகள் நெருங்காமல் இருக்கும்.. கல்லீரல் நோய், புற்றுநோய் , ஆஸ்துமா, காசநோய்கள் போன்றவைகளை குணமாக்க துத்திக்கீரைகள் மருந்தாக பயன்படுகின்றன. இதன் இலைகள், பூக்கள், காய்கள், வேர்கள், போன்றவைகளை வைத்து கஷாயம் போல வைத்து குடித்தால் ஆண்களுக்கு நரம்புகளுக்கு வலு கொடுக்கும்..
உஷ்ண கோளாறுகள்
துத்திக்கீரைகள் குளிர்ச்சியை தரக்கூடியது.. எனவே உஷ்ணம் சம்பந்தமான கோளாறுகளை துத்திகீரை தீர்க்கிறது.. குறிப்பாக அபாயகரமான மூலம் பிரச்சனையை தீர்க்கிறது.. துத்தி இலைகளை அரைத்து சாறு போல வெறும் வயிற்றில் 1 கிளாஸ் குடித்து வந்தால் மூலம் கட்டுக்குள் வரும்..
உடம்பில் உஷ்ணக்கோளாறுகள் இருந்தால், துத்தி இலைகளை சுத்தம் செய்து தூள் செய்து, பசும்பாலில் கலந்து குடிக்கலாம். இதனால், உஷ்ண கட்டிகள், புண், போன்றவை ஆறிவிடும்.. உடையாத கட்டிகள் இருந்தால், துத்திக்கீரையிலிருந்து சாறு எடுத்து, அரிசி மாவுடன் கலந்து சாப்பிடலாம்
எலும்புகள் கூடிட
சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு, வாயு வியாதிகள், குடல்புண்கள், போன்றவற்றை ஆற்றுகிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய துத்திக்கீரைகள் ஜீரண தொந்தரவுகளையும் சீராக்குகிறது. எலும்பு முறிவு ஏற்பட்டால், துத்திக்கீரையை அரைத்து பூசி கட்டினால், எலும்புகள் கூடிவிடும்.
துத்தி இலையை தண்ணீரில் போட்டு குதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வரும்போது பற்கள், ஈறுகள் வலுப்படும்.. கர்ப்பப்பை தொந்தரவு, மாதவிலக்கு தொந்தரவு இருந்தால், துத்தி இலைகளை நெய்யில் வதக்கி சுடுசோற்றில் கலந்து சாப்பிடலாம் அல்லது துத்திக்கீரையின் விதையை தூள் செய்து குடித்தாலும் பெண்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications