'அந்த' விஷயத்துல மட்டும் ஏன் அதிகம் பொய் சொல்கிறோம் தெரியுமா? ஆய்வாளர்களின் விளக்கம் இதுதான்
நியூயார்க்: பாலியல் விவகாரங்களில் ஏன் மனிதர்கள் அதிகம் பொய் சொல்கிறார்கள் என்பது குறித்து நீண்ட காலமாக கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதற்கான விளக்கத்தை ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்து விளக்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் எல்லா உயிரினங்களும் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுகிறது என்றாலும் மனிதர்களை போல அவைகள் கீழ்த்தரமாக நடந்துக்கொள்வதில்லை. பாலியல் வன்கொடுமைகள் போன்றவை மற்ற உயிரினங்களிடையே இருப்பதில்லை. பெரும்பாலான உயிரினங்களில் பெண் உயிரினம் தங்கள் துணையை தாங்களே தேர்வு செய்துகொள்கின்றன. ஆனால் மனிதர்கள் மட்டும் ஏன் இப்படி இருக்கிறார்கள்? இது ஒருபுறம் எனில் மறுபுறம் ஏன் அவர்கள் பாலியல் செயல்பாடுகளில் பொய் சொல்கிறார்கள்? என்கிற கேள்வியும் மேலெழுகிறது.

இது குறித்து ஆய்வாளர்கள் சில விளக்கங்களை கூறியுள்ளனர். அதாவது பெண்கள் எம்மாதிரியான பொய்களை கூறுகின்றனர்? ஆண்கள் எந்த விதமான பொய்களை கூறுகின்றனர்? என்பதை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். பெண்களை பொறுத்த அளவில் தான் எத்தனை ஆண்களுடன் செக்ஸ் கொண்டிருக்கிறேன் என்பதை அவர்கள் வெளிப்படையாக கூற மாட்டார்கள். இதற்கு பின்னர் பெரிய உளவியல் காரணம் இருக்கிறது. அதாவாது, பெண்கள் எத்தனை ஆண்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள் என்பதை வெளிப்படையாக கூறினால் அந்த பெண் குறித்து ஆண்கள் மிகவும் கீழ்தரமான கண்ணோட்டத்தை உருவாக்கி விடுகிறார்கள்.
அமெரிக்காவின் மத்திய மேற்கு பல்கலைக்கழகத்தில் 293 மாணவ/மாணவிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் செக்ஸ் விஷயத்தில் இருபாலரும் ஏன் பொய் சொல்கிறார்கள்? என்பது குறித்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டதை போல பெண்களின் செக்ஸ் விஷயத்தில் ஆண்களின் சிந்தனைகள் மிகவும் கீழ்தரமாக இருக்கிறது. இதற்கு அடிப்படை காரணம் பெண்களின் கன்னி தன்மை குறித்த சிந்தனைகள்தான். 2023ம் ஆண்டில் கூட பெண்களின் கன்னி தன்மையை ஆண்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
காலங்காலமாக இந்த கருத்துக்கள் பேசப்பட்டு வந்திருந்தாலும் கூட 2000க்கு பிறகு இந்த கருத்துக்கள் பெரும்பாலும் நீர்த்து போய்விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த மத்திய மேற்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த கருத்துக்கள் பரம்பரை பரம்பரையாக கடத்தப்பட்டு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் மாணவிகள் தங்கள் பாலியல் பார்ட்டனர்கள் குறித்து உண்மையை கூறவில்லை. அவ்வாறு வெளிப்படையாக கூறினால் அந்த பெண்களை பாலியல் தொழிலாளியாக கூட ஆண்கள் சமூகம் விமர்சிப்பதாக மாணவிகள் கூறியள்ளனர்.

ஆனால் ஆண்களை பொறுத்த அளவில் இதெல்லாம் ஒரு பெரிய பிரச்னையே கிடையாது. அவர்கள் குறைவான பெண்களுடன் செக்ஸ் வைத்திருந்தாலும் கூட அதிகமான பெண்களிடம் செக்ஸ் கொண்டதாக பொய் கூறுகிறார்கள். ஆண்களை பொறுத்த அளவில் எத்தனை பெண்களுடன் செக்ஸ் வைத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அவர்களின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. இந்த காலத்திலும் இப்படியான தற்பெருமைகளை நம்பிக்கொண்டிருப்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை ஆண்கள் உணரவே இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சில நேரத்தில் இந்த பொய்கள் நல்ல விஷயங்களுக்காகவும் சொல்லப்படுகிறது. அதாவது தனக்கு இதற்கு முன்னர் செக்ஸில் பழக்கம் இருந்ததில்லை என்று சொல்வது அந்த நேரத்தில் ஆண்களை திருப்திப்படுத்தவும், மனநிறைவை கொடுக்கவும் பயன்படுகிறது. அதேபோல உச்சமடைந்தது தொடர்பான பொய்கள் வழக்கமானவையாக இருக்கின்றன. அதாவது செக்ஸில் பெண்கள் உச்சமடைந்துவிட்டார்கள் என்று சொல்வதும் ஆண்களை திருப்திப்படுத்துவதாக இருக்கிறது. ஆனால் பொய்கள் அந்த நேரத்திற்கு நன்றாக இருந்தாலும் நீடித்த நன்மைகளை கொடுக்காது என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications