சேப்பங்கிழங்கு இலையின் சத்துக்கள்.. நீரிழிவு நோயாளியின் சஞ்சீவி.. கேன்சரை தடுக்கும், ரத்தம் பெருகும்
சென்னை: அதிக பலன் தரக்கூடிய சேப்பங்கிழங்கு மற்றும் அதன் இலைகளை உணவில் எப்படி சாப்பிடலாம்? பார்ப்பதற்கு இதய வடிவில், அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படும் சேப்பங்கிழங்கு இலைகளிலுள்ள சத்துக்கள் என்னென்ன? நீரிழிவு நோயாளிகளின் சஞ்சீவி என்று இந்த இலைகளை சொல்ல என்ன காரணம்? வளரும் குழந்தைகளுக்கு தரலாமா? இவைகளை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் A, C, E, வைட்டமின் B6 மற்றும் போலேட் (Folate) என்னும் vitamin B-9 அதிக அளவில் உள்ளது.. இவைகளை கூடுதலாக இருப்பது கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள்தான்.. எலும்புகள், பற்கள் உறுதிக்கு உதவுவது இந்த சத்துக்கள்தான்.. அதனால்தான் வளரும் பிள்ளைகளுக்கு சேப்பங்கிழங்கினை வாரம் ஒருமுறையாவது தர வேண்டும் என்பார்கள்.

சேப்பங்கிழங்கில் உள்ள வைட்டமின் A, E , சருமத்தில் சுருக்கங்களை வரவிடாமல் பாதுகாக்கிறது. சேப்பங்கிழங்கில் வைட்டமின் A, E உள்ளதால், சருமத்தில் உள்ள காயங்களையும் விரைவில் குணப்படுத்தக்கூடியது.
சேப்பங்கிழங்கில் உள்ள சத்துக்கள்
சேப்பங்கிழங்கில் வைட்டமின் C, ஆன்டிஆக்ஸிஜென்டுகள் அதிகமாக உள்ளதால், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை அதிகரிக்க செய்கிறது.. இதனால், நோய் எதிர்ப்பு சக்தியும் பெற முடிகிறது. பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள இந்த சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வருபவர்களுக்கு, கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நெருங்குவதில்லையாம்.. பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய்க்கு எதிராகவும் இந்த கிழங்கு பாதுகாப்பதாக மருத்துவ ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன.
நார்ச்சத்து அதிகம் உள்ள கிழங்கு என்பதால், செரிமான கோளாறுகளை நீக்கி, குடல் புண்களையும் ஆற்றுகிறது. வைட்டமின் B உள்ளதால், நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கும், ஆண்மை குறைபாடினில் பாதிக்கப்பட்டுள்ளோருக்கும் சேப்பங்கிழங்கு அருமருந்து என சொல்லலாம்..
சேப்பங்கிழங்கு தண்டுகள்
சேப்பங்கிழங்குகளை போலவே, சேப்பங்கிழங்கின் இலைகள், தண்டுகளிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன,. ஆனால், இதனை புளியுடன்தான் சமைத்து சாப்பிட வேண்டுமாம்.. சேப்பங்கிழங்கு இலைகளை கழுவி சுத்தம் செய்து, தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, அந்த நீரை வடிகட்டிவிட்டு, வேகவைத்த இலைகளை உணவில் சேர்த்து சமைக்கலாம்.
பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதில், இந்த சேப்பங்கிழங்கு இலைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. இந்த இலையில், வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருப்பதால், புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. அதிலும், குடல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவி
சேப்பங்கிழங்கு இலைகளிலிருந்து எடுக்கப்படும் சாறு, உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்தாகிறது.. இந்த இலைச்சாறு, நீரிழிவு நோயாளிகளுக்கு சஞ்சீவி மருந்து என்பார்கள்.. ஏனென்றால், சேப்பங்கிழங்கு இலைச்சாறு குடித்து வருவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு உடனடியாக குறைவதுடன், திடீரென அதிகரிக்கவும் செய்யாதாம்..
நார்ச்சத்து நிறைந்த இந்த சேப்பங்கிழங்கு இலைகளை சமையலில் கடைந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடையும் வெகுவாக குறையும்.. சேப்பங்கிழங்குகளையும் உடல் எடை குறைப்பில் சேர்த்து கொள்ளலாம். ஏனென்றால், சேப்பங்கிழங்கு கொழுப்பு இல்லாதது. குறைந்த கலோரிகள் கொண்டது.
இதனால் எடை குறைப்பிற்கு சிறந்த இயற்கை உணவாக சேப்பங்கிழங்கு இருக்கிறது. ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்கள், சேப்பங்கிழங்கு இலைகளை அடிக்கடி சமைத்து சாப்பிட வேண்டும். பாம்புக்கடி, தேள் கடி போன்றவற்றின் விஷத்தை முறிக்கும் தன்மை, இந்த இலைக்கு உண்டு.












Click it and Unblock the Notifications